Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்".. அப்பா பெயரை சேர்த்து சொல்லி அசத்திய ஸ்டாலின்.. செம ஸ்டேட்மெண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராக பதவி ஏற்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. இன்று "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' என்று கூறி ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

Recommended Video

    தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார் திமுக தலைவர் M.K. Stalin

    தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்துள்ளது.

    இன்று ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் தமிழகத்தின் 23வது முதல்வராக பொறுப்பேற்றார். ஸ்டாலினை தொடர்ந்து திமுக சார்பாக 33 அமைச்சர்கள் வரிசையாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

    ஸ்டாலின்

    ஸ்டாலின்

    தேர்தலில் வென்ற பின் திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி எல்லாம் பதவி ஏற்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு பல நாட்களாகவே திமுகவினர் மத்தியில் இருந்தது. முக்கியமாக மு. க ஸ்டாலின் எனும் நான் என்ற வார்த்தையை கேட்க திமுகவினர் எல்லோரும் பல நாட்களாக காத்திருந்தனர். எப்போது ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.. எப்போது ஸ்டாலின் "மு. க ஸ்டாலின் எனும் நான்" என்று கூறுவார் என்றுதான் திமுகவினர் இத்தனை நாட்களாக ஏங்கிக்கொண்டு இருந்தனர்.

    பெயர்

    பெயர்

    ஆனால் இன்று முதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின்.. மு.க ஸ்டாலின் என்று சொல்லாமல் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்" என்று கூறி ஸ்டாலின் பதவி ஏற்றார். இதை மேடையில் இருந்த யாரும் எதிர்பார்கப்பவில்லை. ஏன் திமுக எம்எல்ஏக்கள், தலைவர்கள் கூட ஸ்டாலின் இப்படி தனது முழு பெயரை கூறி முதல்வராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

    அப்பா பெயர்

    அப்பா பெயர்

    அப்பா கருணாநிதியின் பெயர், தாத்தா முத்துவேல் பெயரை சேர்த்து சொல்லி ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் அசத்தினார். ஸ்டாலின் தனது பெயரை இப்படி கூறியது திமுகவினரை உணர்ச்சிவசப்பட வைத்தது. திமுகவின் அனைத்துமாக இருந்த, திமுகவை வழிநடத்திய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை ஸ்டாலின் நினைவு கூர்ந்து திமுகவினரை உற்சாகம் அடைய வைத்தது.

    ஸ்டேட்மென்ட்

    ஸ்டேட்மென்ட்

    திமுகவினர் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் இப்படி "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று கூறியது ஒரு ஸ்டேட்மெண்டாக பார்க்கப்படுகிறது. நான் வந்த வழியை மறக்கவில்லை.. இது கருணாநிதியின் ஆட்சி போல இருக்கும், அவரின் வழியை பின்பற்றுவேன் என்று ஸ்டாலின் சொல்லாமல் சொல்லி இருக்கிறார். Remember the root என்று ஆங்கிலத்தில் சொல்வதற்கு ஏற்றபடி.. ஸ்டாலின் தன்னுடைய "வேரை" நினைவு கூர்ந்து முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+