ரிஸ்க் எடுக்கிறாரா எடப்பாடி.. முடிஞ்சு போச்சு போல.. மண்டை காயும் மேலிடம்.. ஆட்டம் ஆரம்பமாகிறதாமே
சென்னை: பாஜகவின் மறைமுக அழுத்தத்திற்கும், நேரடி வேண்டுகோளுக்கும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் காட்டி வரும் நிலையில், கூட்டணி விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் டெல்லி மேலிடம் திணறி வருவதாக தெரிகிறது.
பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு மேலிடத்தை சமாளிப்பார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
ஒருவேளை பாஜகவை எதிர்க்க நேர்ந்தால், எடப்பாடியை கழட்டிவிட்டு, 3வது அணி அமைக்கவும் பாஜக, தயாராகிவிடும் என்கிறார்கள்..
சல்லி சல்லியா நொறுங்கிய 'தாமரை’ கணக்கு! எடப்பாடியுடன் சேர முடியாது! ஃபர்னிச்சரை போட்டுடைத்த டிடிவி!

விஜயகாந்த்
எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.. ஆனால், அதில் பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி சொல்லவேயில்லை.. அந்தவகையில், பாஜகவும் அவர் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்பதாகவே பொருள்பட பேசினார். அதன்படி பார்த்தால் பாஜக + அதிமுக + பாமக + தேமுதிக + அமமுக + புதிய தமிழகம், ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று திமுகவை எதிர்க்கக்கூடம், இதைதவிர மேலும் பல அமைப்புகளும் அதிமுக + பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

4 டிவிஷன்
இதையெல்லாம் மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி என்ற வியூகத்தை வகுத்துள்ளார் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.. ஆனால், பாஜகவோ வேறு கணக்கை போட்டு வருகிறது.. தமிழகத்தில் திராவிட கட்சிகளை சார்ந்துதான் தேசிய கட்சிகள் இன்றுவரை செயல்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.. அந்தவகையில், அதிமுகவின் தோளிலேயே சவாரி செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.. ஆனால், அந்த அதிமுகவோ இப்போது 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன.. இதில், எடப்பாடியை தவிர்த்து, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என அனைவருமே பாஜகவுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருப்பவர்களாக தெரிகிறது..

5 தாமரை
ஆனால், 95 சதவீத கட்சியோ, எடப்பாடியிடம்தான் உள்ளது.. திமுகவைவிட வாக்கு சதவீதத்தை அதிகமாக வைத்திருக்கும் அதிமுகவில், இப்படி ஒரு பிரிவினையை பாஜகவால் ஏற்க முடியவில்லை. அதேசமயம், திமுகவின் வளர்ச்சியையும், திமுக அரசின் சாதனைகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை.. எனவே, அதிமுகவை ஒன்றிணைப்பது, அதைவைத்து திமுகவுக்கு செக் வைப்பது, அதன்மூலம் பாஜகவை வளர்த்தெடுப்பது என்ற குறிக்கோளுடன் மேலிட தலைவர்கள் உள்ளனர்.. எப்படியும் இந்த முறை 10 தாமரைகளையாவது, தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடனும் பாஜக உள்ளதாக தெரிகிறது..

10 தாமரைகள்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நொறுக்கி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். மோடியும், அமித்ஷாவும் அதிமுக தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று தூது விட்டுள்ளனர்... ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதால், அவருக்கு வேண்டிய தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்த வேண்டிய நிலைமையும் வந்தது.. இப்போதுகூட விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி உள்பட பலரது பிடி, பாஜவின் கைகளில்தான் உள்ளது... இவர்களில் பலருக்கு வருமான வரித்துறையின் வழக்கும் உள்ளது... சிலருக்கு உறவினர்கள், பினாமிகளின் கம்பெனிகள் மீதும் வழக்கு உள்ளது...

தலைக்கு மேல் கத்திகள்
இதனால், அதிமுக சீனியர் தலைவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பாஜக என்ன சொன்னாலும் செய்யத் தயாராக உள்ளனர்... ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, என்ன செய்தாலும் பரவாயில்லை, அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, தேவைப்பட்டால் பாஜவை எதிர்த்து அரசியல் செய்யவும் தயார் என்று சீனியர் தலைவர்களிடம் சொல்லி வருகிறாராம். இதற்கு இன்னொரு காரணமும்உள்ளது.. நடைபெற உள்ளது எம்பி தேர்தல் என்பதால், இதை பற்றி பெரிதாக எடப்பாடிக்கு கவலை இல்லை என்கிறார்கள்.. இதில் தோற்றாலும், அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை... எனவே, பாஜகவுக்குதான் இந்த தேர்தலால் போராட்டம்.

நிறம் மாறுதோ?
தான் அமைக்க போகும் மெகா கூட்டணியில், அவர்கள் வந்து இணைந்தால் இணையட்டும்.. இல்லாவிட்டால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைக்கட்டும்... தான் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாகவும் எடப்பாடி சொல்லி வருகிறாராம்.. எந்த வழியில் பாஜக செக் வைத்தாலும், அசராமல் எடப்பாடி உள்ளதால், மேலிடம் குழம்பி போயுள்ளதாம்.. எடப்பாடியை எப்படி சமாதானம் செய்வது? எப்படி கூட்டணிக்குள் கொண்டுவருவது என தீவிர ஆலோசனையில் உள்ளார்களாம். மற்றொருபக்கம், மாஜிக்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறதாம்... இதனால் தமிழக அரசியலில் விரைவில் ஒரு அதிரடி இருக்கும் என்கின்றனர் மத்திய அரசு அதிகாரிகள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!!