சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ.. "டீல்" சுபம் போல.. மதிமுக கூட்டணி கன்பார்ம்.. துரை வைகோ ஹேப்பி நியூஸ்.. "அந்த" தொகுதிக்கு குறி?

திமுக கூட்டணியில், மதிமுக தொடரும் என்று துரை வைகோ உறுதி தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறுமா? இல்லையா? என்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை சொல்லி உள்ளார் மூத்த தலைவர் வைகோவின் மகன், துரை வைகோ.. !!

விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில் தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அதேபோல நம் தமிழகத்திலும் தேர்தலுக்கான முனைப்புகள் காட்டப்படுகின்றன. கூட்டணி பேச்சுக்களும் மெல்ல எட்டிப்பார்க்க துவங்கி உள்ளன.

திமுகவை பொறுத்தவரை, கூட்டணி உடையாது என்கிறார்கள்.. முக்கியமாக 2 இடதுசாரிகளும் திமுகவை விட்டு போக வாய்ப்பில்லை, அதேபோல, விசிக, மதிமுக, வேல்முருகன் மாதிரியான கட்சிகளும் நிச்சயம் போகாது என்று வலுவாக நம்பப்பட்டு வருகிறது..

ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ! ஏதோ என்னால முடிஞ்சத செய்றேன்.. நான் என்ன எம்பியா..எம்எல்ஏவா? ஓபானாகப் பேசிய மதிமுக துரை வைகோ!

 பஞ்ச் டயலாக்

பஞ்ச் டயலாக்

அந்தவகையில் திமுக கூட்டணி பலத்துடன் உள்ளது என்றாலும், வலுவான கட்சிகளுடன் அமைத்து, எம்பி தேர்தலை சந்திப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருந்தார்.. எனவே, வேறு சில கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம்பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஆனால், இந்த முறை, திமுக கூட்டணியில் அதிக சீட்களை கேட்டு பெறுவோம், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பிடித்தால் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்று இப்போதே பஞ்ச் வைத்து பேசி வருகிறார்.. அந்தவகையில் சீட் விவகாரமும், சைலண்ட்டாக கூட்டணிக்குள் ஓடிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

கர்ஜனை

கர்ஜனை

இதில் மதிமுகவை பொறுத்தவரை, திமுகவுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது.. கடந்த முறை தேர்தலின்போது பாஜகவுக்கு எதிரான வைகோவின் கர்ஜனை, திமுக கூட்டணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்ததை மறுக்க முடியாது.. கடந்த தேர்தலில் மதிமுகவுக்கு 1+1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழழும் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்து அதன் வெற்றியையும் அறுவடை செய்திருந்தது.. இந்த முறை எம்பி தேர்தலில் துரை வைகோ களமிறங்க போவதாக சொல்லப்படுகிறது.. சமீபகாலமாகவே துரை வையாபுரியின் அரசியல் வேகமெடுத்து வருகிறது.. நிறைய அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.. மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்..

 வேற ரூட்

வேற ரூட்

நேற்று முன்தினம்கூட, உதயநிதி அமைச்சரானதற்கு நேரிலேயே சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். அந்தவகையில், திமுகவுடன் மதிமுகவின் இணக்கமான கூட்டணி நட்பு தொடர்ந்து வருகிறது.. இன்றும்கூட துரை வைகோ ஒரு பேட்டி தந்துள்ளர்.. அந்த பேட்டியில், திமுகவுடன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று மதிமுகவின் துரை வைகோ உறுதி செய்துள்ளார்.. அத்துடன், மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும் என்றும் துரை வையாபுரி கேட்டுக் கொண்டுள்ளார்.. கடந்த 2 மாதத்துக்கு முன்பேயே மதிமுக குறித்த ஒரு தகவல் இணையத்தில் கசிந்தது.

 ஸ்டார் தொகுதி

ஸ்டார் தொகுதி

அதன்படி, கோவில்பட்டி தொகுதிக்கு, துரை வையாபுரி குறி வைத்து வருவதாக சொல்லப்பட்டது.. கோவில்பட்டியை பொறுத்தவரை எப்போதுமே நட்சத்திர தொகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது.. அதனால்தான், கடந்த சட்டசபை தேர்தலின்போது, இங்கு பலத்த போட்டி எழுந்தது... எனவே, இந்த முறை வைகோ வேறு ஒரு ரூட்டை இங்கு எடுத்துள்ளதாக தெரிகிறது.. அதாவது, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், தன்னுடைய மகனை களமிறக்க யோசித்து வருவதாகவும், தொகுதி மேம்பாட்டு நிதியில் பெரும்பகுதி கோவில்பட்டி தொகுதிக்கே செலவிடப்படுவதாகவும்கூட அப்போது தகவல்கள் வலம்வந்தன..

 டிக் செய்த வைகோ

டிக் செய்த வைகோ

அதுமட்டுமல்ல, அந்த திட்டங்களை எல்லாம் துரை வைகோவே நேரில் வந்து தொகுதி மக்களுக்கு செய்து தருவதாகவும், கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த மதிமுகவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு, கட்டாயம் கலந்து கொள்வதுடன், தொகுதி மக்களையும் அடிக்கடி சந்தித்து பேசி வருவதாக கூறப்பட்டது.. மக்கள் நலக்கூட்டணியில் இருந்தபோது, அதாவது 2016-ல் தேர்தலில் கோவில்பட்டியைதான் வைகோ தேர்ந்தெடுத்தார்.. ஆனால் திடீரென விலகிக்கொண்டு, வேறு நபரை நிறுத்தி போட்டியிட செய்தார்.. அதனால் இந்த முறை, மகனுக்கு அந்த தொகுதியை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

 வையாபுரி

வையாபுரி

ஒருவேளை, கோவில்பட்டியில் துரை வைகோ களமிறக்கப்பட்டால், அங்கு கடம்பூர் ராஜூவை எப்படி எதிர்கொள்வார்? என தெரியவில்லை.. நாயக்கர் சமூகத்தினரை அரவணைத்து செல்ல போவது யார்? என்ற எதிர்பார்ப்புகளும் சேர்ந்தே எழுகிறது.. தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்றாலும், கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்த அனுமானங்கள் தினம் தினம் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன.. எப்படியோ, திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்ற ஒரு நல்ல செய்தியை இன்றைய தினம் சொல்லி, தொண்டர்களுக்கு குஷியை தந்துள்ளார் வைகோ மகன் துரை வையாபுரி..!!!

துரை வையாபுரி

துரை வையாபுரி

இன்று செய்தியாளர்களிடம் துரை வைகோ பேசியபோது, "ஆளுநர் பதவி தேவையில்லை அது ஒழிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் ஒன்றிய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக்கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக தமிழகத்தில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Where is Durai Vaiko going to contest in the MP elections and Is the MDMK continuing in the DMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X