Diwali 2025: தீபாவளி பண்டிகை எப்போது? அக்.20 அல்லது 21 ஆ? அமாவாசை திதி எந்த நேரத்தில் பிறக்கிறது?
சென்னை: இந்தியாவில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 20 ஆம் தேதியா இல்லை 21 ஆம் தேதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தீப ஒளி திருநாளாகவும் இது கொண்டாடப்படுவதால் வட இந்தியாவில் விளக்குகளை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள்.

தீபாவளி என்றால் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள்தான் பிரதானம். நரகாசுரன் என்ற அரக்கனை அழித்த தினமே தீபாவளி திருநாளாகும். இருளை நீக்கி ஒளியை கொடுக்கும் பண்டிகையாகும். இது அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து நவம்பர் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் முதன்முதலாக கி.பி.15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை எப்போது கொண்டாடப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது அக்டோபர் 20 ஆ அல்லது 21 ஆ என்ற சந்தேகம்தான். அமாவாசையன்று தீபாவளி கொண்டாடுவோர் இருக்கிறார்கள்.
அது போல் அமாவாசைக்கு முந்தைய நாளில் காலையில் எழுந்து தலையில் எண்ணெய், சீயக்காய் வைத்து கங்கை நீரில் குளிப்பது வழக்கம். அன்றைய தினம் அசைவம் செய்து சாப்பிடுவார்கள். அடுத்த நாள் அமாவாசை நோன்பு அன்று வீடு, வாசலை சுத்தம் செய்து கேதார கவுரி நோன்பு எடுப்பார்கள். அன்றைய தினம் அமாவாசை இருப்போர் 5 இலை போட்டு படையலிடுவார்கள். இல்லாவிட்டால் நோன்புடன் நிறுத்திக் கொள்வார்கள்.
சில காலண்டர்களில் 20, 21 ஆகிய இரு நாட்களிலும் அமாவாசை என போட்டுள்ளதால் மக்களுக்கு குழப்பம். அதாவது 20ஆம் தேதி அமாவாசை திதி பிற்பகல் 3.44 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 5.54 மணிக்கு முடிகிறது. எனவே தீபாவளி நோன்பு எடுப்பவர்கள் இந்த நேரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications