திமுக ஆட்சியமைந்து ஓராண்டு.. இன்னும் தராத ரிப்போர்ட் கார்ட்! வாக்குறுதியை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்?
தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மாதந்தோறும் வெளியிடுவதாகச் சொன்ன 'ரிப்போர்ட் கார்டு' என்னவானது எனக் கேள்வி எழுந்துள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தமது தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று, "வாக்குறுதிகளை செயல்படுத்தியது குறித்தான மாதாந்திர அறிக்கையை, மாதத்தின் முதல் பணி நாளன்று முதல்வர் ஊடகங்களைச் சந்தித்து வழங்குவார்" எனப்படுவதாகும். இது 491வது தேர்தல் வாக்குறுதியாக அறிக்கையில் இடம்பெற்றிருந்தது.
ஓராண்டு நிறைவு
வரும் மே 7ஆம் தேதி வந்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைய இருக்கும் நிலையில், இதுவரை மாதாந்திர அறிக்கை வெளியிடப்படவில்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைகளில், நிறைவேற்றிய வாக்குறுதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு வருகிறார். சமீபத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் நிறைவேற்றப்படும்

மேலும், தி.மு.க அரசு வெளியிட்ட அறிவிப்புகள் எத்தனை, அதில் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்தவை எத்தனை என்றும் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், மீதமுள்ள வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்றுவோம் என்றார். இந்நிலையில், தருமபுரி தொகுதி தி.மு.க எம்.பியும், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவருமான செந்தில்குமார் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தனது 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டை' சமர்ப்பித்துள்ளார்.
ரிப்போர்ட் கார்டு என்னாச்சு?
இதைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் நிறைவடைய இருக்கும் நிலையில், மாதந்தோறும் வெளியிடுவதாகச் சொன்ன 'ரிப்போர்ட் கார்டு' என்னவானது என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வரும் மே 7ஆம் தேதி ஓராண்டு சாதனையைக் கொண்டாடவிருக்கும் தி.மு.க அரசு, அதன்பிறகாவது மாதாந்திர அறிக்கையை மாதந்தோறும் வெளியிட்டு, இது வெளிப்படையான அரசு என்பதை மக்களிடம் பதிய வைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications