கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000.. எப்போது வரை மேல்முறையீடு செய்ய முடியும்? கடைசி தேதி இதுதான்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 பெறுவதற்கு எப்போது வரை மேல்முறையீடு செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறிந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது ஆகும் இந்த திட்டம்.
கடந்த மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் வங்கிகள் விடுமுறை என்பதால் 15ம் தேதிக்கு பதிலாக 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.

மேல்முறையீடு திட்டம்: இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கூறுகையில், தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டமும். தேவையுள்ள ஒருவர்கூட விடுபடாமல் தகுதியான பயனாளிகளைச் சென்றுசேர வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு அதிக அக்கறையுடன் செயல்பட்டுவருகிறது. அதுபோலவே. கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கும் தருதியான பயனாளிகளைக் கண்டறிவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1.53 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 1.06 கோடி தகுதியான பயலாளிகள் தெரிவு செய்யப்பட்டு. அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் தவணையாக மொத்தம் ரூபாய் 10,55.21,98,000/- அவர்களின் வங்கிக் கணக்கின் வாயிலாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் அரசின் நலத்திட்ட நிதி வரவு வைக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும், என்று அறிவித்துள்ளனர்.
மேல்முறையீடு செய்ய அவகாசம் என்ன?: அதன்படி கடந்த மாதம் 18ம் தேதியில் இருந்து மேல்முறையீடு செய்வதற்கான அவகாசம் தொடங்கியது. அதில் இருந்து நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு வெவ்வேறு நாளில் அதற்கான மெசேஜ் சென்றது. இந்த மெசேஜ் சென்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இந்த திட்டத்திற்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதாவது 18ம் தேதி மெசேஜ் வந்தவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
( 3% இடஒதுக்கீடு ரெடி.. அசால்ட்டா அரசு வேலை கிடைக்கும்.. ஸ்டாலின் சொன்ன நல்ல செய்தி.. என்னனு பாருங்க )
அடுத்தடுத்த நாட்களில் வந்தவர்கள் தாங்கள் மெசேஜ் பெற்ற தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்போது கிடைக்கும்: நடப்பு அக்டோபர் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட வேண்டிய அக்டோபர் 15. அரசு விடுமுறை நாள் என்பதால், இத்திட்டத்தின் கீழ் பயனடையும் அனைத்து மகளிருக்கும். ஒரு நாள் முன்னதாகவே உரிமைத் தொகையினை அனுப்பி வைக்கத் தாயுள்ளத்தோடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாதம் ஏற்கனவே 106,48.406 பேருக்கு பணம் அனுப்பப்பட்டுவிட்டது.
அடுத்த மாதம் 15ம் தேதி விடுமுறை தேதி கிடையாது. ஆனாலும் தீபாவளி காரணமாக முன்கூட்டியே பணம் அனுப்பப்படும் வாய்ப்புகள் உள்ளன என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications