ட்விஸ்ட்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஆதரவு கேட்ட எடப்பாடி.. நிராகரித்த ஏ.சி.சண்முகம்! என்ன சொன்னர்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை தான் எப்போதும் பாஜக பக்கமே இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு இறங்கியுள்ளனர்.
கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், மீண்டும் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல்
அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலை திமுக முக்கியமானதாகக் கருதுகிறது. அங்குத் தேர்தலுக்கு திமுக சார்பில் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை அடங்கிய தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.

அதிமுக கூட்டணி
அதேநேரம் அதிமுக கூட்டணியில் இருந்து இன்னும் வேட்பாளர் யார் என்பதிலேயே தெளிவு இல்லை. கொங்கு மண்டலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. கடந்த முறை இங்குப் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக போட்டியிடச் சம்மதம் தெரிவித்த போதிலும், இன்னும் அங்குத் தெளிவான முடிவு கிடைக்கவில்லை.. பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிடுமா அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருமா என்று தெளிவாகத் தெரியவில்லை. பாஜகவின் நிலைப்பாட்டை இன்னும் ஓரிரு நாட்களில் அண்ணாமலை அறிவிப்பார் என்று தெரிகிறது.

ஏ.சி.சண்முகம்
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் நிர்வாகிகள் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அதன்படி இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல் இந்திரா உள்ளிட்டோர் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்தனர். புதிய நீதிக்கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுகவுக்கே ஏ.சி.சண்முகம் ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாஜக பக்கம்
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்திருந்த கோரிக்கை ஏ.சி.சண்முகம் நிராகரித்துள்ளார். பாஜக இருக்கும் பக்கமே தான் இருப்பேன் என்று தெரிவித்த ஏ.சி. சண்முகம், பாஜக எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்தார். மேலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நல்ல முடிவை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைப்பேசியில் பேசினார்.. அதிமுக நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்துப் பேசினார்கள்.

விரைவில் நல்ல முடிவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து விவாதித்தோம்.. அதிமுக தமிழ்நாட்டில் பெரிய இயக்கமாக உருவாக்கி உள்ள ஒரு இயக்கம். அங்கு இப்போது இக்கட்டான ஒரு சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும்.. கடந்த 2014இல் வேலூர் மக்களவை தொகுதியில் நான் பாஜக சின்னத்தில் போட்டியிட்டுள்ளேன்.. 2014 முதலே நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருந்து வருகிறோம்.. தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிப்போம்.. பாஜகவுடன் இணைந்து செயல்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நல்ல சுமுகமான முடிவு வரும்..

தேர்தல் களம்
தேர்தல் களத்தில் என்ன நடக்கும் எனச் சொல்ல முடியாது.. ஆளும் கட்சியும் தோற்றுள்ளன.. வெற்றி, தோல்வி என்பது தொகுதி நிலவரம், கூட்டணிக் கட்சி எனப் பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் 7000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வென்றார்கள். எனவே, இந்த முறை கூட்டணி நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார். அதேநேரம் ஓபிஎஸுக்கு ஆதரவா அல்லது எடப்பாடிக்கு ஆதரவா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதில் தரவில்லை.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்?












Click it and Unblock the Notifications