2 மேஜர்.. "அவரை விட்றாதீங்க".. மேலிடத்துக்கு எகிறிய மேட்டர்.. திமுக உஷார்.. "லோட்டஸ்" மலர்ந்துடுமோ?
திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் 2 வியூகங்களை கையில் எடுத்துள்ளதாம் தமிழக பாஜக
சென்னை: திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் தமிழக பாஜக, 2 வியூகங்களை கையில் எடுத்துள்ளதாம்.. ஆனால், பாஜகவையே அசரடிக்கும் அளவுக்கு திமுக எதற்கும் தயாராகவே அரசியல் களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, தனித்து போட்டியிட்ட வரலாறு கிடையாது.. ஏதாவது ஒரு திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தே தேர்தலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலும் கட்டாயத்திலும் உள்ளது.
அதேசமயம், தங்களின் அந்த பலவீனத்தை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதும் இல்லை.. இப்போது அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி ஒன்றிணை
வதில் விருப்பம் காட்டி வருகிறது.

3வது டீம்
ஆனால், எடப்பாடி பழனிசாமி எப்போதும் போலவே தன்னுடைய பிடிவாதத்தை தொடர்வதால் கடுப்பாகி உள்ளதாக தெரிகிறது.. இப்படியே அவரது பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது.. மற்றொருபக்கம் திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியிலும் பாஜக இறங்கி உள்ளது..

PLAN A
அந்தவகையில், அண்ணாமலை 2 விதமான நெருக்கடியை திமுகவுக்கு தர முயற்சிப்பதாக தெரிகிறது.. ஒன்று நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் நெருக்கடி தந்து திமுகவை திணறடிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.. தற்போது கோவை சிலிண்டர் விவகாரத்தில், திமுக அரசை சரமாரியாக அண்ணாமலை குற்றஞ்சாட்டி வருகிறார்.. ஆனால் திமுக தரப்பிலோ, "கையில் உள்ள ஆதாரங்களை முன்கூட்டியே போலீசாரிடம் ஏன் அண்ணாமலை தரவில்லை? போலீசுக்கு தகவல்கள் தெரிவற்கு முன்பேயே இவருக்கு எப்படி தகவல்கள் கிடைக்கின்றன.. என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்" என்று தன் சந்தேகத்தை வெளிப்படுத்தி, கோரிக்கையும் வெளிப்படுத்தியிருந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

PLAN B
இந்த விஷயத்தைதான் 2 விதமாக டீல் செய்து திமுகவுக்கு செக் வைக்க முயற்சி செய்கிறாராம் அண்ணாமலை.. அதன்படி, இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னிடம் உள்ள ஆதாரங்களை என்ஐஏவிடம் கொடுக்க தயார்... ஆனால், மாநில அரசு சம்மன் அனுப்பினால் மட்டும் ஆதாரங்களை கொடுக்கிறேன். ஆதாரங்களை கொடுத்தால் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்... அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படையாக சொல்லாத பட்சத்தில், அண்ணாமலை சொல்வது உண்மைதானா? அல்லது வழக்கம்போல் இதுவும் காற்றில் பறக்கக்கூடிய குற்றச்சாட்டா? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.

கச்சித மூவ்
மற்றொருபக்கம், மேலிடம் மூலம் திமுகவுக்கு நெருக்கடி தர போகிறதாம் பாஜக.. "அண்ணாமலையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்" என்று செந்தில்பாலாஜி கூறியிருந்ததால், செம டென்ஷன் ஆகிவிட்டாராம் அண்ணாமலை.. அதனால், நடந்த விஷயங்கள் அத்தனையையும், டெல்லி மேலிட தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, செந்தில் பாலாஜியை இப்படியே பேசவிட்டுக் கொண்டிருந்தால், திமுகவில் இருக்கும் மற்றவர்களுக்கும் துணிச்சல் வந்துவிடும். இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்ட வேண்டுமானால் செந்தில் பாலாஜியை அடக்கிவைக்க வேண்டும் என்றும் இங்கிருந்து சொல்லப்பட்டதாம்..

டீம் ரெடி
அனைத்தையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட அந்த தலைவர், உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக கமலாலயத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளாராம்.. இதையடுத்து நிலுவையில் உள்ள வழக்கு, விசாரணைகளில் தீவிரம் காட்டி செந்தில்பாலாஜி ஆஃப் செய்யலாம் என நினைக்கிறதாம் மேலிடம்.. எந்த வழக்கு, விசாரணையை தோண்டி எடுத்து வந்தாலும், சட்டரீதியாகவே அனைத்தையும் எதிர்கொண்டு வருவதால், தெம்பாகவே உள்ளதாம் செந்தில் பாலாஜி தரப்பு.. அதேசமயம், தொடர்ந்து தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜகவுக்கும் சரியான பதிலடியை தர திமுக டீம் தயாராகி வருகிறதாம்...!!












Click it and Unblock the Notifications