இறக்கும் தருவாயில் கூட பிஜிலி ரமேஷ் செய்த காரியம்! நிறைவேறாத ஆசையுடன் பிரிந்தது உயிர்!
சென்னை: எல்லாரையும் சிரிக்க வைத்துவிட்டு இன்று அழ வைத்த காமெடியன் பிஜிலி ரமேஷ் இறக்கும் தருவாயில் கூட அவர் செய்த ஒரு ஆக்ஷன் இருக்கே, கண்களில் நீர் வழிகிறது! அந்தளவுக்கு அவர் மக்கள் மனதில் இடம் பெற்றுவிட்டார். அவரது கடைசி ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இதுகுறித்து அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எப்போது வேண்டுமானாலும் நிற்கும் குதிரை என டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். நான் உயிர் பிழைக்க முடியாது. ஆனால் நான் இறப்பதற்குள் ரூ 10 லட்சம் சம்பாதித்துக் கொடுத்தால் அதை வைத்து வங்கியில் டெபாசிட் செய்தோ இல்லை லீஸுக்கு வீடு எடுத்தோ அவர்கள் வாடகை செலவில்லாமல் பிழைப்பார்கள்.

என் மகனை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு இருக்கிறது. ஆனால் என்னால் சாப்பிட முடியவில்லை. நடக்கவே முடியவில்லை. வயிற்றிலிருந்து திரவம் கசிகிறது. அதனால் தண்ணீரும் அதிகமாக குடிக்க முடியாது.
இப்போது கூட நான் ஷூட்டிங்கிற்கு கூப்பிட்டால் போக ரெடியாக இருக்கிறேன். ஆனால் "பிஜிலிக்கு உடல்நிலை பாதிப்பு இருக்கிறது. அவரை அழைக்க வேண்டாம்" என சொல்லும் கூட்டம் இருக்கிறது. ஒருத்தரை பின்னால் இழுத்துத்தான் மற்றவர்கள் முன்னேறுவர்.அப்படிப்பட்ட காலம் இது.
எனக்கு ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது முடியாமல் போய்விட்டது. லால் சலாமில் கிடைக்கும் என்றார்கள், ஆனால் அதை கூட யாரோ தட்டி பறித்துவிட்டார்கள். இவ்வாறு கூறிய பிஜிலி ரமேஷ் கடைசியாக பேட்டியின் முடிவில் பாபா முத்திரையை காண்பித்தார். அந்த அளவுக்கு பிஜிலி ரமேஷ், ரஜினிகாந்தின் தீவிர ரசிகராவார்.
நடக்க முடியாமல் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 9 மாதங்களாக பிஜிலி ரமேஷ் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், நண்பர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமடைந்த பிஜிலி ரமேஷ், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். பிளாக் ஷீப் யூடியூப் சேனலின் பிராங்க வீடியோ மூலமாக பிரபலமடைந்தவர் ரமேஷ். இவர் ஹிப் ஹாப் ஆதி நடித்த நட்பே துணை படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அது போல் கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications