ஸ்டாலின் அடுத்த முடிவு? யாரந்த தலை? திமுகவையே கவனிக்குது பாஜக.. இப்ப இதுவேற? இருக்கு கச்சேரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிகப்பெரிய மாற்றம் விரைவில் திமுகவுக்குள் ஏற்படும் என்கிறார்கள்.. இது சில சீனியர் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு கலக்கத்தை தந்துள்ளது.

தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக அமைச்சர்கள், திமுக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபடி இருக்கிறார்கள்.

When are changes going to happen in DMK and Will CM MK Stalin take action against DMK senior ministers

அப்போது தன்னை சந்தித்தவர்களிடம் வெற்றி வாய்ப்பு எப்படி ? வாக்கு வித்தியாசம் எவ்வளவு வரும் ? எதிர்க்கட்சியினருக்கு டெபாசிட் போகுமா? என்றெல்லாம் விசாரிக்கிறார் ஸ்டாலின்.

அமைச்சர்கள்: அனைவருமே 200 % நமக்குத்தான் வெற்றி, 40-க்கு 40-ம் ஜெயிப்போம் என்று சொல்லியிருக்கிறாராம்.. அதேபோல, உளவுத்துறையும், சபரீசனின் "பென்" அமைப்பும் தந்திருந்த ஃபைனல் ரிப்போர்ட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையிலும் அமைச்சர்களிடம் கேள்வி கேட்கிறார் ஸ்டாலின். அப்போது சில அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல், சுத்தி வளைத்து பதில் சொல்லி சமாளித்தார்களாம்.

அவர்களிடம் ஸ்டாலின், "முன்னாடியே நான் சொன்னதுதான்... வெற்றி வாய்ப்போ, வித்தியாசமோ குறைந்தால் சீரியசாக நடவடிக்கை எடுப்பேன். மன்னித்து விட்டுவிடுவேனென்று மட்டும் நினைத்து விடாதீர்கள் " என்று கூறி வருகிறாராம்.. இதுபோக, ஜூன் 4-ந்தேதி தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் உதயநிதி வலியுறுத்தியிருக்கிறாராம்.

மாவட்ட செயலாளர்கள்: எனவே, தேர்தலிலும் அமைச்சர் பணியிலும் ஃபெர்மான்ஸ் குறைவாக இருந்த அமைச்சர்களிடமிருந்து மா.செ.பதவிகளும் பறிக்கப்படலாம். அதாவது அமைச்சர் பதவியா ? அல்லது மாவட்ட செயலாளர்? இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்ளுங்கள் என கறாராக சொல்லிவிட்டு, அதன்படி ஆக்ஷன் எடுக்கவும் தலைவர் (ஸ்டாலின்) தயாராகி வருகிறாராம்.

அதுமட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று முதல்வரிடமும் ஏற்கனவே தரப்பட்டுள்ளதாம்.. இதைத்தவிர, திமுகவுக்கு சொந்தமான தேர்தல் வியூக நிறுவனமும் ஒரு சர்வே எடுத்து வழங்கியிருக்கிறது.. இவைகளிலும், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழு திருப்தி: ஆனாலும், முதல்வர் இந்த விஷயத்தில் இன்னும் முழு திருப்தி அடையவில்லையாம்.. காரணம் கடந்த 2019 தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்களோ அதைவிட இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறாராம்.. இதற்கு காரணம் திமுகவில் உள்ள சீனியர் வேட்பாளர்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த முறை தேர்தலின்போதும், வசதியான சீனியர் வேட்பாளர்கள் பலர் நிறுத்தப்பட்டனர்.. ஆனால், முழுமையாக பணத்தை செலவழிக்காமல், கட்சிக்காரர்களையே செலவழிக்க வைத்துவிட்டார்களாம்.. இதனால், திமுக நிர்வாகிகளே, சில சீனியர் வேட்பாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்..

ரிப்போர்ட்: தேர்தலுக்கே இவர் பணம் செலவழிக்காதபோது, ஜெயித்த பிறகு நமக்கு என்ன செய்துவிட போகிறார்? என்று விரக்தி மனநிலைமைக்கு போய்விட்டார்களாம் திமுக வேட்பாளர்கள்.. இவையெல்லாம் முதல்வர் காதுக்கு சென்றுவிட்டதாம். அதனால்தான், எந்த ரிப்போர்ட் குறித்தும் ஒருமுடிவுக்கு வராமல், தேர்தல் முடிவு வரட்டும் அதன் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று பொறுமையாக இருக்கிறாராம்..

ஏற்கனவே தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் அறிக்கை தயாரித்து மேலிடத்துக்கு வழங்கி உள்ளார்கள்.. அந்த ரிப்போர்ட்டில், அதில் யார்-யார் சரிவர பணியாற்றவில்லை? யார்-யார் முழுநேரமாக அர்ப்பணிப்புடன் வேலைபார்த்தார்கள் என்ற முழு விவரமும் தரப்பட்டுள்ளதாம்.

எகிறும் ஆர்வம்: மொத்தத்தில், 2019-ஐபோலவே, திமுகவுக்கு லீடிங் அதிகமாக இருக்காது என்றே சொல்லி உள்ளார்களாம்.. அதனால், எங்கெல்லாம் ஓட்டுப்பதிவு குறைகிறதோ, சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் திமுகவில் ஏற்பட்டிருக்கிறதாம்.. அதனால், ரிசல்ட் வந்ததுமே, மிகப்பெரிய மாற்றம் திமுகவில் இருக்கும் என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!

அதைவிட முக்கியமாக, அமைச்சரவையை மாற்றும்படி உதயநிதி வலியுறுத்திவருவதால், ரிசல்ட்டுக்கு பிறகு, சில முக்கிய அமைச்சர்களின் துறையும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.. மாவட்ட செயலாளர்களுக்கு பதிலாக, இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரலாம் என்கிறார்கள்.. மொத்தத்தில், மீண்டும் "புதுரத்தம்" பாய்ச்ச தயாராகி கொண்டிருக்கிறதாம் திமுக.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+