விசிக - திமுக கூட்டணி உடைந்து.. அதிமுகவுடன் கூட்டணி உருவானால் என்னாகும்? நம்பர்ஸ் சொல்வது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் திமுக - விசிக இடையே லேசான கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ள நிலையில், ஒருவேளை திமுக- விசிக கூட்டணி உடைந்து விசிக - அதிமுக கூட்டணி உருவானால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் வாக்கு வங்கி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை, பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரும் வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து அவரின் உடன் நேற்று திருவள்ளூரில் அடக்கம் செய்யப்பட்டது.

கோபம் அடைந்த விசிக: இந்த விவகாரத்தில் திருமா மிகவும் காட்டமாக பேசி உள்ளார். அதில், ‛நான் என் அன்பு இளவலை இழந்துள்ளேன். ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. கடும் கண்டனத்துக்குரியது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஜனநாயக சக்திகள் கண்டித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக தலைவர்கள் கண்டித்துள்ளனர். 17 ஆண்டுகளாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்களை நேசித்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அம்பேத்கரின் கொள்கைகள், அரசியலமைப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள். சாமானியன் முதல் தவைர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. தலைவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது அரசின் கடமை, காவல்துறையின் கடமையாகும். இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்; வரும் காலத்தில் இதுபோன்று நடக்க கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை கோழைத்தனமானது. அவரது கொலையில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது தான் உண்மை என்று கூறி உள்ளார்.
கூட்டணி முறியுமா?: கூட்டணி முறிவா?: இந்த நிலையில்தான் திமுக - விசிக இடையே உள்ள இந்த விரிசல் காரணமாக கூட்டணி உடையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி கூட்டணி முறிந்தால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை திமுக- விசிக கூட்டணி உடைந்து விசிக - அதிமுக கூட்டணி உருவானால் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களின் வாக்கு வங்கி எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விசிகவிற்கு தலித் வாக்குகள் கிடைப்பதால் அந்த வாக்குகள் அப்படியே திமுகவிற்கு செல்கிறது. அது அதிமுகவிற்கு செல்லும் என்று சிலர் கூறுகின்றனர்.
2016 சட்டசபை தேர்தல் அடிப்படையில் விசிகவின் அதிகாரபூர்வ தனிப்பட்ட வாக்குகள் 0.8 சதவிகிதம்தான். திமுகவிற்கு தலித் வாக்குகள் வட தமிழ்நாட்டில் கிடைக்க காரணம், பாமக எதிர்ப்பு வாக்குகள். விசிக உடன் வைத்து இருக்கும் கூட்டணி இந்த தலித் வாக்குகள் திமுகவிற்கு கூடுதலாக வர ஒரு காரணமாக உள்ளது.
அப்படி இருக்க விசிக இந்த வாக்கு சதவிகிதத்துடன் 4 எம்எல்ஏக்கள் , 2 எம்பிக்களை சொந்த சின்னத்தில் பெறும் அளவிற்கு வளர்ந்து உள்ளது. அப்படி இருக்க விசிக முதலில் இந்த வெற்றி கூட்டணியை முறிக்காது. இரண்டு எம்பிக்கள், 4 எம்எல்ஏக்கள் கொடுத்த கூட்டணியை விசிக உடைக்க வாய்ப்பே இருக்காது.
விசிக திமுக கூட்டணியை ஒருவேளை முறித்தால் கூட தலித் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விசிக - அதிமுக கூட்டணி உருவானால் அந்த வாக்குகள் அப்படியே அதிமுகவிற்கு டிரான்ஸ்பர் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் அதிமுக இப்போதும் பாமகவுடன் நெருக்கமாக உள்ளது. அப்படி இருக்க விசிக அதிமுகவுடன் செல்லுமா அப்படியே சென்றாலும் விசிகவின் வாக்குகள் அதிமுகவிற்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications