இடும்பாவனம் கார்த்தி ஒரே போடு.. "பாஜகவை பேசினால், திமுகவுக்கு ஏன் வலிக்குது"? உடன்பிறப்புகள் டென்ஷன்
சென்னை: பாஜகவின் பி-டீம் நாம் தமிழர் கட்சி என்று திராவிடர் கட்சியினர் சொல்லி வருகிறார்கள்.. பாஜகவின் பி-டீம் திமுக என்று நாம் தமிழர் கட்சி சொல்லி வருகிறது. இது தொடர்பான விவாதம்தான் இன்றைய தினம் இணையத்தில் கிளம்பி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு சீமான் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, பாஜகவுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
தேர்தல் சமயங்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், "தனி ஒருவராகவே" வலம்வந்து கொண்டிருந்த சீமான், பாஜகவுக்கு எதிரான மாற்று அணி உருவானால், கூட்டணியில் சேர்வது பற்றி சிந்திப்போம் என்று கூறியிருந்தது வியப்பை தந்தது..

மாற்று அணி: அதில், "வரும் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்... கடந்த பாராளுமன்ற தேர்தலில் இப்படி ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை "பிரதமர் வேட்பாளர்" என்று ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது.. மறுபடியும், வரும் தேர்தலில் அதுபோல் ஒரு மாற்று அணியை உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.. அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த நேரத்தில் கூட்டணியில் சேரலாமா என்பது குறித்து சிந்திப்போம்" என்று பேசியிருந்தார் சீமான்.
அப்படியானால், காங்கிரஸ், திமுக கூட்டணியுடன் சீமான் கூட்டணி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.. ஆனால், திமுக பக்கம், பந்தை திருப்பியடித்தார் சீமான்.. இத்தனை காலமும், பாஜகவின் பி-டீம் என்று சீமானை பலரும் விமர்சித்து வரும்நிலையில், பாஜகவின் பி-டீம் திமுக என்று அடுத்த ஷாக்கை கிளப்பினார்.
சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, முதல்வர் ஸ்டாலினிடமும், அமைச்சர் உதயநிதியிடம் நெருக்கமாக பேசியிருந்தார்.. இதை அதிமுக தவிர மற்ற கட்சிகள் விமர்சித்தன.. அப்போது, நாம் தமிழர் கட்சி சீமான் ஒரு படிமேலே போய், திமுகவின் கள்ளக்காதலிதான் பாஜக என்று ஒரே போடாக போட்டார்..
கள்ளக்காதலி: "திமுகவுக்கும் - பாஜகவுக்கும் இடையே திரைமறைவில் தொடர்பு இருக்கிறது, பிரதமர் மோடி சென்னை வருகையின்போது அது வெளிப்படையாகவே புரிந்திருக்கும்.. காங்கிரஸை எல்லாருக்கும் தெரிஞ்சு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காங்க.. பிஜேபியை கள்ளக்காதலியா வெச்சிருக்காங்க.. பொண்டாட்டி வீட்டுக்கு கார் போகிறது போல் தெரியும், டபக்குன்னு திரும்பி அப்படியே திரும்பி கள்ளக்காதலி வீட்டுக்கு அந்த கார் போய்விடும்.. அதான் இவங்க.. பார்த்தீங்க இல்ல என்ன நடந்ததுன்னு.. மொத்தமா போய் அங்கே விழுந்துட்டாங்க'' என்று சீமான் விமர்சித்திருந்தார்.
சீமான் இப்படி பேசியதுமே, திமுக தரப்பில் சோஷியல் மீடியாவில் கண்டனங்கள் வலுத்தன.. பாஜகவின் பி-டீமாக, தொடர்ந்து செயல்பட்டுவருவதை மறைக்கவே, தேவையில்லாமல் திமுக மீது சீமான் பாய்வதாக கருத்துக்கள் பதிவாகின.. எனினும், பாஜகவுடன் திமுக அரசு மறைமுகமாக நட்பு கொண்டிருப்பதாகவும், பாஜகவின் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு திமுக அரசு துணை போவதாகவும் நாம் தமிழர் கட்சி விமர்சித்து வருகிறது.
இடும்பாவனம் கார்த்தி: இதைதான் இன்றைய தினம், இடும்பாவனம் கார்த்தியும் சுட்டிக்காட்டி உள்ளார்.. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில செயலாளராக இருப்பவர் இடும்பாவனம் கார்த்தி... தன்னுடைய பேச்சுகளிலும், டிவி விவாத நிகழ்ச்சிகளிலும், பாஜக மற்றும் திராவிட கட்சிகளை கடுமையாக தாக்கி பேசி வருபவர்.. அந்தவகையில், கோவையில் பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து SDPI நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 2 பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாக பேசியதாக உக்கடம் போலீசில் புகார் தரப்பட்டுள்ளது..
அதன் பேரில் இடும்பாவனம் கார்த்தி மீது பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்த குற்றத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படலாம் என்கிறார்கள். இந்த நடவடிக்கை குறித்து இடும்பாவனம் கார்த்தி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்..
ஏன் வலிக்குது: அதில், ''இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகப் பேசியதாகக்கூறி, என் மீது கோவை, உக்கடத்தில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருக்கிறது திமுக அரசு. நான் பேசியது பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து; முழுக்க முழுக்க பாஜகவை! அதுசரி! பாஜகவைப் பேசினா திமுகவுக்கு ஏன் வலிக்குது?'' என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு திமுக தொண்டர்கள் திரண்டு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. அதாவது, பாஜகவின் பி-டீம் யார்? என்று மாறி மாறி விமர்சித்தும், கருத்துக்களை பதிவிட்டும் வருகிறார்கள்..!!
-
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications