சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜுலை 11 பொதுக்குழு 2.0! முன்னரே போடப்பட்ட பக்கா பிளான்! இதுதான் காரணமா?பரபர பின்னணி! உற்சாக இபிஎஸ்!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில் இந்த தேதி முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

    EPS, OPS ஒரே மேடையில்! பரபரப்பான ADMK பொதுக்குழு | *Politics | OneIndia Tamil

    பெரும் சர்ச்சைக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்ததை தொடர்ந்து ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது.''

     தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம் தமிழகத்தை சில்லென மாற்றும் வானிலை! அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்காம்.. சென்னை வானிலை மையம்

    இதனால் இன்றைய பொதுக்குழுவில் 23 தீர்மானங்களில் சிலவற்றை மட்டும் நிறைவேற்றி மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி தலைமையிலான தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    ஆனால் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்த்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழுகூட்டத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனையே பெரும்பாலான நிர்வாகிகள் கூறியிருந்தனர்.

    தேதி அறிவிப்பு

    தேதி அறிவிப்பு

    பின்னர் பேசிய சி.வி.சண்முகம், இரட்டை தலைமையால் அதிமுக தீவிரமாக செயல்பட முடியவில்லை. வலிமையான, வீரியமான ஒற்றைத் தலைமை வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை நடப்பு பொதுக்குழுவிலே தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் .இதையடுத்து மேடையில் உரையாற்றிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.

    முன்னரே முடிவு

    முன்னரே முடிவு

    இந்நிலையில் சி.வி.சண்முகம் சொன்ன அடுத்த நிமிடமே பொதுக்குழு தேதியை அதைவிட குறிப்பாக காலை 9.15 மணி என தெளிவாகக் கூறினார். இதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டபடிதான் எல்லாம் நடந்திருக்கிறது எனவும், ஏற்கனவே எடப்பாடி தரப்பு கூறியதையே அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் சொல்லியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜுலை 11ஆம் தேதி பொதுக்குழுவோடு பொதுச் செயலாளராக பதவியேற்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது.

    என்ன காரணம்?

    என்ன காரணம்?

    இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு முன்னதாகவே அவரது வீட்டில் யாகம் நடைபெற்றது. எதிரிகளை அழித்து வெற்றி பெறுவதற்காக நடத்தப்பட்ட இந்த யாகம் பொதுக்குழு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை நடந்து இருக்கிறது. அப்போது அவரது ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் இன்று நேரடி வெற்றி கிடைக்காவிட்டாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் கிடைக்கும். ஜூலை மாதம் பதினோராம் தேதி பொதுக்குழுவை நடத்தினால் யாகத்தின் பலன்களோடு எடப்பாடியின் ஜாதகத்தின் அடிப்படையில் முழு வெற்றி கிடைக்கும் என கூறியிருக்கின்றனர். இதையடுத்தே எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 11ம் தேதியை தேர்வு செய்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

    English summary
    AIADMK leader Tamilmagan Hussain has announced that the next general body meeting will be held on July 11 This date was pre-selected and information has been leaked as to why.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X