சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே கல்லில் 2 மாங்காய்.. டெல்லியில் "மெசேஜ்" தந்த முதல்வர் ஸ்டாலின்.. டக்கென திரும்பிய அதிமுக..!

டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அதிமுகவுக்கு மறைமுக மெசேஜ் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின், டெல்லி பயணத்தில் 2 விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகின்றன.. இது அதிமுக தரப்பையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இன்றைய தினம் அதிமுகவில் பொதுக்குழு குறித்த தீர்ப்பு பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. அடுத்து இந்த கட்சி என்னாகுமோ? இரு தலைவர்களும் சேருவார்களா? என்ற கவலையில் ரத்தத்தின் ரத்தங்கள் ஆழ்ந்துள்ளனர்.

Recommended Video

    தில்லியில் MK Stalin செய்தியாளர் சந்திப்பு

    மற்றொரு புறம் திமுகவினர் குஷியாக உள்ளனர்.. காரணம், நேற்றைய தினம், விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதல்வர் பேசிய பேச்சின் காரம் இன்னும் அடங்கவில்லை..

    தமிழ்நாட்டின் தானியங்கள்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த ஸ்பெஷல் பரிசுப் பெட்டகம்! தமிழ்நாட்டின் தானியங்கள்! பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த ஸ்பெஷல் பரிசுப் பெட்டகம்!

     கலைஞர் பிள்ளை

    கலைஞர் பிள்ளை

    டெல்லிக்கு நான் செல்வது காவடி தூக்கவோ, கைகட்டி வாய் பொத்தி நிற்கவோ கிடையாது.. கலைஞர் பிள்ளை நான். திமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த உறவும் கிடையாது. நம்முடைய கொள்கை கூட்டணியை யாரும் பிரிக்க முடியாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்த பட்ச சமரசத்தைக் கூட திமுக செய்து கொள்ளாது. திராவிட கருத்துகளை நிலை நிறுத்துவதற்காகத் தான் திமுக ஆட்சியில் உள்ளது. இந்த ஆட்சி இருப்பதே தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் திராவிட கருத்தியல்களை நிறைவேற்றத்தான். நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக இதை கூறுகிறேன் என்றார்.

     ஃபிளைட்

    ஃபிளைட்

    இப்படி சொல்லிவிட்டுதான் டெல்லிக்கு பிளைட் ஏறினார் முதல்வர்.. பிரதமர் மோடியை இன்று சந்தித்துள்ளார்... அப்போது 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கிய நிகழ்வுகள் குறித்த புத்தகத்தையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானியங்களையும் நெல் வகைகளையும் பிரதமருக்கு வழங்கினார் ஸ்டாலின்...மேலும், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.. நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார்.. இதைதவிர, நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

     2 ஷாக்குகள்

    2 ஷாக்குகள்

    ஆனால், இந்த 2 வித சந்திப்புகள் மூலம் அதிமுகவுக்கு, ஷாக் தந்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.. டெல்லி சென்ற முதல்வர், புதிதாக பதவியேற்ற குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி உள்ளார்.. திரௌபதி முர்மு, ஜெக்தீப் தன்கர் ஆகியோருக்கு ஆதரவாக வாக்களித்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கூட அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க டெல்லி செல்லாத நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி உள்ளதை பிற மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, அதிமுக, பாஜக தரப்பிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது.. இது வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

     அப்பாயிண்ட்மென்ட்

    அப்பாயிண்ட்மென்ட்

    அதேபோல, ஏற்கனவே டெல்லி சென்ற, மேலிட தலைவர்களை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டும் அது கிடைக்காமல், தோல்வியுடன் திரும்பினார் எடப்பாடி பழனிசாமி.. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தரப்பு மூலம் லாபி செய்யப்பட்டது. ஆனால், "அதிமுகவில் உரிமை பிரச்சனை கோர்ட்டிலும், தேர்தல் ஆணையத்திலும் இருப்பதால், இந்த விவகாரத்திலெல்லாம் தலையிட முடியாது என்பதால், எடப்பாடியை மேலிட தலைவர்கள் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. அதுபோலவேதான் ஓபிஎஸ்ஸையும் அவர்கள் சந்திக்கவில்லை..

     2 மாங்காய்

    2 மாங்காய்

    கூட்டணியில் உள்ள அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவருமே சந்திக்காத பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... அதுவும் நேற்றைய தினம், பாஜகவை சரமாரியாக விமர்சித்துவிட்டு, இன்றைய தினம் பிரதமரை நேருக்கு நேர் சந்தித்து பேசியதும், அதிமுகவை உற்றுநோக்க கவனித்துள்ளது.. இதையடுத்து, திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்றும், தாங்கள்தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி என்பதையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளதாகவே தெரிகிறது.. தமிழக மக்களின் நலன்கருதியே டெல்லிக்கு சென்றாலும், இந்த பயணத்தின் மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய் அடித்துள்ளார் தமிழக முதல்வர் என்கிறார்கள் திமுகவினர்..!

    English summary
    Who are the 3 Leaders and Tamil nadu Chief Minister MK Stalin meet pm Modi, President டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அதிமுகவுக்கு மறைமுக மெசேஜ் தந்துள்ளார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X