நடிகை சிந்து மரணத்துக்கு இதான் காரணமா? தயாரிப்பாளர் பகிர்ந்த ஷாக் நியூஸ் - நீங்களும் கவனமா இருங்க
சென்னை: பிரபல துணை நடிகை அங்காடித் தெரு சிந்து நேற்று காலமான செய்தி பலரை சோகமடைய செய்து இருக்கும் நிலையில் அவரது மரணத்துக்கான பரபரப்பு காரணத்தை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார் திரைப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி.
வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் அங்காடித் தெரு. இதில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சிந்து. ஏராளமான சீரியல்களில் நடித்திருந்தாலும், அங்காடித் தெரு சிந்து என்பதே இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது. இந்த நிலையில் இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்பக வலி ஏற்பட்டது.

ஆனால், அவர் அதை தொடக்கத்திலேயே பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துகொண்டு இருந்தார். இந்த நிலையில்தான், அவருக்கு அந்த இடத்தில் தண்ணீர் கசியத் தொடங்கியது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்று அவர் பரிசோதித்து உள்ளார்.
அப்போதுதான் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து ஒரு பக்கம் மார்பு அகற்றப்பட்ட நிலையில், காயங்கள் ஆறாமல் அவர் அவதிப்பட்டார். பல்வேறு வகை மருத்துவங்களை முயற்சித்து பார்த்தும் அவருக்கு பயன் கிடைக்கவில்லை.
தொடர்ந்து புற்றுநோயின் தாக்கம் குறையாமல் 3 ஆண்டுகளாக அவர் அதோடு போராடி வந்தார். அவரது ஒரு பக்க கை செயழிலந்து இருக்கிறது. அண்மையில் அவரது மற்றொரு மார்பகத்தை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். சினிமா துறையினர் தனக்கு உதவி செய்ய வேண்டும், தன் மகளுக்கு தமிழக அரசு வேலை தர வேண்டும் எனவும அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நடிகர் சிந்து உயிரிழந்தார். அவரது மரணம் சினிமா துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திரைப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே கோபி ட்விட்டரில் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தார்.
அதில், "எனது நீண்ட நாள் நண்பர் நடிகை அங்காடி தெரு திருமதி. சிந்து அவர்கள் காலமான செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். உடல் எடையை குறைக்க அவர் செய்த ஆப்ரேஷன் தான் இன்று அவரை இந்தளவுக்கு கொண்டு சென்று கடைசியில் உயிரையே பறித்துவிட்டது. கவனம் மக்களே.
திருமதி. சிந்து அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிந்துவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிராத்திக்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications