"எடப்பாடி..ண்ணே".. திமுககாரர்களை உடனே கூப்பிடுங்க.. யாருடன் கூட்டணி சொல்லுங்க.. பறந்து வந்த "மெசேஜ்"
பன்னீர்செல்வம் ஆதரவாளரான அசோகன் எடப்பாடி தரப்புக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்
சென்னை: "அண்ணன் எடப்பாடி அவர்களே, நம் அதிமுக எங்கே போய் கொண்டு இருக்கிறது? எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள்" என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக எப்போது ஒன்றிணையும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் கவலையுடன் எதிர்நோக்கி உள்ளனர்.. 2 பேரும் ஒன்று சேர மாட்டார்களா? என்று அதிமுகவின் நிர்வாகிகள் பலரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
அதில் ஒருவர்தான், ஓபிஎஸ் ஆதரவாளரான அசோகன்.. இரட்டை தலைமையின்கீழ், குமரி அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன்...

தமிழ்மகன் உசேன்
கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் அதிகரித்தபிறகு, 72 மாவட்ட செயலாளர்களில் 67 பேர் எடப்பாடி தந்தனர்.. ஆனால், அசோகன் மட்டும் ஓபிஎஸ் பக்கமே நின்றார்... இப்போதும் பக்கபலமாகவே நிற்கிறார்.. குமரிமாவட்ட ஆவின் பால்வளத் தலைவராக இருக்கும் அசோகன், சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸுக்கு நீதிகேட்டு வருகிறார்.. அத்துடன், அதிமுகவினர் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்து வருகிறார்.. கடந்த வாரம்கூட ஒரு அழைப்பு விடுத்திருந்தார்... அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மாமாவும், அண்ணன் தளவாய்சுந்தரமும் மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து கட்சியைப் பலப்படுத்த குரல் கொடுக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆ அசோகன்
ஆனால் இதையும் எடப்பாடி பழனிசாமி டீம் கண்டுகொள்ளவேயில்லை.. எனினும் மறுபடியும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார் அசோகன்... இப்போது பாஜக நிர்வாகிகளை அதிமுகவில் இணைப்பதால் என்ன நன்மை? அதிமுக எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.. அத்துடன், எடப்பாடி பழனிசாமிக்கு நானும் எதிரானவன் அல்ல. அண்ணன் ஓபிஎஸ்சுடன் இணைந்து பயணியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எடப்பாடிண்ணே
இதுகுறித்து அசோகன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "அண்ணன் எடப்பாடி அவர்களே, நம் அதிமுக எங்கே போய் கொண்டு இருக்கிறது? எதை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம் என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள். நாம் யாரோடு கூட்டணியில் இருக்கிறோம்? இல்லை.. யாரோடு கூட்டணி சேர போகிறோம்? அண்ணே.. உங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. உங்களின் நான்கு ஆண்டு கால ஆட்சியை ரசித்தவன். எனக்கு வயது 57 தான். ஆனாலும், இயக்கத்தில் உங்களைப் போல நானும் சீனியர். ஆனால், அண்ணன் ஓபிஎஸ்சுக்கு துரோகம் செய்யும் தம்பியும் நான் அல்ல.

PRINCE தங்கவேல்
ஒன்றை மட்டும் நீங்கள் நினைவில் வைத்துகொள்ளுங்கள். புரட்சிதலைவர் எம்ஜிஆரோ, புரட்சிதலைவி அம்மாவோ தங்கள் தனித்தன்மையை நிரூபிக்கும்போது பணத்தை வாரி இறைத்ததில்லை. பாசம்தான் அவர்களை அடையாளம் காண்பித்தது. எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியே வந்தபோது அவருக்கு பின்னால் நின்றவர்களும், ஜெயலலிதா துரைமுருகனால் சட்டசபையில் தாக்கப்பட்ட போது உயிரைக் கொடுத்து பின்னால் நின்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரனும்,திருநாவுக்கரசும், பிரின்ஸ் தங்கவேலும் பணத்திற்காக நிற்கவில்லை. பாசத்திற்காக நின்றார்கள்.

கருப்பு பூனை
அதேநேரம் ஓபிஎஸ்சின் தர்மயுத்தத்தின்போது உண்மையான விசுவாச தம்பிகளான எங்களைப் போன்றவர்களை அவர் அருகே நெருங்கவிடாமல் கருப்புபூனை போல சுற்றி நின்று கே.பி.முனுசாமி சாப்பிடும் சோற்றில் மண்ணை அள்ளிவைத்து துரோகம் செய்தார். இன்று உங்களுக்கு விசுவாசியாக நடிக்கும் அவர் நாளை உங்களுக்கு துரோகம் செய்ய மாட்டாரா? தர்மருக்கு கொடுத்த எம்பி பதவி ஜெயக்குமாருக்கு கொடுத்து இருந்தால் இன்று ஜெயக்குமாரும் வாய்திறக்க மாட்டார். இன்று பாஜக நிர்வாகிகளை நம் பக்கம் சேர்ப்பது சொந்த அண்ணனின் மகனை உன் அப்பாவோடு இருக்காதே, சித்தப்பாவான என்னோடு வா என்று அழைப்பது போல் அல்லவா உள்ளது.

ராஜ்ஜியம் பாடை
அவன் அங்கே இருந்தாலும் நமக்கு தானே ஓட்டு போடுவான். திமுக நிர்வாகியை நம் கட்சியில் சேருங்கள். கம்யூனிஸ்ட் கட்சியினரை சேருங்கள். அதை விட்டுவிட்டு இதெல்லாம் என்ன அரசியல்? வீட்டில் ஓய்வு எடுக்கின்ற நேரம் கண்ணை மூடிக்கொண்டு ஐந்து நிமிடம் சிந்தியுங்கள். பணம் கொடுத்து சேர்க்கும் அன்பு ஒருகாலமும் நிரந்தரம் இல்லை. பாசத்தால் வருகிற அன்பே நாம் பாடையில் போகும் வரை கூடவே இருக்கும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ்சுக்கு ஒரு ராசி உண்டு அந்த ராசி நம்மை ராஜ்ஜியத்தை ஆளவைக்கும் "என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications