"இங்கே" வர்றாராமே சரத்குமார்.. அதிமுகவில் ஒருத்தரும் வாய் திறக்கலயே.. கடைசியில் ராதிகா வைத்த "பஞ்ச்"
ராதிகா சரத்குமார் அதிமுகவை தாக்கி பேசிய பேச்சு இணையத்தில் ஷேர் ஆகிறது
சென்னை: இந்தியாவில் ஜனநாயகமும், சமத்துவமும் உள்ள ஒரே கட்சி சமத்துவ மக்கள் கட்சிதான் என்று நடிகை ராதிகா பேசி அதிர வைத்துள்ளார்.
திமுக, அதிமுக என யாருடனாவது இணைந்து தேர்தலை சந்தித்து வந்து கொண்டிருக்கிறது சமக.. அவர்கள் தரும் ஒன்று அல்லது 2 சீட்களை வைத்து போட்டியிட்டு வந்தது.. அதில் சரத்குமாருக்கு வெற்றி வாய்ப்புகளும் கிடைத்ததை நாம் மறுக்க முடியாது.
இதற்கு பிறகு, இரு கட்சிகளுடன் இணைய முடியாமல், நடந்து முடிந்த தேர்தலில் கமலுடன் கூட்டணி வைத்து, மண்ணை கவ்வ நேர்ந்தது..

மர்மமரணங்கள்
அதற்கு பிறகு சரத்குமார் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்தாலும், மக்கள் பிரச்சனைகள் குறித்தும், பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பியவாறே இருக்கிறார். 10 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் சரத்குமார் பேசியபோது, "நான் அன்றைய காலத்தில் மக்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்தேன்.. அந்த நேரத்தில் செல்போன்கள் இல்லை. அப்போது சோஷியில் மீடியாக்கள் இருந்திருந்தால் இன்றைக்கு நான் இந்த மாநிலத்தின் முதல்வராகி ஆகியிருப்பேன் என்றார்.

எண்ணவோட்டம்
2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, "மற்றவர்களுக்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.. மக்களுக்காக என்ன செய்ய வேண்டும், எந்த திட்டத்தை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ண ஓட்டத்தில் இருக்கிறேன்.. அது நிறைவேற ஓரிரு மாத காலமாகும்.. மக்கள் சிறப்பாக வாழ்வதற்கு எதையெல்லாம் நீக்க வேண்டும், எதெல்லாம் இருக்க வேண்டும் எதெல்லாம் சேர்க்க வேண்டும், எதெல்லாம் கோர்க்க வேண்டும் என்பதை தெளிவாக சொல்கிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்திருந்தார்.

கரு நாகராஜன்
இப்படி தொடர்ந்து லைம்லைட்டில் சரத்குமார் இருந்துவந்தாலும், இவர் பாஜகவில் சேர உள்ளதாக கடந்த சில நாட்களாகவே யூகங்கள் பரவிகொண்டிருக்கின்றன.. அதுகுறித்து பாஜகவின் மாநில துணைத் தலைவரான கரு.நாகராஜன் ஒரு விளக்கமும் தந்திருந்தார்... "எத்தனையோ பேரை பாஜகவில் இணைத்திருக்கிறேன். என்னுடைய உறவுக்காரரான சரத்குமாருக்கு எப்போது உறுப்பினர் அட்டை கொடுக்க போகிறீர்கள் என்று பலரும் கேட்கின்றனர். சரத்குமார் பாஜகவுக்கு வந்தால் நிச்சயம் வரவேற்போம்..." என்று கூறியிருந்ததும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முட்டாள்கள்
இந்நிலையில், நடிகை ராதிகாவும், சமகவின் முக்கிய தலைவருமான ராதிகா சரத்குமார், அக்கட்சி கூட்டத்தில் பேசியுள்ளார்.. அப்போது அதிமுகவை கடுமையாக சாடி பேசியிருந்தார்.. அவரது பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதன் சுருக்கம்தான் இது: அரசியலில் அசாதாரண சூழல் என்பார்களே,.. அந்த சூழ்நிலை இன்னைக்குதான் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறது.. எவ்வளவு பெரிய விஷயம் இங்கே நடக்குது என்பதை நீங்களே பார்க்கிறீங்க.. எவ்வளவு பெரிய கட்சி, எப்படி உடைகிறது என்பதையும் நம் கண்முன்னாடியே பார்க்கிறோம்..

ஹாலில் சடலம்
என் அப்பா இன்னைக்கு உயிருடன் இல்லையே என்று நான் ரொம்ப வருத்தப்படறேன்.. அம்மான்னாங்க, சின்னம்மான்னு சொன்னாங்க.. இப்ப என்னாச்சு? அந்தம்மா இறந்தப்போ ஒருத்தரும் வாய் திறக்கல.. ராஜாஜி ஹாலில் உடல் வைத்திருந்தார்கள்.. அப்பக்கூட யாரும் வாய் திறக்கல.. ஒருவேளை திடீர்னு எந்திரிச்சு வந்துருவாங்களோன்னு பயம்.. புதைச்சதுக்கு பிறகு, மெல்லமா எழுந்து நிற்கிறார்கள்.. இந்தம்மா போய், சமாதியில் அடிச்சப்போ, சத்தியமா அங்கே அம்மா இல்லை.. தமிழ்நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? சுப்ரீம்கோர்ட்டிலேயே குற்றவாளி என்று தீர்ப்பு வந்துவிட்டது, அதனால் அவரது படங்களை எங்கேயும் உபயோகிக்கக் கூடாது என்றார்கள்..

சின்னம்மா
அந்த சமயத்தில் ஒருத்தர் சொல்றார். ஏன் காந்திஜி, நேதாஜி போட்டோவை எல்லாம் மாட்டுறது இல்லையா? அப்படித்தான் அம்மா போட்டோவையும் மாட்டுவோம் என்கிறார்.. காந்தி, நேதாஜி படங்களை எங்கே கொண்டுவந்து செருகுகிறார்கள் பாருங்கள்.. உடனே சின்னம்மாதான் ஆட்சியை நடத்துகிறார்கள் என்கிறார்கள்.. இவங்களுக்கு வெட்கமே இல்லையா? நான் எப்பவுமே இன்னொரு கட்சி பற்றி பேசமாட்டோம்.. அது அவர்கள் உட்கட்சி பிரச்சனை..

ஒரே போடு
என்னைக்கு ஓபிஎஸ் இன்னைக்கு வெளியே வந்து, இவ்வளவு பிரச்சனைகளை சொல்லும்போதுதான், நடப்பது ஓரளவு தெரிகிறது.. ஆனாலும் அந்தம்மா ஆஸ்பத்திரியில் இருந்ததை பற்றி யாருமே பேசுவதில்லை.. ஏன் பேசறதுல்ல? இன்றைக்கு ஜனங்களுக்கு ஒரு தெளிவு வந்துள்ளது.. மக்கள் மனதில் ஒரு நல்ல மாற்றம் வந்துள்ளது.. அதனால், இந்தியாவில் ஜனநாயகமும், சமத்துவமும் உள்ள ஒரே கட்சி சமத்துவ மக்கள் கட்சிதான்.. என்று ஒரே போடாக போட்டு, கூட்டத்தையே அதிர வைத்தார்.












Click it and Unblock the Notifications