Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த பக்கம் ஜம்ப்.." ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து.. தனுஷ் அடுத்து என்ன செய்யப்போகிறார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 18 வருட வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனது 16 ஆவது வயது முதல் நடித்து வரும் நடிகர் தனுஷ் இன்று ஹாலிவுட் வரை தனது தடத்தை பதித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவரது திறமை என ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினிகாந்தின் மருமகன் என்ற ஒரு அந்தஸ்தும் அவரை ஜொலிக்க வைத்ததாகவே சொல்லப்படுகிறது.

22 வயது வரை ஏதோ சிறிய அளவில் நடித்து வந்த தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தவுடன் அந்த ஸ்டார் வெளிச்சத்தால் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ்

மனைவி ஐஸ்வர்யா தனுஷ் தயாரிப்பில் வெளியான 3 படத்திலிருந்தே இவர்களது வாழ்க்கையில் புகைச்சல் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. எனினும் இருவரும் சுமூகமாகவே வாழ்க்கையை நடத்தி வந்தனர். தனுஷுடன் பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்தது. பல நடிகைகளின் திருமண முறிவு நிகழ்ந்ததற்கு தனுஷும் ஒரு காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் தனுஷுக்கு இன்னொரு நடிகையுடன் நெருக்கம் ஏற்பட்டதை ஐஸ்வர்யாவுக்கு தெரியவரவே கடந்த சில தினங்களாகவே இருவருக்கும் இடையே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இதன் நீட்சியாகத்தான் இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடலாம் என முடிவு செய்து சமூகவலைதளங்களில் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. 18 ஆண்டுகள் கழித்து இவர்கள் விவாகரத்து செய்வதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனுஷின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா வீட்டில் மூத்த மகன் செல்வ ராகவன்- சோனியா அகர்வால் இடையேயான திருமண முறிவு ஏற்பட்டு பின்னர் அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் செட்டிலாகிவிட்டார்.

யாரையும் திருமணம் செய்யாமல்

யாரையும் திருமணம் செய்யாமல்

தனுஷ் தற்போது பிரிந்துவிட்டார். அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நெருக்கம் காட்டி வரும் நடிகையையே திருமணம் செய்து கொள்வாரா, இல்லை வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்வாரா, இல்லை யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளம் தலைமுறையினர்

இளம் தலைமுறையினர்

இன்னொன்று தனுஷுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளங்களில் 95 சதவீதம் பேர் இளம் தலைமுறையினர் ஆவார். தலைவனை பார்த்துதான் அவரது பின் தொடர்பாளர்கள் கற்றுக் கொள்வார்கள். அது போல் தனுஷின் இந்த முடிவு இளம் தலைமுறையினருக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா என்ற கேள்வியும் எழுகிறது. எப்போதும் ரசிகர்களுக்கு மதிப்பளிப்பது தனுஷிற்கு இருக்கும் ஒரு குணமாகும். எனவே ரசிகர்களை அழைத்து பேசுவாரா? இப்போதே ரஜினி ரசிகர்கள் தனுஷை ட்விட்டரிலிருந்து அன்ஃபாலோ செய்ய தொடங்கிவிட்டார்கள்.

Recommended Video

    Dhanush & Aishwarya Announced their Separation | தலைவர் வருந்தபடுவார்!!
    அடுத்தது என்ன தனுஷ்

    அடுத்தது என்ன தனுஷ்

    தனுஷுக்கு பட வாய்ப்புகளில் ஏதேனும் பிரச்சினை இருக்குமா? இனி பட வாய்ப்புகள் எப்படியிருக்கும்? இனி வரும் படவாய்ப்புகளை பொருத்துதான் அது ரஜினி மருமகன் என்பதற்கான அங்கீகாரமா இல்லை தனுஷின் திறமைக்கான மரியாதையா என்பது தெரியவரும். சமீபத்தில்தான் அட்ராங்கி ரே என்ற நேரடி ஹிந்தி படத்தில் தனுஷ் நடித்தார். தற்போது தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படம் நடித்து வரும் தனுஷ் இனி, வடக்கே செட்டிலாகிவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+