Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛கோடீஸ்வர வேட்பாளர்கள்’’ டாப் 10 பட்டியலில் தமிழகத்தின் 5 பேருக்கு இடம்! யாரெல்லாம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் ‛டாப் 10' கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் டாப் 3ல் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், டாப் 10ல் 5 பேர் தமிழகத்தை சேர்ந்த வேட்பாளர்களாகவும் உள்ளன. இந்த பட்டியலில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஜுன் 1ல் நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Who are the top 10 richest candidates for 1st phase lok sabha election 5 candidates from Tamil Nadu

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதியே தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிற மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பார்த்தால் நாடு முழுவதும் மொத்தம் 102 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

டாப் 10ல் 5 பேர் தமிழகம்: இந்நிலையில் தான் முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளில் போட்டியிடுவோின் சொத்து மதிப்பு அடிப்படையில் கோடீஸ்வரர் வேட்பாளர்கள் பட்டியலை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் பகிர்ந்துள்ளது. அதன்படி முதற்கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 1618 வேட்பாளர்களின் சொத்து மதிப்பு அடிப்படையில் டாப் - 10 வேட்பாளர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 5 வேட்பாளர்கள் இடம்பிடித்துள்ளனர். குறிப்பாக டாப் 3ல் 2 பேர் தமிழகத்தை சேர்ந்த வேட்பாளர்கள் உள்ளனர். அதன் விவரம் வருமாறு:

முதலிடம்: இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் நகுல் நாத். மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் மகன் இவர் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதி எம்பியாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் நகுல் நாத்துக்கு ரூ.716 கோடி சொத்து உள்ளது.

2வது -3வது இடம்: இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஈரோடு லோக்சபா தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் உள்ளார். இவரது சொத்து மதிப்பு என்பது ரூ.662 கோடியாகும். இதில் 3வது இடத்தில் சிவகங்கை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் 3வது இடத்தில் உள்ளார். இவர் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.தேவநாதனின் சொத்து மதிப்பு ரூ.304 கோடியாகும்.

4வது - 5வது இடம்: உத்தரகாண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் தொகுதியின் பாஜக வேட்பாளர் ராய் லட்சுமி ஷா 4வது இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.206 கோடியாகும். இதில் 5வது இடத்தில் உத்தர பிரதேச மாநிலம் ஷகரன்பூர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மஜித் அலி உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.159 கோடியாகும்.

6வது இடம்: இந்த பட்டியலில் 6வது இடத்தில் வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.152 கோடியாகும். இவர் வேலூர் தொகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

7 வது - 8 வது இடம்: இந்த வரிசையில் 7 வது இடத்தில் கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.135 கோடியாகும். மேலும் 8 வது இடத்தில் மேகாலயாவின் வீல்லாங் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வின்சென்ட் பலா உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.125 கோடியாகும்.

9வது - 10வது இடம்: இந்த பட்டியலில் 9 வது இடத்தில் இருப்பவர் ராஜஸ்தான் மாநிலம் நாகவ்ர் தொகுதி வேட்பாளர் ஜோதி மிர்தா. இவரது சொத்து மதிப்பு ரூ.102 கோடியாகும். மேலும் 10 வது இடத்தில் சிவகங்கை லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் சிட்டிங் எம்பியான கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் மீண்டும் சிவகங்கையில் போட்டியிடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு ரூ.96 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+