அருவி மாதிரி! ஷிவம் துபே மேல தப்பே இல்லை.. சிஎஸ்கே தோல்விக்கு காரணமே வேற.. களத்தில் நடந்தது என்ன?
சென்னை: நேற்று லக்னோ அணிக்கு எதிரான டி 20 போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைவதற்கு பின் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது.
2022 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகிறது. ஜடேஜா கேப்டன் ஆன பின் இதுவரை சிஎஸ்கே அணி வெற்றிபெறவில்லை.
முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது. அதன்பின் நேற்று லக்னோ அணியிடம் சிஎஸ்கே தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே பேட்டிங்
நேற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவரில் 210-7 ரன்கள் எடுத்தது. முக்கியமாக சிஎஸ்கே அணியில் உத்தப்பா 50, மொயின் அலி 35, ஷிவம் துபே 49, ராயுடு 27, ஜடேஜா 17, தோனி 16 என்று நேற்று சிஎஸ்கே அணிக்காக இறங்கிய எல்லோரும் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். அதிலும் தோனி முதல் பந்திலேயே சிக்சர், அடுத்த பந்திலேயே பவுண்டரி என்று காட்டு அடி அடித்தார்.

லக்னோ பேட்டிங்
அதன்பின் இறங்கிய லக்னோ தோல்வி அடையும், திணறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட அணியில் அந்த அணியும் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. 19.3 ஓவரிலேயே அந்த அணி 211-4 ரன்களை எடுத்து வென்றது. டி காக் 61, கே எல் ராகுல் 40, எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். கடைசிவரை அதிரடியாக ஆடிய லீவிஸ் 55 ரன்கள் எடுத்து லக்னோ அணியை வெற்றிபெற வைத்தார்.

தொடக்கத்திலேயே அதிரடி
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணியிலும் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டினார்கள். நேற்றைய நாள் ஆட்டம் பவுலர்களுக்கான ஆட்டமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். கண்டிப்பாக இந்த போட்டி 200+ ஸ்கோர் ஆட்டமாக இருக்கும் என்றுதான் தொடக்கத்திலேயே கணிக்கப்பட்டது. அதிலும் சிஎஸ்கே டாஸ் தோல்வி அடைந்ததும் கேப்டன் ஜடேஜாவே.. முதலில் பவுலிங் போடலாம் என்றுதான் நினைத்தோம். முடிந்தவரை அதிக ஸ்கோரை அடிக்க முயற்சி செய்வோம் என்று ஜடேஜாவும் குறிப்பிட்டு இருந்தார்.

பனி - கேட்ச் விட்டனர்
நேற்று பவுலர்கள் மிக மோசமாக திணறியதற்கு காரணம் மைதானம் முழுக்க பனி இருந்ததுதான் காரணம். எதிர்பார்த்ததை விட மைதானத்தில் பனி அதிகம் இருந்தது. பிட்சில் லேசாக பந்து பட்டாலே பந்து அப்படியே ஈரமாகும் நிலைதான் நேற்று மைதானத்தில் காணப்பட்டது. இதனால் பவுலர்களுக்கு பெரிதாக கிரிப் கிடைக்கவில்லை. ஸ்பின் பவுலர்கள் பந்தை பிடிக்க முடியவில்லை. ஏன் இரண்டு அணியிலும் நேற்று தலா 2 கேட்ச்கள் விடப்பட்டது.

புதிய பவுலர் முடியாது
நேற்று பீல்டிங் சொதப்பவும் பந்து ஈரமாக இருந்ததும் முக்கியமான காரணம் ஆகும். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தோல்வி அடைய ஷிவம் துபே போட்ட 19வது ஓவர்தான் காரணம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அந்த ஓவரில் மட்டுமே துபே மொத்தம் 25 ரன்கள் கொடுத்தார். அதில் 2 விக்கெட் கொடுத்து இருக்கிறார். நேற்று பிட்ச் மோசமாக இருந்ததும் துபே இப்படி மோசமான ஓவரை வீச காரணம் ஆகும்.

தவறான முடிவு
19வது ஓவர் போட ஆள் இல்லை என்பதால் புதிய பவுலரை இறக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு இருந்தது. அப்போது ஷிவம் துபே களமிறக்கப்பட்டார். சுமாரான பவுலர் என்றாலும் சிஎஸ்கே அணிக்கு வேறு வழி இல்லை. அந்த நேரத்தில் யாராக இருந்தாலும் இதேபோல் அதிக ரன்களை வீசி இருக்கவே வாய்ப்பு அதிகம். அந்த அளவிற்கு பிட்ச் மோசமாக இருந்தது.

அருவி மாதிரி இருந்தது
இதைத்தான் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங்கும் குறிப்பிட்டு இருந்தார். சிஎஸ்கே அணிக்கு ஆட்டம் எந்த நேரத்திலும் சாதகமாக இல்லை. பிட்ச் நயாகரா அருவி போல இருந்ததுதான் உண்மை. பந்தை பவுலர்களால் சரியாக பிடிக்க முடியவில்லை. பந்தில் கிரிப் கிடைக்கவில்லை. போட்டியை ஒரு ஓவர்தான் மாற்ற போகிறது என்று எங்களுக்கு தெரியும். அதையும் அவர்களும் கணித்து இருப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு சாதகமாக சென்றுள்ளது என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது பேட்டிங்
இந்த சீசனில் பெரும்பாலும் இரண்டாம் பேட்டிங் பிடிக்கும் அணியே வெற்றிபெறுகிறது. இதற்கு காரணம் மைதானத்தில் காணப்படும் பனி. இதனால் பந்து மோசமாக ஈரமாகி பவுலர்கள் பந்தை கிரிப் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. நேற்று துபேவிற்கும் இதுதான் நடந்தது. சிஎஸ்கே அணியின் தோல்விக்கும் இதுவே முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications