இதுதான் அண்ணாமலை.. தாமரை நிஜமா விரிந்திடும் போலயே.. இப்பவே மூக்கு மேல விரல் வைத்த தமிழ்நாடு.. பலே
சென்னை: எம்பி தேர்தல் ரிசல்ட்டே இன்னும் வரவில்லை.. அதற்குள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிகொண்டிருக்கிறாராம் அண்ணாமலை.. இதுகுறித்த பிரத்யேகமான தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
நடந்து முடிந்த எம்பி தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே களப்பணியில் இறங்கிவிட்டன. ஆனால், தமிழக பாஜக மட்டும் 2 வருடங்களுக்கு முன்பேயே, இதற்கான ஆயத்த பணியில் இறங்கியது.. அந்தவகையில், மதுரையில் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தி திராவிட கட்சிகளுக்கே டஃப் தந்திருந்தார் அண்ணாமலை.

பிரச்சாரம்: இப்போது தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் பலரும் வட மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுக்க வட மாநிலங்களுக்கு தாவியிருக்கிறார்கள்.
தென்சென்னை யில் போட்டியிட்ட தமிழிசை சௌந்திரராஜன், தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.. தெலுங்கானாவின் ரயில், பஸ் பயனிகளிடமும், மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்க வரும் பெண்களிடமும் வாக்கு சேகரித்து வருகிறார் தமிழிசை... அதே போல, நெல்லையில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், உத்தரபிரதேசத்துக்கு சென்றுள்ளார். கேரளாவில் பிரச்சாரம் செய்த அண்ணாமலை, இந்த வாரம் இறுதியில் மேற்கு வங்கம், தெலுங்கானா, உ.பி. மாநிலங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.
கோவை பாஜக கூட்டம்: இதற்கிடையே, கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகளை அழைத்து நேற்றைய தினம் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார் அண்ணாமலை, தேர்தல் பணி செய்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், சில முக்கிய அறிவுரைகளையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
குறிப்பாக, "சட்டமன்ற தேர்தலுக்கு 500 நாட்கள் தான் இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே நாம் திட்டமிட வேண்டும்.. தயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக, வட மாநிலங்களுக்கு சென்று பாஜகவிற்கான வாக்கு சேகரிப்பு பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.
நுணுக்கம்: வட மாநிலங்களில் தேர்தல் பணிகள், வெற்றிக்கான வியூகம், களத்தில் பணியாற்றுவது உள்ளிட்டவைகளை அங்குள்ள பாஜகவினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் சட்டமன்ற தேர்தலுக்கு உங்களுக்கு பலனளிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு கிடைத்த தகவல்களின்படி பூத் கமிட்டி நம்மிடம் பலகீனமாக இருக்கிறது. அதனால், பூத் கமிட்டியை வலிமைப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார் அண்ணாமலை.
இந்த நிலையில், திமுக, அதிமுக பாணியில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் கட்சியினரை அழைத்து அக்கட்சிகளின் தலைவர்கள் வெற்றி நிலவரத்தை ஆராய்ந்தது போலவே, பாஜக பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் விசாரிப்பதற்காக நேற்று நடத்த அண்ணாமலை திட்டமிடப்பட்டிருந்தது..
தேர்தல் பணிமனை: திடீரென்று ரத்து செய்யப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தை இந்த வாரமே நடத்தவும் திட்டமிட்டிருக்கிறாராம் அண்ணாமலை.. இந்த கூட்டத்தை பாஜக தலைமையகத்தில் நடத்தலாமா? அல்லது தேர்தலை எதிர்கொள்வதற்காக சென்னை அயனாவரம் பகுதியில் உருவாக்கப்பட்ட மாநில தேர்தல் பணி மனையில் நடத்தலாமா? என்று ஆலோசிக்கிறாராம் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவரின் இந்த வேகத்தை, மற்ற அனைத்து கட்சியினருமே கூர்ந்து கவனித்து வருகிறார்களாம்..!!












Click it and Unblock the Notifications