காலையில் கோவையில் கிளம்பினால்.. பிற்பகல் பெங்களூர்.. இடையில் எத்தனை ஸ்டாப்? வந்தே பாரத் ரயில் விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ள நிலையில் கூடுதல் ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. முக்கியமாக கோயம்புத்தூருக்கு கூடுதலாக ஒரு வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை - கோவை இடையே ஏற்கனவே வந்தே பாரத் ரயில் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் அடுத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு இடையே விரைவில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 30ம் தேதி இந்த ரயில் தொடங்கப்பட உள்ளது.

முக்கிய விவரம்: இந்த ரயில் தொடர்பான முக்கியமான விவரங்கள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் - பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
🔸நிறுத்தங்கள் : திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி & ஓசூர்
🔸காலம் : 5 மணி 40 நிமிடங்கள்
🔸கோயம்புத்தூரில் இருந்து அதிகாலை புறப்பட்டு பெங்களூரில் இருந்து மதியம் சென்றடையும். பெங்களூரில் மதியம் புறப்பட்டு கோவைக்கு முன்னிரவு வந்து சேரும்;.
வந்தே பாரத் ரயில்கள்: வந்தே பாரத் சேவைகள்: தமிழ்நாட்டிற்கு அடுத்தடுத்து வந்தே பாரத் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு உள் மாநில வந்தே பாரத் சேவை உள்ளது. அதாவது சென்னை - கோவை இடையே உள்ளது. மாநிலத்திற்கு வெளியே ஒரு வந்தே பாரத் சேவை உள்ளது. சென்னை - பெங்களூர் - மைசூர் வரை உள்ளது. இது போக மாநிலத்திற்கு உள்ளே மேலும் ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது.
வாராந்திர ரயில்கள்: தென்னக ரயில்வே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் வாராந்திர சிறப்புகளை (8 கார்) சோதனை அடிப்படையில் இயக்கி வருகிறது/ பெரும்பாலும் பின்வரும் வழித்தடங்களில் தற்காலிகமாக புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
1. சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் செவ்வாய்க்கிழமைகளில்,
2. சென்னை சென்ட்ரல் - மைசூர் - சென்னை சென்ட்ரல் புதன்கிழமைகளில்,
3. சென்னை எழும்பூர் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் வியாழக்கிழமைகளில்,
4. சென்னை சென்ட்ரல் - கோட்டயம் - சென்னை சென்ட்ரல் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் / சனி மற்றும் திங்கட்கிழமைகளில் திரும்ப,
5. வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரம் சென்ட்ரல் - காசர்கோடு - திருவனந்தபுரம் சென்ட்ரல்.
புதிய சேவை: இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை - திருநெல்வேலி இடையே புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதற்கான பரிந்துரை முன்னதாக தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டது. 8 மணி நேரத்தில் சென்னை டூ நெல்லை செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
டிக்கெட்: இந்த ரயில் 8 பெட்டிகளை கொண்டது. 8 மணி நேரம் பயணிக்கும். ஒரு டிக்கெட் சென்னை டூ திருநெல்வேலி ரூ.1620 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி சொகுசு வகுப்பு 3205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 120- 140 கிமீ வேகத்தில் இந்த ரயில் செல்லும். 660 கிலோ மீட்டர் தூரத்தை சரியாக 8 மணி நேரம் 2 நிமிடத்தில் கடக்கும். காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வரும்.
இன்னொரு பக்கம் சென்னையில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலி வரும். இதுதான் ரயில் சேவையின் நேரம்.
நிறுத்தங்கள்: இந்த ரயில் எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக சென்று திருநெல்வேலி அடையும்.
மேல்கட்ட நிறுத்தங்களில் எல்லாம் இந்த ரயில் நிற்கும். இது போக கூடுதலாக ஒரு 1-2 நிறுத்தங்களில் நிற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஜங்ஷன் அல்லாத மற்ற பெரிய ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிற்கும் வாய்ப்புள்ளது (ஆனால் முதல் பயணத்தில் இல்லை) என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என்கிறார்கள்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications