பிஞ்சிலேயே பழுத்த "மைனர் ஜோடி".. அந்த பொண்ணுக்கு 16 வயசுகூட ஆகல.. மரணத் தருவாயிலும் நபரின் "அபாண்டம்"
சென்னை: கோயம்பேட்டில் காதலனுக்கு விஷம் வைத்து சிறுமி ஒருவர் கொன்றுவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்த காரணம் வெளியே தெரியவந்துள்ளது.. அத்துடன், நடந்தது என்ன என்ற சம்பவமும் அம்பலமாகி உள்ளது.
அந்த சிறுமி சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்.. எந்நேரமும் இன்ஸ்டாவிலேயே நேரத்தை கழித்து வந்துள்ளார்.. அப்போது, இளைஞர் ஒருவருடன் அறிமுகமாகி உள்ளது.
அந்த இளைஞருக்கு 18 வயது கூட ஆகவில்லை.. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்.. 2 பேருமே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில், நாளடைவில் அது காதலாக மாறியது.

மைனர்கள்: 2 பேருமே மைனர்கள் என்பதால், தங்கள் வீடுகளில் காதலை பற்றி சொல்லாமல், கடந்த 2020-ம் ஆண்டு 2 பேருமே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் மகளிர் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில், சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர்... அவர் மைனர் என்பதால், கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர்.
பிறகு, அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.. இப்போது அந்த இளைஞருக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டது.. திருப்போரூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.. அப்போதுகூட, அந்த சிறுமியை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.. ஜாமீனில் வெளியே வந்தபிறகும்கூட, அந்த சிறுமியை தேடிப்பிடித்து, மறுபடியும் அவருடன் தொடர்பு கொண்டுள்ளார்.. மறுபடியும் 2 பேருக்கும் காதல் தொடர்ந்து.. முன்பைவிட இப்போது அதிதீவிரமாகிவிட்டது இந்த காதல்.. அதனால், அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர்.
அப்படித்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் 2 பேரும் சந்தித்து பேசி கொண்டிருந்தார்கள்.. ஆனால், அதற்குள் இந்த விஷயம் சிறுமியின் குடும்பத்துக்கு தெரிந்துவிடவும், அவர்கள் கோயம்பேட்டுக்கே விரைந்துவந்து, இளைஞரை அங்கேயே அடித்து உதைத்தனர்.. இனிமேல் தங்கள் மகளுடன் பேசக்கூடாது என்று இளைஞரை எச்சரித்துவிட்டு, மகளையும் தங்களோடு அழைத்து சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்துபோன இளைஞர், விஷம் குடித்துவிட்டார்.. உயிருக்கு போராடினார்..

போஸ்ட்மார்ட்டம்: இந்த தகவல் கிடைத்ததுமே, கோயம்பேடு போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டது.. டாக்டர்கள் போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.. கடந்த 14-ந்தேதி அந்த இளைஞர் இறந்துவிட்டார்.. இதையடுத்து போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்து இளைஞரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சையில் இருந்தபோதே பரபரப்பான வாக்குமூலம் தந்திருந்தார்..
அதில் தன்னுடைய காதலி, விஷம் கொடுத்து தன்னை கொலை செய்து விட்டதாக பரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இளைஞர் சொல்வது உண்மைதானா? என்பதை கண்டுபிடிக்க களமிறங்கினர்.. எனவே, விஷம் கொடுத்ததாக கூறப்பட்ட இடத்துக்கு நேரிலேயே சென்று, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தனர்.. அப்போது இளைஞர் பொய்யான வாக்குமூலத்தை அளித்திருப்பது உறுதியானது..
பழிக்குப்பழி: அதுமட்டுமல்லாமல், காதலி மீது பழி போடும் எண்ணத்துடன் அந்த இளைஞர் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து அந்த சிறுமி இப்போது தப்பியிருக்கிறார்.. அறியாத பருவத்தில் ஏற்படும் காதல், விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் பெரிய சாட்சியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.. கேரளாவில் காதலனுக்கு விஷம் வைத்து காதலி கொன்ற சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டுபண்ணிய நிலையில், அதேபாணியிலான கொலைப்பழியை, சிறுமி மீது இளைஞர் திணிக்க முயன்றுள்ள சம்பவம் கடும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications