• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டபுள் ஷாக்".. ரூட் மாறுதே.. அங்கே சாய்கிறாரா ஓபிஎஸ்?.. அப்ப எடப்பாடி பழனிசாமிக்கு வேற வழியேயில்லையா

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று நினைக்க, ஓபிஎஸ் தரப்பு வேறு ஒன்று நினைக்க, அதிமுகவே கலகலத்து காணப்படுகிறது..

அரசியல் கட்சியின் உட்பிரச்சனைகளை, ஒரு நீதிமன்றம் தீர்த்து வைப்பது என்பது அந்த அளவுக்கு சுலபமில்லை.. அரசியல் கட்சி பிரச்சனைகளுக்கான தீர்வை, அரசியல் கட்சிக்குள்ளேதான் தேட முடியும் என்பதே உண்மை.

எனினும் சட்டரீதியான போராட்டங்களை ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்புமே எடுத்து வருவதால், அங்கு வரும் தீர்ப்பு மட்டுமே எடப்பாடி & ஓபிஎஸ் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக உள்ளது.

3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு 3 அடி நீளம்.. 2 அடி உயரம்.. மாலை அல்ல! காலணியை காணிக்கையாக வழங்கும் கிராம மக்கள்.. விசித்திர வழிபாடு

 10 சீட்டுக்கள்

10 சீட்டுக்கள்

அதேசமயம், அதிமுக பலவீனப்பட்டு இருப்பதை, தற்சமயம் பாஜக விரும்பவில்லை.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் + வலுவில்லாமலும் இருக்க வேண்டும் என்றே கணக்கு போடுகிறது.. மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆணித்தரமாக நம்புகிறது. எனவே, திமுகவை எதிர்க்க அதிமுகவின் பலம், மொத்தமாகவே பாஜகவுக்கு தேவைப்படுகிறது.. இதுபோக, தமிழகத்தில் 10 சீட்டுக்களையாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது..

 பவர் போயாச்சு

பவர் போயாச்சு

அதற்காக, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் மறைமுகமாக இறங்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கு அதிமுக தலைவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு குறித்த சில தகவல்கள் கசிந்து வருகின்றன.. கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் உள்ளாராம். பொதுக்குழு கூட்டியும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும்கூட, எந்த அதிகாரத்தையும் செயல்படுத்தாத முடியாத நிலைமைக்கு ஆளாகிவிட்டார்.. பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தையும் தேர்தல் ஆணையம் பெற்றுக்கொள்ளவில்லை..

 க்ளைமாக்ஸ்

க்ளைமாக்ஸ்

ஓபிஆர்ரையும் எம்பி பதவியில் இருந்து தூக்க முடியவில்லை.. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் விஷயத்தில் சபாநாயகருக்கு கடிதம் அளித்தும் பிரயோஜனம் இல்லை. பிரதமரை சந்திக்க நினைத்தும் நடக்கவில்லை.. அமித்ஷாவை சென்று சந்தித்தும் பலன் இல்லை.. இப்போது நம்பிக்கையாக இருப்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு மட்டுமே.. இலையும் பறிபோய்விட்டால் நெருக்கடிகள் கூடவே வாய்ப்புள்ளது.. ஆனால், இரட்டை தலைமையுடன் கட்சியை நடத்தி செல்லுமாறு, தேர்தல் ஆணையம் சொல்ல வாய்ப்புள்ளதாம்.. இதற்கு மேலிடம் அழுத்தம் தரப்படலாம் என்றும் சொல்கிறார்கள்..

 ரூட்டே மாறுதோ

ரூட்டே மாறுதோ

அப்படி இரட்டை தலைமை என்று அறிவிப்பு வந்தால், இதுவரை மேற்கொண்ட எல்லா முயற்சிகளுமே நொறுங்கி விழுந்துவிடக்கூடும் என்ற கலக்கமும் எடப்பாடியை சூழ்ந்துள்ளது. வழக்குகள் கழுத்து வரை நெருக்கி தள்ளுவதால்தான், இந்த பதவியை எட்டிப்பிடிக்க எடப்பாடி முயன்று கொண்டிருப்பதாக, கேசி பழனிசாமி உட்பட அனைவருமே குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கும் முட்டுக்கட்டைகள் விழுந்துள்ளன.. இதற்கு நடுவில் எதிர்பார்க்காத வகையில், கொடநாடு கேஸ் வேற ரூட்டில் சென்றுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியாக எடப்பாடி தரப்புக்கு உள்ளதாம்..

 கணக்கு A

கணக்கு A

இவ்வளவையும் சமாளித்து கடக்க முடியுமா என்ற கலக்கமும் சூழ்ந்துள்ள நிலையில்தான், எடப்பாடி டீமில் இருந்து பச்சை கொடிகள் ஓபிஎஸ் தரப்பு கூடாரம் காட்ட தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதற்கு ஓபிஎஸ்ஸும் மறுக்க வாய்ப்பில்லை.. ஏற்கனவே, ஒன்றிணைய ஓபிஎஸ் ஆதரவுக்கரம் நீட்டிவிட்டாலும்கூட, எடப்பாடி மீது முழு நம்பிக்கையை வைக்க முடியவில்லையாம்.. எந்நேரம் வேண்டுமானாலும் எடப்பாடி தன்னை கவிழ்த்துவிடுவார் என்ற கணக்கும் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளதாம்..

 கணக்கு B

கணக்கு B

அதனால்தான், தன்மீது கரிசனம் காட்டும், எடப்பாடி டீமில் உள்ளவர்களை, தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறாராம்.. கடந்த மாதம் உங்கள் பக்கமே வந்துவிடுகிறோம், தீர்ப்பு வந்துவிடட்டுமே என்று ஓபிஎஸ்ஸிடம் நம்பகமான வார்த்தைகளை சொல்லிய புள்ளிகளுக்கும் மீண்டும் வலையை விரித்துள்ளாராம் ஓபிஎஸ்.. ஆக, எடப்பாடி பக்கம் ஓபிஎஸ் செல்வாரா? அல்லது எடப்பாடி டீமில் உள்ளவர்கள் ஓபிஎஸ் பக்கம் வருவார்களா? என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Where does the AIADMK problem go and Is OPS Joining Edappadi Palanisamy side
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X