சென்னை கிளாம்பாக்கத்தில் பிரச்சனையே வேற..பெருங்களத்தூரை தாண்ட முடியாது? ஊர் மக்கள் சொல்வது என்ன?
சென்னை: சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழைக்கே சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே, ஜி.எஸ்.டி. சாலையில் மழை நீர் 2 அடிக்கு மேல் தேங்கி ஆறு போல் ஓடியது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி ஊர் மக்கள் சொல்வது என்ன என்பதை பார்ப்போம்.
சென்னை புறநகர் பகுதியான வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நேற்ற முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலை வெள்ளக்காடாக மாறியது.

ஆகஸ்ட் 14ம்தேதியான அன்று பலரும் சொந்த ஊருக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார்கள். ஆனால் அவர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு பயணம் இருந்தது. ஜிஎஸ்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கி ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததால், சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் தண்ணீரில் ஊர்ந்து மெதுவாகவே சென்றன.
கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிளால் ஆறு போல் பெருகெடுத்து ஓடிய மழை நீரில் செல்ல முடியவில்லை. இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மொத்தமாக முடங்கியது. ஆம்புலஸ் உள்பட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. மிகமோசமான நரக வேதனையை சென்னைவாசிகள் ஆகஸ்ட் 14 தேதி அனுபவித்தனர்.
சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் பாதிக்கப்பட்டனர். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் தான் ஜிஎஸ்டி சாலையில் மிக மோசமான நெரிசல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக முதியவர் ஒருவர் கூறுகையில், ஜிஎஸ்டி சாலையில் போதுமான அளவிற்கு தண்ணீர் போக வழி செய்யவில்லை.. ஒரே இடத்தில் மட்டுமே வடிகால் கட்டியுள்ளனர்.ஒவ்வொரு இடத்திலும் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். அப்படி வடிகால்கள் கட்டி வேகமாக தண்ணீர் வெளியேறினால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பால் ஆம்புலன்ஸ் வர முடியவில்லை.. கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகிறார்கள்.பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தண்ணீர் போவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கிளம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசலை நேரில்பார்த்தவர் கூறும் போது, "முதலில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும், வண்டலூர் காஞ்சிபுரம் மெயின்ரோட்டிலும், மீஞ்சூர் வண்டலூர் மெயின் ரோட்டிலும், ஓஎம்ஆர் கேளம்பாக்கம் மெயின் ரோட்டை கனக்ட் செய்யக்கூடிய வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு ஆகிவற்றுக்கு ஜங்சனே கிளம்பாக்கம் ஓட்டேரி வண்டலூர் தான்.. ஒரு நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான வண்டிகள் பயணிக்கக்கூடிய இடம் இது.. 2 மணி நேரம் பெய்த மழையால், ஏறக்குறைய ஆறுமணி நேரத்திற்கு மேல் டிராபிக் ஆகிவிட்டது.

அதில் இரண்டு ஆம்புலன்ஸ், இந்த வழியிலும், எதிர் வழியிலும் மாட்டிக் கொண்டது. அப்போது ஒரு கார் சிக்கி கொண்டது. அதனை தள்ளிவிட்டு ஆம்புலன்சுக்கும் வழிவிட முயற்சித்த போது முடியவில்லை.. பக்கத்து கிராமத்தில் தெரிந்த பசங்களை வரவழைத்து, ரோட்டினை கிளியர் செய்துஊருக்குள் இருக்கும் வழியில் ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு செல்ல இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது.
ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பெய்த மழைக்கே இந்த நிலைமை என்றால், பருவ கால மழை வேற வருகிறது. எனவேஇடைப்பட்ட காலத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்து பக்கத்தில் கிளாம்பாக்கம் ஏரி, வண்டலூர் ஏரி, ஆகிய இரண்டு பெரிய ஏரிகளுக்கும் நீர் வழித்தடங்களை திருப்பிவிட்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு அரசாங்கம் உடனடியாக வேலை செய்ய வேண்டும். ஏனெனில் ஒவ்வொவரும் வண்டியை அந்த டிராபிக்கில் பெட்ரோல் இல்லாமல் நிறுத்திவிட்டு பெரும் சிரமத்தை சந்தித்தனர். அரசு உடனடி தீர்வை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications