விஜய் பிரசாரம் தொடங்குவது எப்போது? செங்கோட்டையன் பேட்டி! டிடிவி தினகரன் பற்றி சொன்னதை பாருங்க
சென்னை: சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதிக்கு பிறகாக வேறு எந்த நிகழ்ச்சியிலும் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவில்லை. இதனால், விஜய் பிரசாரம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், இது குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். செங்கோட்டையன் அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தனது கூட்டணியை இறுதி செய்யும் முனைப்பில் உள்ளது. அதேபோல திமுகவிலும் இன்று வைத்திலிங்கம் இணைந்தார்.

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்
இப்படி இன்று காலை முதலே அரசியல் களம் அனல் பறந்து கொண்டு இருக்கக் கூடிய சூழலில், கடந்த சில வாரங்களாகவே கட்சி செயல்பாடு எதுவும் இன்றி முடங்கி கிடந்த தவெகவும் இன்று தன் பங்குக்கு வேகம் காட்ட தொடங்கியது. மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
விஜய் பிரசாரம் எப்போது?
"விஜய் உத்தரவுப்படி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். பயண திட்டம் சென்னையில் இருக்கிற 13 தொகுதிகளிலும் இருக்கும். சுற்றுப்பயணத்தை பொறுத்தவரை 26 ஆம் தேதியில் இருந்து தொடங்கி அந்த பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிற கட்சி நிர்வாகிகளின் ஒருங்கிணைப்போடு அந்த பணிகள் நடைபெற இருக்கிறது. அந்த ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்யும் இடத்தில் நடைபெற உள்ளது" என்றனர்.

"விஜய் எப்போது பிரசாரம் தொடங்க உள்ளார்?" என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அளித்த பதிலில், "பயணத் திட்டங்கள் தயார் செய்து வருகிறோம். அதற்கான இடங்களும் ரெடி பண்ணிட்டு இருக்கிறோம். கூடிய விரைவில் காவல்துறை அனுமதியோடு பயணத் திட்டம் தொடங்கும். சில விதிகள் உள்ளன. விதிமுறைகளுக்கு ஏற்ப இடங்கள் வேண்டும்.
2010-ல் மூன்றே கூட்டம்தான் நடத்தப்பட்டது
இடங்களை முதலில் தேர்வு செய்துவிட்டு காவல்துறை விதிகளை பின்பற்ற வேண்டும். காவல்துறை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், சீக்கிரம் முடித்துவிடுவோம்.
2010-ல் மூன்றே கூட்டம்தான் நடத்தப்பட்டது. கோவை, திருச்சி, மதுரை மூன்றே இடத்தில் முடித்துவிட்டோம். வெற்றி என்பது ஒரு இலக்கை நோக்கி, செல்வாக்கை நோக்கி. பணமே கொடுக்காமல் மக்கள் கூடுகிற ஒரே தலைவர் விஜய்தான். அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். கூட்டணியா, தனித்து போட்டியா என்பது குறித்து விரைவில் விஜய் அறிவிப்பார்" என்றார்.
எங்கு சென்றாலும் வாழ்க
அப்போது செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் டிடிவி தினகரன் பாஜக - அதிமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தது குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் கூறியதாவது:- "யார் வேண்டும் என்றாலும் எங்கும் சேரலாம். அவருடைய மனநிலையைப் பொறுத்து. எங்கு சென்றாலும் வாழ்க.." என்றார்.
தவெக தேர்தல் பிரச்சார குழுவினர் January 26 முதல் சுற்று பயணம் ஆரம்பம்
DAY 1: சென்னை (14 தொகுதிகள்), திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், ஆம்பூர்
DAY 2 : கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.
DAY 3 : சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர்.
DAY 4 : ஈரோடு, மேட்டுப்பாளையம், கோவை.
DAY 5 : திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி.
DAY 6 : திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, ராமநாதபுரம்.
DAY 7 : மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி.
DAY 8 : தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.
DAY 9: அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர்.
DAY 10: புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்.
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு!












Click it and Unblock the Notifications