Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தம்பி, பாஜகவை பேசாதீங்க".. டோட்டலா மாறின எடப்பாடி.. திடீர்னு பறந்த உத்தரவு.. காரணம் யார் தெரியுமா

தனியரசு ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ்ஸைவிட, டிடிவி தினகரனைவிட, சசிகலாவைவிட கூடுதலாக பாஜகவை ஆதரிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த தலைவர் தனியரசு தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அறியும் வகையில், அவருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.. மத்திய அரசின் சட்ட ஆணையம் எழுதியிருந்த இந்த கடிதத்தில், எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் என்று பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழை, எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியிருந்த நிலையில், அதில், இடைக்கால பொதுச்செயலாளர் என்றே மத்திய அரசு சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, கொங்கு இளைஞர் பேரவை தனியரசு ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் சுருக்கம்தான் இது:

வலிமை

வலிமை

"சட்டப்படியும், விதிப்படியும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.. முடிந்தால் தனிக்கட்சி துவங்கி பார் என்று எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்டதே ஓபிஎஸ்தான்.. அதனால், ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்க வேண்டிய அவசியம் கிடையாது.. அதிமுக பலவீனப்பட வேண்டும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் எடப்பாடி.. அதிமுக வலிமை பெற்றுவிடக்கூடாது என்று நினைக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தனிக்கட்சி தொடங்க வேண்டுமே தவிர ஓபிஎஸ் கிடையாது.

சிதறிய பாஜக

சிதறிய பாஜக

பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய அரசு எழுதியுள்ள கடிதமானது, சட்டத்தை மீறிய அழைப்பாகவே தெரிகிறது.. இந்த விஷயத்தில் யாரோ டெல்லியில் இருந்து இயக்குகிறார்கள் என்று தெரிகிறது.. அல்லது பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும், எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் பகைத்து கொள்ளாமல் 2 தலைமையையும் அரவணைத்து பயணிக்கிறார்கள்.. அதனால் யார் எதிரி, யார் நண்பன் என்பதை வெளிப்படையாக சொல்லாமல், அதிமுக தொண்டர்களைதான் பாஜகவினர் குழப்புகிறார்கள்.. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு பிரிவுகளாக அதிமுகவை சிதறடித்தது பாஜகதான்..

கப்சிப் மோடு

கப்சிப் மோடு

அதன் உச்சம்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதெல்லாம். எனவே, நடந்து வரும் நிகழ்வை ஓபிஎஸ் கண்டிக்க வேண்டும், முறைப்படி தேர்தல் ஆணையத்திலும் முறையிட வேண்டும். ஓபிஎஸ் இது விஷயமாக துணிந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையே தொண்டர்கள் விரும்புகிறார்கள், நானும் விரும்புகிறேன்.. பாஜகவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மட்டுமே செயல்படுவதை போல பிம்பம் எழுந்தது.. ஆனால், உண்மையை சொல்லப்போனால், பாஜகவுக்கு எதிராக இதுவரை எடப்பாடி பேசவில்லை.. பாஜகவை எதிர்க்கவும் இல்லை.. ஆளுநரையும் எதிர்த்து பேசவில்லை..

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

பாஜகவை எதிர்ப்பதாகவோ, அமித்ஷா, மோடியை எதிர்ப்பதாகவோ, தன்னுடைய எழுத்தாலும், பேச்சாலும், செயலாளரும் எடப்பாடி வெளிப்படுத்தவேயில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள 2ம் கட்ட தலைவர்கள், பாஜகவை எதிர்த்து வந்ததால்தான், உடனடியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தையே கூட்டினார் எடப்பாடி.. அந்த கூட்டத்தில் பாஜகவையும், ஓபிஎஸ்ஸையும் தவறாக பேசக்கூடாது என்றும் எடப்பாடி தன்னுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்... ஓபிஎஸ்ஸை திட்டக்கூடாது என்று எடப்பாடி சொன்னாரே, இது யாருடைய விருப்பம் தெரியுமா? இது பிரதமர் மோடி, அமித்ஷாவின் விருப்பம்.. இதை அறிக்கை வெளியிட்டு சொல்வதற்கு பதிலாக இப்படி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி அறிவித்துள்ளார்.

பலவீனம்

பலவீனம்

திராவிட இயக்கத்தின் வடிவம் பெற்றிருக்கிற அதிமுகவுக்கு தலைமையேற்கும் எடப்பாடி பழனிசாமி, திராவிட அடிப்படை கோட்பாடுகளை சமரசம் செய்து கொண்டு, இன்னும் சொல்லப்போனால், அதற்கு நேர் எதிராக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்ஜிஆர், மறைந்த ஜெயலலிதா கொண்டிருந்த அந்த கட்சியின் கொள்கைக்கு எதிராக, பாஜகவின் இந்துத்துவா கோட்பாட்டை சார்ந்து, ஆதரித்து இயக்கம் நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, பலவீனமான நபர் தானே? அப்படியான பலவீனமான எடப்பாடி, கொள்கை லட்சியம் உள்வாங்காத பிழைப்புவாத அரசியல்வாதி எடப்பாடி, எப்படி அதிமுகவுக்கு தலைமையேற்ற, பாஜகவை எதிர்த்துவிடுவார்? அதனால், ஓபிஎஸ்ஸைவிட, டிடிவி தினகரன், சசிகலாவிட, கூடுதலாக பாஜகவை ஆதரிப்பது எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.

முனுசாமி

முனுசாமி

தொடர்ந்து தனியரசு பேசும்போது, "தம்பிதுரை சிவி சண்முகம், கேபி முனுசாமி போன்றோரெல்லாம் திராவிட கருத்துக்களுடன் உடன்பட்டவர்கள்.. அதனால் பாஜகவுடன் கொள்கை ரீதியாக சமரசம் செய்து கொள்வார்கள் என்று நான் கருதவில்லை.. அதனால், சிவி சண்முகத்திடம் உள்ள அதே கருத்து, எடப்பாடியிடமும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை.. சிவி சண்முகம் பாஜகவுக்கு எதிராக பேசினாலும், அப்படி பேசாதீங்க தம்பி என்றுதான் சொல்வார்.. அதை தடுத்தும் நிறுத்துவார் எடப்பாடி பழனிசாமி. இதில், சிக்கல் என்னவென்றால், ஓபிஎஸ்ஸையும், டிடிவி தினகரனையும் இணைத்து கொள்ளுமாறு பாஜக சொல்வது, எடப்பாடிக்கு பிடிக்கவில்லை..

 ம்ஹூம், நோ சான்ஸ்

ம்ஹூம், நோ சான்ஸ்

அதனால்தான், அதிமுகவின் 2ம்கட்ட தலைவர்கள் எல்லாம் பாஜகவை எதிர்ப்பது போல எதிர்க்க வைத்துள்ளார்.. அப்படி பாஜகவை எதிர்த்தால், ஓபிஎஸ், டிடிவி விவகாரத்தை தன்னிடம் திணிக்க மாட்டார்கள் என்றும் எடப்பாடி நம்புகிறார்.. அதாவது 2ம் கட்ட தலைவர்களை பாஜக மேலிட தலைவர்களிடம் சிக்கவைத்துவிட்டு, இந்த விஷயத்தில் எடப்பாடி தப்பிக்க பார்க்கிறார்.. மற்றொருபுறம் பேரம் பேசவும் தயாராகிறார்... உதாரணத்துக்கு, டிடிவி தினகரனையும் ஓபிஎஸ்ஸையும் சேர்த்து கொள்ள மாட்டோம் என்றும், அதிமுகவின் முழு அதிகாரமும் எடப்பாடிக்கு மட்டுமே சொந்த என்று நீதிமன்ற தீர்ப்பையும், தேர்தல் ஆணையத்தையும் பாஜக சொல்லவைத்துவிட்டால், இப்படி ஒரு பிரச்சனையே அதிமுகவில் வெடிக்காது.. 100 விழுக்காடு சிவி சண்முகமும் பாஜகவுக்கு எதிராக சண்முகம் பேசமாட்டார், அப்படியே பேசினாலும் அவர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி நீக்கிவிடுவார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+