ஒரு மணிநேரத்துக்கு இத்தனை லட்சமா? விஜய் பயன்படுத்தும் தனி விமானத்தின் கட்டணம் எவ்வளவு பாருங்க! அடேங்கப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதற்காக அவர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்திறங்கினார். இந்நிலையில் தான் விஜய் பயன்படுத்தும் தனி விமானத்துக்கான கட்டணம் குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

நடிகராக இருந்து அரசியலில் ‛என்ட்ரி' கொடுத்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். கரூரில் நடந்த விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து பிரசாரத்தை தற்காலிகமாக விஜய் நிறுத்தினார்.

what-was-the-cost-of-actor-vijay-using-private-jet-details-here

தற்போது மீண்டும் அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். அதன்படி நேற்று முன்தினம் விஜய் ஈரோடு விஜயமங்கலத்தில் மக்கள் சந்திப்பு பிரசார பொதுக்கூட்டத்தை நடத்தினார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்பாட்டில் இந்த பிரசார கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த பிரசாரத்தில் வழக்கம்போல் விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னதாக ஈரோடு பிரசாரத்துக்காக விஜய் சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார். பிறகு கோவையில் இருந்து ஈரோடுக்கு காரில் சென்றார். அதேபோல் பிரசாரம் முடிந்த பிறகு விஜய் ஈரோட்டில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் தான் விஜய் பயன்படுத்தி வரும் தனி விமானத்துக்கான கட்டணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக விஜய் சமீபத்திய அரசியல் பிரசார பயணங்களுக்கு VT-PCR - Gulfstream G200 ரக தனி விமானத்தை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி வந்தார். ஆனால் ஈரோடு பயணத்தின்போது அவர் VT-RFX என்ற தனி விமானத்தை பயன்படுத்தினார். இதில் மொத்தம் 3 வகைகள் உள்ளன. விமானத்தின் இருக்கை, எடை உள்ளிட்டவற்றை பொறுத்து இது மாறுபடும்.

‛டர்போபிராப்ஸ்' (Turboprop ) எனும் பேசிக் ரக விமானத்திற்கு பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ஹெவி ஜெட் விமான மாடலுக்கு மணிக்கு ரூ. 13.5 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் விஜய் பயணித்த விமானத்தின் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டலாம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+