அது என்ன 150எம்ஜி வெள்ளை திரவம்? பெண் மருத்துவர் கொலையில் நடந்தது என்ன? டாக்டர் சபரி Decodes
கொல்கத்தா: பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிரடி திருப்பமாக அவரது பிறப்புறுப்பில் அளவுக்கு அதிகமாக வெள்ளை திரவம் படிந்துள்ளது என வெளியான தகவல் குறித்து டாக்டர் சபரி விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 9 ஆம் தேதி கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை மருத்துவர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அடுத்த நாள் இந்த வழக்குத் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருந்திருந்தனர். உடற்கூராய்வு அறிக்கையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த அறிக்கையில் 150எம்ஜி வெள்ளை திரவம் இறந்து போன பெண் டாக்டர் பிறப்புறுப்பிலிருந்ததாக ஒரு தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த வெள்ளை திரவம் விந்தணுதான் எனக்கூறி கொலைக்கு நீதிகேட்டுப் போராடி வரும் மாணவர்கள் ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த 150எம்ஜி என்ன? அது குறித்து டாக்டர் சபரி ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளிக்கையில் சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அவர், “உடற்கூராய்வு செய்யப்பட்ட அறிக்கை அதிகாரப்பூர்வமாக இன்னும் கிடைக்கவில்லை. பலரும் ஊகங்களில் அடிப்படையில் பேசி வருகிறார்கள். உண்மையான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இதுவரை வெளியாகவில்லை. மருத்துவ மாணவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்கள். அதை காவல்துறை மறுத்து வருகிறது. இறந்துபோன மருத்துவ மாணவியின் உடற்கூராய்வு என்பது எங்கே நடக்கவில்லை. அது மாணவர்கள் படித்து வரும் அரசு மருத்துவமனையில்தான் நடந்துள்ளது. சட்ட மருத்துவத்துறை என்ற துறை என்பது 3 ஆம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களின் பாடப் பிரிவில்தான் வரும். அந்த மாணவர்களிடம் சக மாணவர்கள் கேட்டு உடற்கூராய்வு அறிக்கை என்ன சொல்கிறது என்பதைக் கேட்டு அறிந்துகொள்ள முடியும்.
அதை வைத்துத்தான் 150எம்ஜி விந்தணு உடற்கூராய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்ற செய்தி மிக வேகமாகப் பரவியது. அதை காவல்துறை மறுத்துள்ளது. அந்த 150ஜி என்பது இறந்துபோன மருத்துவ மாணவியின் பிறப்புறுப்பின் எடை என்று இப்போது காவல்துறை ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது. ஆனால், மருத்துவ அறிக்கையில், 'Ethnic White Viscous Fluid about 150 mg’ என்ற ஒரு வார்த்தை உள்ளதாகப் போராடும் மருத்துவ மாணவர்கள் சொல்கிறார்கள். ஆக, 150 கிராம் என்பது வேறு, 150மில்லி கிராம் என்பது வேறு. பெண்ணுறுப்பில் 150மிகிராம் வெள்ளை திரவம் படிந்துள்ளதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது என்றால், அது விந்தணுதானே என்று மாணவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அந்த மாணவர்கள் யாரோ கிடையாது. அங்கே படித்து வரும் சக மாணவர்கள். இறந்துபோன அந்தப் பெண் மருத்துவர் 38 மணிநேரம் தொடர்ந்து பணியிலிருந்துள்ளார். வேலை முடிந்து வழக்கமாக அவர் தூங்கப் போகும் இடத்திற்குச் சென்றுள்ளார். அங்கே நோயாளிகள் படுக்கவைக்கப்பட்டிருந்ததால், வேறு அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை வரை அவரைக் காணவில்லை என்று சந்தேகப்பட்டுப் போய் பார்த்துள்ளனர். அங்கே அவர் இறந்து கிடந்துள்ளார்.
உடனே காவல்துறையினருக்குப் புகார் போகிறது. அவர்கள் வந்து பார்த்துவிட்டு, உடனடியாக அது ஒரு தற்கொலை எனச் சொல்லிவிடுகிறார்கள். அந்தப் பெண்ணின் கண்களில் ரத்தம் உறைந்துபோய் இருந்துள்ளது. கால்கள் இரண்டும் விரிந்த நிலையில் விறைத்துப்போய் கிடந்துள்ளது. எனவே மாணவர்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. மாணவர்கள் போராடிய பிறகு அதைத் தற்கொலை என்று அறிவிக்கிறார்கள். மீண்டும் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ளார் என ஒப்புக் கொள்கிறது காவல்துறை. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் சந்தேகம் தரும்படி நடந்து கொள்கிறது காவல்துறை.
இறந்த பெண்ணின் மண்டையில் எந்த காயங்களும் இல்லை. கண்களில் ரத்தக் கசிவு உள்ளது. தொண்டை எலும்பு ஏதேனும் முறிவு உள்ளதா என யோசித்ததில் ஒன்று பிரச்சினை இல்லை. உடல் முழுவதும் கட்டை அல்லது இரும்புக் கம்பு மூலம் தாக்கிய காயங்கள் உள்ளன. பல் கடிகள் உள்ளன. தொடை எலும்பு விலகி இருக்கிறது. இதைத்தாண்டி பெண்ணுறுப்பு கிழிந்துள்ளது. நிறைய கீறல்கள் உள்ளன.
மருத்துவ அறிக்கையில் கற்பழிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே தற்கொலை இல்லை, இது கொலை என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால் பெண்ணுறுப்பில் 150எம்ஜி வெள்ளை திரவம் இருந்தது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தவல்கள் அனைத்து உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் மூலமாக சக மருத்துவ மாணவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
மேலும் காவல்துறை ராய் என்பவரை இந்தக் கொலை தொடர்பாகக் கைது செய்துள்ளது. அவர் 60கிலோ எடை கொண்டவர். இறந்துபோன பெண் மருத்துவர் 55 கிலோ இருப்பார் எனக் கூறப்படுகிறது. இந்த ஒரு நபரால் அந்தப் பெண் மீது இவ்வளவு காயங்களை ஏற்படுத்த முடியுமா? ராய் 50 அடி அடித்திருந்தால், தற்காப்புக்காக இறந்தவர் 5 முறையாவது தாக்கி இருப்பார் இல்லையா?
ஆகவே அதற்கான காயங்கள் ஏன் கைது செய்யப்பட்ட ராய் உடம்பில் இல்லை என்று போராடும் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேற்கொண்டு ஒரு மனிதனிடம் இருந்து எப்படி 150எம்ஜி விந்தணு வெளியேற்ற முடியும்? அறிவியல்ரீதியாக இது எப்படிச் சாத்தியமாகும்? ஆகவே, இது ஒரு கும்பல் வன்புணர்வு தான் என மாணவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்” என்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications