சரவெடி கொளுத்த ரெடியாகும் முதல்வர் ஸ்டாலின்! ஆளுநர் vs அரசு.. சுப்ரீம் கோர்ட் அதிரடியால் உற்சாகம்!
சென்னை: "மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் வகையிலும், இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் 'Speaking 4 India' என்ற தலைப்பில் ஆடியோ சீரிஸ் வெளியிட்டு வருகிறார். அதன்படி, முதல்வர் ஸ்டாலின் பேசிய முதல் பாட்காஸ்ட் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியானது. அதில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக, மத உணர்வுகளைத் தூண்டி குளிர்காயப் பார்க்கிறது என விமர்சித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேசுகிறார்: செப்டம்பர் 23ஆம் தேதி வெளியான இரண்டாவது எபிசோடில், சி.ஏ.ஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த பாஜகவின் ஏழு மெகா ஊழல்களைப் பற்றிப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அக்டோபர் 31ஆம் தேதி வெளியான மூன்றாவது எபிசோடில், மாநில சுயாட்சிக்கான இன்றைய தேவை குறித்தும், 5 மாநில வாக்காளப் பெருமக்களுக்குக் கோரிக்கை விடுத்தும் பேசி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினின் 'இந்தியாவுக்கான குரல்' பாட்காஸ்ட் சீரிஸின் நான்காவது எபிசோட் விரைவில் வெளியாக உள்ளது. இதில் எந்த விஷயத்தை முதன்மைப்படுத்தி ஸ்டாலின் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அடுத்த எபிசோடில் தான் பேசப்போகும் விஷயம் பற்றி எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அடுத்த எபிசோடில் பேசும் விஷயம்: முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், "மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" - மாண்பமை உச்சநீதிமன்றம். அடுத்த #Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்.." எனக் குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், வெளியிட்டுள்ள பதிவை பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு ஆளுநருக்கும் பொருந்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு புரியவில்லை என்றால் வழக்கறிஞர் மூலம் விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு: பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், எந்த காரணமும் இல்லாமல் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று வெறுமனே அறிவிப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை முடக்குவது, அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது, மசோதாக்களை நிராகரித்தால் அவற்றை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்ப வேண்டும், எந்த மசோதாவையும் நிலுவையில் வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துக்கே உண்மையான அதிகாரம் உள்ளது. ஆளுநர் என்பவர் அடையாள தலைவர் மட்டுமே. தேர்ந்தெடுக்கப்படாத மாநிலத் தலைவரான ஆளுநருக்கு சில அரசியலமைப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், மாநில சட்டமன்றங்களால் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தடுக்க ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என தெளிவாகக் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
பஞ்சாப் ஆளுநர் தொடர்புடைய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு, தமிழக ஆளுநர் vs மாநில அரசு தொடர்புடைய வழக்கிலும் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. இது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடியாக அமையலாம் என்ற பேச்சுகள் உள்ள சூழலில், தனது அடுத்த பாட்காஸ்ட் எபிஸோடில், மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு பற்றி பேசுவதாக கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications