பிளானே வேற.. சசிகலாவுக்கு பறந்த "அந்த" கண்டிஷன்.. கூல் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி: அனலடிக்கும் அதிமுக
எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதாம்
சென்னை: விரைவில் அதிமுகவில் நல்ல விஷயம் நடக்கலாம் என்கிறார்கள்.. காரணம், அதற்கான முயற்சிகளில் சசிகலா - அதிமுக தரப்பு இறங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சசிகலா என்ற பேரை கேட்டாலே ஆவேசமானவர்கள் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மாஜிக்கள்தான்.
எடப்பாடி பழனிசாமி சசிகலா பற்றி பேசுகிறாரோ இல்லையோ, இவர்கள் மட்டும் சசிகலாவை அதிக அளவு விமர்சித்து கொண்டே இருந்தனர்.. இப்போது இந்த மாஜிக்கள் அத்தனை பேரும் கப்சிப் என்று சைலண்ட் மோடுக்கு சென்று விட்டதாக தெரிகிறது.

5 மாஜிக்கள்
அதிலும் எடப்பாடி ஆதரவாளராக கருதப்படும் வேலுமணி கூட, சசிகலா பற்றி வாய் திறக்காமல் உள்ளார்.. ஜெயிலுக்கு போய் வந்ததில் இருந்தே ஜெயக்குமார் ஆப் ஆகி உள்ள நிலையில், இதையெல்லாம் கேள்விப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியில் இருக்கிறார் என்றும் செய்திகள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், எடப்பாடி விஷயத்தில் தொடர்ந்து பொறுமை காத்து வரும் சசிகலா, யாரெல்லாம் எடப்பாடி மீது அதிருப்தியில் வருத்தத்தில் உள்ளார்களோ, அவர்களை நேரில் பார்த்து பேசி தன் பக்கம் இழுத்து வர ஒரு ரகசிய டீமையும் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்ஸை பொருத்தவரை பிரச்சனையே இல்லை, அவர் எப்போது வேண்டுமானாலும் சசிகலா பக்கம் வந்துவிடக்கூடும் என்றாலும், எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு ஆதரவு தருவதுதான் மிக முக்கியமான விஷயமாக அதிமுக வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.. காரணம், அதிமுகவுக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வியால் சசிகலாவை கட்சியில் இணைத்து ஒற்றைத் தலைமையை உருவாக்கினால் தான் கட்சி பலமாகும், அந்த நடவடிக்கையை இப்போதே துவக்கி, அது சாத்தியமானால் தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலை தைரியமாக எதிர்கொள்ளமுடியும். இல்லையேல், கட்சி கரைந்து விடும் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளின் போர்க்குரலாக வெடித்துள்ளது.

சசி தரப்பு
அதிலும் இந்த குரல் தேனி மாவட்ட அதிமுகவில் பகிரங்கமாகவே எதிரொலித்தன... சசிகலா, தினகரன் இரு தரப்பும் உற்சாகமானார்கள். ஆனால், தேனி மாவட்ட அரசியலை தனது சாதுர்யத்தால் முறியடித்தார் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும் தனது முயற்சியில் தளராத விக்கிரமாதித்யன் மாதிரி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்களிடம் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது சசி தரப்பு. அப்படி தங்களை தேடி வரும் சசி தரப்பை இதுவரை மாஜிக்கள் தரப்பு தவிர்க்கவிலை..

எடப்பாடி பழனிசாமி
மாறாக, எடப்பாடி குறித்த சில விஷயங்களை எடுத்து சொல்லி உள்ளது.. சசிகலாவை ஏற்பதில் அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்தும் விரிவாக பேசியுள்ளது.. குறிப்பாக, "சசிகலா மேடத்தை ஏற்றுக் கொள்வதில் எடப்பாடி பழனிச்சாமி உள்பட யாருக்கும் எந்த தயக்கமும் கிடையாது. ஆனா, அவரை சேர்த்துக்கொண்டால் தினகரன் உள்ளிட்ட அவரது குடும்ப வகையறாக்கள் முழுவதும் கட்சிக்குள் வந்துவிடுவார்கள். இனி ஒருமுறை சசி குடும்பத்தினரிடம் கூனிகுறுகி நிற்க கட்சி தலைவர்கள் யாருக்குமே விருப்பம் கிடையாது. அதனால், மேடத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

ஒரே ஒரு கண்டிஷன்
ஆனால் ஒரே ஒரு நிபந்தனை... என் குடும்ப உறுப்பினர்கள் யாரும் என்னுடன் வரமாட்டார்கள். அவர்களை எந்த சூழலிலும் கட்சிக்கு கொண்டு வரமாட்டேன் என்று அம்மா (ஜெயலலிதா) சமாதியில் சசிகலா சத்தியம் செய்து தரவேண்டும். அந்த சத்தியத்தை செய்ய சசிகலா தயார் என்றால், எடப்பாடி உள்பட எல்லா தலைவர்களிடமும் பேசுகிறோம்" என்று நிபந்தனை விதித்துள்ளனர்.. இதைக் கேட்ட சசி தரப்பு ஆட்கள், "சரி, சின்னம்மாவிடம் இது பற்றி பேசுகிறோம்" என்று சொல்லிவிட்டு சென்றுள்ளனராம்.

சசிகலா - தினகரன்
அதிமுக தரப்பில் போட்ட இந்த கண்டிஷன் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.. அதிமுகவின் ஒட்டுமொத்த முடிவுக்காக காத்திருக்கிறேன் என்று தினகரன் சொல்லி 4 நாள் ஆகிறது.. ஆனால், தினகரனையே வேண்டாம் என்ற உறுதியில் அதிமுக உள்ளது.. ஆரம்பத்தில் இருந்தே தினகரனை அதிமுக மேலிடம் விரும்பவில்லை என்றாலும் இப்போதும் அந்த முடிவில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அதேசமயம், சசிகலாவை பொறுத்தவரை, அதிமுகவுக்காக தினகரனையே தூக்கி போட்டுவிட்டு, வந்துவிடுவார் என்கிறார்கள்..
Recommended Video

தினகரன்
காரணம், சசிகலாவுக்கு அதிமுகதான் முக்கியம், கட்சியை காப்பாற்றுவதுதான் லட்சியம்.. அதற்காகத்தான் அமமுகவின் தலைமை பொறுப்பையும் சசிகலா ஏற்கவில்லை, தினகரனுக்காக எந்த தேர்தலுக்கும் பிரச்சாரம் செய்யவில்லை, அமமுகவுக்காக வாக்குகளையும் அவர் கோரவில்லை.. மாறாக, கட்சியை கலைக்கும்படி தினகரனுக்குத்தான் சசிகலா அட்வைஸ் செய்திருக்கிறார்.. இதனால் சசி - தினகரன் இடையே விரிசல் அதிகமாகி உள்ளது. எனவே, கட்சிக்காக தினகரனை சசிகலா கைகழுவ தயாராவார் என்று அதிமுக தரப்பில் சொல்கிறார்கள்.. ஆக மொத்தம் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருப்பதால், விரைவில் கிளைமாக்ஸ் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications