ஒண்டிக்கு ஒண்டி வரியா? ஓபிஎஸ் பின்னால் உள்ள மாஸ்டர்மைண்ட் "அவர்தான்".. புட்டு புட்டு வைத்த "புள்ளி"
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்கு பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக எடப்பாடி ஆதரவாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல் உச்சம் அடைந்துள்ளது. கட்சிக்குள் விரைவில் நிர்வாகிகள் பெரிய அளவில் அணி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது. இதில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் பக்கம் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் 35 பேர் தாவ போவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரலாம் என்ற நம்பிக்கையில் இவர்கள் அணி மாற உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பின்னால் இருந்து சிலர் இயக்குவதாக எடப்பாடி ஆதரவாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஓ பன்னீர்செல்வத்திற்கு மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் உதவி செய்கிறார். மறைமுகமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு வகைககளில் ஸ்டாலின் உதவி செய்கிறார். தன்னை எதிர்க்க கூடிய, தனக்கு எதிராக அரசியல் செய்ய திறமை கொண்ட ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஸ்டாலினுக்கு தெரியும். மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் எடப்பாடி என்று ஸ்டாலினுக்கு தெரியும்.

சப்போர்ட்
கட்சிக்கு உள்ளேயும் எடப்பாடிக்குத்தான் சப்போர்ட் என்று எல்லோருக்கும் தெரியும். இதனால்தான் ஒரு சில கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளும் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை. அப்படி செல்வாக்கு இல்லாத தலைவர் ஏதாவது செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட 40 எம்எல்ஏக்கள், 35 எம்எல்ஏக்கள் தயாராகிவிட்டனர் என்று செய்தி வந்தது. எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் செல்ல போவதாக செய்தி வந்தது.

கேபி முனுசாமி
இன்னும் ஒரு சில நாட்களில் இவர்கள் சென்றுவிடுவார்கள் என்று செய்திகள் வந்தது. இதெல்லாம் பொய்யானது. ஊடகத்தை கையில் வைத்துள்ள அரசு மூலம் ஓபிஎஸ் இந்த பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இப்போது மூன்று எம்எல்ஏக்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். புதிதாக சேர்ந்தவர் எப்படி ஓ பன்னீர்செல்வம் பக்கம் எப்படி சென்றார் என்று அவரின் மனசாட்சிக்குத்தான் தெரியும். அவருக்கு செலவு பண்ணவே மனசு வராது.

என்ன சொன்னார்?
இப்போது எப்படி செலவு செய்கிறார் என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் ஒருவர் ஒண்டிக்கு ஒண்டி வருகிறாயா என்று கேட்கிறார். அவருக்கு என்ன ஆதரவு இருக்கிறது. அவர் பேசுவதை எல்லாம் கேட்டால் வேதனையாக இருக்கிறது. புகழேந்தி பேசுவதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவருக்கு எந்த தகுதியும் இல்லை. ஓபிஎஸ் தானும் பதவியை ராஜினாமா செய்கிறேன்.. எடப்பாடி செய்ய தயாரா என்று கேட்டுள்ளார். அவரின் பேச்சு முதிர்ச்சியானதாக இல்லை.

சசிகலா
ஒற்றைக்கு ஒற்றை வரியா என்று கேட்கிறார். ஒற்றைக்கு ஒற்றை வர அவர் தான் தயார் இல்லை. அதற்கு தைரியம் இல்லாமல்தான் அவர் சசிகலா உதவியை நாடுகிறார். அன்று சசிகலாவை எதிர்த்தது இவர்தான். அப்படி சசிகலாவை எதிர்த்த அதே நபர் இன்று ஏன் அதே சசிகலாவை அழைக்க வேண்டும். ஓ பன்னீர்செல்வத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது, என்று கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications