சென்னைக்கு மிக அருகே.. தமிழ்நாட்டை நெருங்கும் "புயல்".. வானிலையில் ட்விஸ்ட்.. வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: அந்தமான் கடல் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக வலிமை அடைந்து வருகிறது. இது புயலாக மாற உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு (chennairains.com) கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் அழிந்து போய்விடும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனாலும் ஒருவழியாக தற்போது இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இன்னும் 2 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும். வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட உள்ளது.
சுழன்றடிக்கும் சூறாவளி.. 5 நாள் கடல் பக்கம் போகாதீங்க! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை ரெயின்ஸ்
இந்த நிலையில் இந்த புயல் குறித்து சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு (chennairains.com) கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், 1964 ராமேஸ்வரம் புயல், 2005 பன்னூஸ் புயல், 2011 தானே புயல், 2016 வர்தா புயல்.. இந்த புயல்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான தொடர்பு உள்ளது. இந்த புயல்கள் எல்லாம் வடகிழக்கு பருவமழையின் கடைசி கட்டத்தில், டிசம்பர் மாதத்தில் வந்த புயல்கள். அது மட்டுமின்றி லா நினா மாற்றம் ஏற்படும் வருடங்களில் இந்த புயல்கள் ஏற்பட்டு உள்ளது. இது எல்லாம் லா நினா மாற்றத்தின் குணங்களை கொண்ட புயல்கள் ஆகும். பொதுவாக இவை டிசம்பர் மாதத்தில் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களை தாக்க கூடியவை. இதன் காரணமாகவே லா நினா வருடங்களில் எதிர்பார்க்காத மழை ஜனவரி மாதங்களில் கூட பெய்கிறது. இந்த பேட்டர்னை கூர்ந்து கவனித்து பார்த்தால், மழை ஏற்படும் விதம் குறித்து புரிந்துகொள்ள முடியும்.

வானிலை
அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 48 மணி நேரம் இதனால் முக்கியத்துவம் பெறுகிறது. கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் எப்படி மழையும் என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரிந்துவிடும். சாட்டிலைட் புகைப்படங்களின்படி பார்த்தால், காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான சூழ்நிலைகள் தெரிகிறது. இன்று மாலை அல்லது இரவு இந்த மாற்றம் ஏற்படலாம்.

புயல் தாக்குமா?
அதன்பின் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதற்கு அடுத்த 12- 24 மணி நேரத்தில் மாற வாய்ப்புகள் உள்ளன., இலங்கையின் வட கிழக்கு பகுதியை 8ம் தேதி அடையும் போது இந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த தாழ்வு பகுதி கண்டிப்பாக வடக்கு தமிழ்நாடு நோக்கி 9ம் தேதி காலை வரும் என்றுதான் அனைத்து வானிலை மாடல்களும் தெரிவிக்கின்றன. இவை புயல் காற்றாக வடக்கு தமிழ்நாடு - தெற்கு ஆந்திராவை இடையே கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. முன்னதாக புதுச்சேரி அல்லது டெல்டாவில் புயல் கரையை கடக்கும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் வானிலை மாடல்கள் தற்போது புயல் வடக்கு தமிழ்நாடு / தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது.

சென்னை இரண்டு பக்கம்
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது சென்னையின் இரண்டு பக்கங்களில் எங்காவது ஒரு இடத்தில்.. 100 கிமீ தூரத்தில் புயல் கரையை கடக்க வைத்து உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் எவ்வளவு வலிமையாக இருக்கும் என்ற கேள்வி உள்ளது. இந்த தாழ்வு பகுதியாக புயலாக கரையை கடக்குமா என்பது பற்றி வானிலை மாடல்கள் எதுவும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் இது புயலாக கரையை கடைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் மழை எப்படி பெய்யும் என்பதை கணிப்பது மிக மிக கடினம்.

எங்கே?
ஏனென்றால் புயல் காரணமாக நிறைய மாற்றங்கள் ஏற்படலாம். புயல் செல்லும் திசை, அதன் வலிமை ஆகியவை நிறைய பாதிப்புகளை, மாற்றங்களை ஏற்படுத்தும். பின்வரும் விஷயங்கள் வானிலையில் வரும் நாடுகளில் ஏற்படும்.
வடக்கு தமிழ்நாட்டு கடல் பகுதியை 9ம் தேதி புயல் நெருங்க வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு மேலே அல்லது கீழே எங்காவது ஒரு இடத்தில் 100 கிமீ தூரத்தில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இது தாழ்வு பகுதியாக புயலாக கரையை கடக்குமா என்பது பற்றி வானிலை மாடல்கள் எதுவும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் இது புயலாக கரையை கடைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
டிசம்பர் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் டெல்டா மற்றும் நெல்லூர் இடையேயான கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும்.
8 மற்றும் 9 ஆம் தேதிகளில் கடலோர தமிழகத்தின் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது, என்று சென்னை ரெயின்ஸ் குறிப்பிட்டு உள்ளது.