"புலி பதுங்குவது பாய்வதற்கு தான்" விராட் கோலி அமைதி காப்பது ஏன்? இந்திய அணியின் திட்டம் என்ன?
சென்னை: இந்திய நட்சத்திர வீரர் பேட்ஸ்மேன் விராட் கோலி அதிக எச்சரிக்கையுடன் விளையாடி, எதிரில் ஆடும் வீரருக்கு ஸ்ட்ரைக்கை கொடுப்பது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி வருகின்றன. இதற்கான காரணம் பற்றி பார்க்கலாம்.
சுமார் 1,020 நாட்களுக்கு பின் ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன் விராட் கோலி சதத்தை விளாசியதன் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளார். இதனால் விராட் கோலி பங்கேற்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் அவரது ஆட்டம் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. அதற்கேற்ப விராட் கோலியும், சிக்சரும், பவுண்டரியுமாய் அசத்தி வருகிறார்.
ஆசியக் கோப்பை தொடரில் இருந்து கணக்கிட்டால் விராட் கோலியின் சராசரி 57.7 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 141.7 ஆகவும் உள்ளது. இது சாதாரண சராசரி அல்ல என்பது கணக்கிடும் போதுதான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. ஏனென்றால் விராட் கோலி ஆடுகளத்தில் பழைய பாணியில் ராட்ச்ச பாணியில் ரன்களை விளாசுவதில்லை.

எச்சரிக்கையாக விளையாடும் கோலி
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பீஸ்ட் மோடில் ரன்கள் சேர்ப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் நிலைத்து நின்று சீராக ரன்களை சேர்த்து வருகிறார். ஆனால் அவருக்கு எதிர்புறத்தில் நின்று ஆடும் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் உடனடியாக அதிரடி ஆட்டங்களை வெளிப்படுத்தி சிக்சர்களாக விளாசுகின்றனர்.

என்ன காரணம்?
ஆனால் விராட் கோலி சிக்சர்கள் அடிக்க அபார திறன் இருந்தும் எச்சரிக்கையாக சிங்கிள் தட்டி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அதிக பந்துகளை எதிர்கொள்ள கொடுக்கிறார். இதற்கான காரணம், விராட் கோலி இன்னும் முழுமையாக ஃபார்மிற்கு வரவில்லை என்பதோ, விராட் கோலி திணறுகிறார் என்பதோ அல்ல.

இந்திய அணியின் திட்டம்
இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா கேப்டனானதில் இருந்து அணியில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. விராட் கோலிக்கான திட்டம் அவர் களமிறங்கியது முதல் 20 ஓவர்களும் களத்தில் நின்று விளையாட வேண்டும் என்பது தான்.

டி20 உலகக்கோப்பை
அதற்கு காரணமும் விராட் கோலியின் திறன் தான். விராட் கோலியால் எந்த பந்துவீச்சாளரின் பந்தையும், எந்த சூழலிலும் தேவைக்கேற்ப அடிக்க முடியும். இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட்டுகள் சரியும் போது, விராட் கோலி களத்தில் நின்று ஒற்றை ஆளாய் ஆட்டத்தை மாற்றிவிடுவார். அதனால் தான் கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தொடக்கம் முதலே ரன்களை அதிரடியாக சேர்க்க முயற்சிக்கின்றனர்.

பதுங்கி இருக்கும் புலி
அதுதான் அவர்களுக்கான திட்டம். அவர்கள் விரைவாக ஆட்டமிழந்தால் ஹர்திக் - விராட் கோலி தேவைக்கேற்ப விளையாடுவார்கள். விராட் கோலி என்னும் புலி பாய்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. பாய்வதற்கான நேரம் வரும் போது, மீண்டும் விராய் கோலியின் பீஸ்ட் வெளிவரும். அப்போது களத்தில் ஆக்ரோஷத்தோடு ஆட்டம் போட்ட விராட் கோலியை ரசிகர்கள் மீண்டும் பார்ப்பார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications