அந்த 3 பேர் இருக்குறப்ப.. எப்படி கூட்டணி வைக்கிறது? பாஜக துரத்த துரத்த! அதிமுக தயங்குவது ஏன்? காரணம்
சென்னை: அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருவதாக ஒரு பக்கம் செய்திகள் வரும் நிலையில்.. இந்த கூட்டணிக்கு 3 பேர்தான் தடங்கலாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க தேமுதிக மற்றும் பாமகவுடன் ஆலோசனை செய்து வருகிறதாம். அதிமுகவிடம் கூட்டணி தொடர்பாக நாங்கள் பேசவில்லை என்று பாமக, தேமுதிக வெளிப்படையாக மறுத்தாலும், திரைமறைவாக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம் .

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. ஆனால் இதில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.
இன்னொரு பக்கம் அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பாமக நினைக்கிறதாம். லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு சேலம் தொகுதியை கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது. மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு டுக்க வேண்டும் என்று பாமக சார்பாக அதிமுகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..
ராஜ்ய சபா பதவிக்கு அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ராஜ்ய சபா மட்டுமல்ல.. சேலம் தொகுதியில் எடப்பாடி ஆள்தான் நிற்பார். அங்கே கூட்டணி கட்சிகளுக்கு இடம் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. எனவே வேறு தொகுதி கேளுங்கள் என்று அதிமுக கறார் காட்டுகிறதாம்.
பாஜக கூட்டணி: இன்னொரு பக்கம் அதிமுகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறதாம். ஆனால் இந்த கூட்டணிக்கு 3 பேர்தான் தடங்கலாக இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக - அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக்கலாம் என்கிறார்கள் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் சிலர். குறைந்தது அதற்கான முயற்சிகளாவது நடக்கும் என்கின்றனர். கர்நாடகா உட்பட தென்னிந்தியாவில் பாஜக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தொடர் தோல்விகளால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வருகிறதாம்.
2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல இருக்கிறதாம். அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன காரணம்?: 1. தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜக கருதுகிறது, இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. 2, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை. 3. 2024ல் கூட்டணி இருந்தால்தான் , 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். 4. தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வருவதாக கூறப்படுகிறது.
3 பேர் தடங்கல்: ஆனால் பாஜகவுடன் இருக்கும் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் இருக்கும் வரை அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது என்ற எண்ணத்தில் அதிமுக தரப்பு நினைக்கிறதாம். அதோடு இல்லாமல் அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்வதை எடப்பாடி விரும்பவே மாட்டார் என்கிறார்கள்.
இந்த 3 பேர்தான் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகாமல் தடங்கலாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன .
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications