தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவீதம் அளவு.. என்ன விளைவு ஏற்படும்?
சென்னை: நாட்டின் தேசிய சராசரியை விட மக்கள் தொகை பிறப்பு விகிதம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 2024ம் ஆண்டில் வெறும் 8.50 லட்சம் குழந்தைகள் தான் பிறந்துள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11 சதவீதம் அளவிற்கு சரிந்துள்ளது. பிறப்பு விகிதம் வெறும் ஆறு ஆண்டுகளில் 11 சதவீதம் சரிந்திருப்பதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாத அளவிற்கு நிலைமை உள்ளது. ஏனெனில் பிறப்பு விகிதம் சரிவு என்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பது தான் பலரது கவலை.
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது 0.92 சதவீதமாக உள்ளது. ஆனால் இதில் பீகார் (1.98 சதவீதம்), உத்தரபிரதேசம் (1.70 சதவீதம்), மேகாலயா (1.5 சதவீதம்) , மத்திய பிரதேசம் (1.49 சதவீதம்) ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியை விட மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதேநேரம் மகாராஷ்டிராவில் 0.71 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 0.78 சதவீதமும் மக்கள் தொகை வளர்ச்சி இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியா நிலவரம் இப்படி என்றால், தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி கடும் சரிவினை சந்தித்துள்ளது. தென்மாநிலங்களில் பிறப்பு விகிதம் தேசிய சராசரியை விட மிக குறைவாக உள்ளது.

கேரளாவில் மக்கள் தொகை 0.22 சதவீதமும் ஆந்திராவில் 0.61 சதவீதமும், கர்நாடகாவில் 0.68 சதவீதமும், தெலுங்கானாவில் 0.74 சதவீதமாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வெறும் 0.30 சதவீதம் மட்டுமே மக்கள் தொகை வளர்ச்சி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேராளவிற்கு அடுத்தபடியாக மக்கள் தொகை வளர்ச்சி குறைவாக உள்ள தென்னிந்திய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் பேர் இருந்தபோது எடுக்கப்பட்ட கணிப்பின் படி, தேசிய அளவில் மக்கள் தொகையில் தமிழகம் 7-வது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பிறப்பு விகிதம் மிக வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 701 குழந்தைகள் பிறந்துள்ளன. 2020-ம் ஆண்டு 939783 குழந்தைகள் பிறந்தன. ஆனால் 2021-ம் ஆண்டில் 912864 குழந்தைகள் மட்டும் பிறந்தன. 2022-ம் ஆண்டில் சற்று அதிகமாகி 936367 குழந்தைகள் பிறந்தன. 2023-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 306 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால் 2024-ம் ஆண்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லா 8 லட்சத்து 41 ஆயிரத்து 821 குழந்தைகள் மட்டுமே பிறந்து உள்ளன. வாக்காளர்கள் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் பெண்கள் எண்ணிக்கையே அதிகமாகும். கடந்த 2024 ஆண்டை 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.
2024 ஆண்டை 2023 ஆண்டுடன் ஒப்பிட்டால் 60 ஆயிரத்து 485 குழந்தை பிறப்புகள் குறைந்துள்ளது. இது 6.71 சதவீத சரிவு ஆகும்.
பிறப்பு விகிதம் வெறும் ஆறு ஆண்டுகளில் 11 சதவீதம் சரிந்துள்ளது.தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருவதால் பின்னாளில் தமிழகம் முதியவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக உருவெடுக்கும். அதேபோல் பிறப்பு விகிதம் சரியாக இல்லை என்றால், பாலின விகிதாசாரத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு வரும். திருமணத்திற்கு பெண் அல்லது ஆண் கிடைப்பது சவாலாக மாறும். ஆண் குழந்தைகள் பிறப்பு என்பது தமிழகத்தில் பெரிய அளவில் சரிந்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்களர்களே அதிகம் ஆகும்.
இதுபற்றி கருத்த தெரிவித்த அதிகாரிகள், தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டனர். பொதுவாக மருத்துவமனைகளில் பிறப்பை பதிவு செய்ய 10 நாட்கள் வரை எடுத்து கொள்வார்கள். தற்போதைய கணக்கின் அடிப்படையில் இன்னும் சில குழந்தைகள் அதில் பதிவாவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இறுதி பட்டியலில் சில ஆயிரம் கூடலாம் என்றாலும், 2024ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு கடந்த ஆறு ஆண்டுகளை ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications