"நாம் தமிழர் + இளைஞர்கள்".. சட்டசபை தேர்தலில் அதிமுக தோற்க காரணம் என்ன? கே.சி.வீரமணி புது தகவல்
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கு என்ன காரணம் என்பது புதிதாக ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார் அந்த கட்சியை சேர்ந்த சீனியர் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய அதிமுக செயல் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில், முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளர் கேசி வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதை பாருங்கள்:

கிராமங்களில் ஓட்டு இல்லை
ஜோலார்பேட்டை சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட நான் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறுவேன் என்று தேர்தலுக்கு முன்பாக கணிக்கப்பட்டது. ஆனால் நான் தோல்வி அடைந்துள்ளேன். ஒரு சில பகுதிகளில் அதிமுகவுக்கு வாக்குகள் கிடைத்த போதிலும் கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை.

நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு
இதற்கு முக்கியமான காரணம் நாம் இளைஞர்களை உதாசீனப்படுத்தி விட்டோம் என்பதுதான். ஜோலார்பேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அதற்கு முன்பாக யார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் அந்தக் கட்சி வேட்பாளருக்கு 13,000 வாக்குகள் கிடைத்துள்ளன. இதில் பெரும்பான்மை ஓட்டுக்கள் இளைஞர்களுடைய வாக்குகள். அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய இளைஞர்கள் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சிக்கு போய் விட்டது.

இளைஞர்கள் அரவணைப்பு
இளைஞர்களை அரவணைத்துச் செல்லாததால் நாம் தமிழர் கட்சிக்கு சென்றிருக்கிறது. மக்கள் என்னை தோற்கடித்ததாக கருதவில்லை. அதிமுக கட்சி நிர்வாகிகளால் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி திமுகவினர் ஆட்சிக்கு வந்து விட்டனர் . ஆனால் விரலை வைத்து எண்ண முடியாத அளவுக்கு ஏகப்பட்ட நல்ல திட்டங்களை செயல்படுத்திய அதிமுக மறுபடி ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது நம்மிடையே ஒற்றுமை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

உள்ளாட்சி தேர்தல்
நாம் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று பலரும் அலட்சியமாக இருந்தது இந்த தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம். இனிமேல் வரும் காலங்களில் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் எப்போது முதல் முழுமையாக பாடுபட வேண்டும். இவ்வாறு பேசி வீரமணி பேசினார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications