2 மேட்டர்கள்.. அமித்ஷா பேனரை கவனிச்சீங்களா.. வந்தாச்சு பிரச்சனை.. ஹைகோர்ட் போட்ட போடு.. கப்சிப் பாஜக
அமித்ஷாவை வரவேற்க வைத்த பேனர்கள் தொடர்பாக ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வந்துபோனபிறகு, அதையொட்டிய விவகாரங்களும், சர்ச்சைகளும் தலைதூக்கின.. கடைசியில் ஹைகோர்ட் வரை விவகாரம் சென்று, இன்று அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது..!
4 நாட்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வந்து சென்றார்.. கடந்த 24-ம் தேதி புதுச்சேரிக்கு வந்திருந்த அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்புதான் 2 வகையான பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது.. அமித்ஷாவை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்களில், குற்றப்பின்னணியுடையவர்களின் போட்டோக்களும் இடம்பெற்றிருந்தது, அம்மாநில மக்களைப் பதற்றமடைய வைத்துவிட்டது.

அமித்ஷாவுக்கு பேனர்
புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டமும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிலை ஆணையும் அமலில் இருக்கின்றன... ஆனால் அதையும் மீறி புதுச்சேரிக்கு வந்திருந்த அமைச்சர் அமித்ஷாவுக்காக நகர் முழுவதும் சுமார் 2,500 பேனர்களும், ராட்சத அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.. அந்த பேனர்கள் எல்லாமே பிரதான சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அகற்றுங்கள்
அதிலும், 100 அடி சாலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு ராட்சத வளைவு சரிந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த 70 வயது பாட்டி தலையில், டமார் என விழுந்துவிட்டது.. பாட்டிக்கு தலையில் பலமாக அடிபட்டுவிட்டது.. 9 தையல்களும் போடப்பட்டன.. தடைச் சட்டத்தை மீறி வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் சுந்தர் என்பவர் பொதுப்பணித்துறை ஆபீசில் புகாரளிக்க போனார்.. ஆனால் திடீரென அங்கே நுழைந்த பாஜகவினர் சுந்தரையும் போட்டு தாக்கினார்கள்.. அந்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தந்தது.

பாட்டி தலையில் அடி
இதற்கு பிறகு அடுத்த சிக்கல் தொடங்கியது.. புதுச்சேரியில் உள்ள கரிக்கலாம்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெகனாதன், ஹைகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.. அதில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 24 ம் தேதி புதுச்சேரிக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான சட்டவிரோதமாக பேனர்கள் நகரம் முழுவதும் வைக்கப்பட்டது.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வைக்கப்பட்ட சட்டவிட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஏற்கனவே நகராட்சியிடம் அளிக்கப்பட்ட புகாரில் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று தன்னுடைய மனுவில் தெரிவித்திருந்தார்.

கலாச்சாரம்
இந்த வழக்குதான் இன்று விசாரணைக்கு வந்தது.. தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் ஞானசேகரன் ஆஜராகி, புதுச்சேரியில் பேனர் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்... புதுச்சேரி நகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக வாதிட்டார்.

பரபரப்பு உத்தரவு
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சட்டவிரோத பேனர்களை வைத்தவர்களிடமே, அதை அகற்றியதற்கான செலவை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.. ஆக மொத்தம் அமித்ஷா வந்து போனது ஒருநாள் என்றாலும், அது தொடர்பான அதிர்வலைகள் புதுச்சேரியில் இன்னும் அடங்கவேயில்லை..!
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications