ஐடி நிறுவன அதிகாரி டூ திமுக! கட்சியில் தேடி வந்த மாநிலப் பொறுப்பு! பூரிப்பில் பூர்ண சங்கீதா!
சென்னை: ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருந்த பூர்ண சங்கீதாவுக்கு திமுக மாணவரணியில் மாநிலப் பொறுப்பு தேடி வந்துள்ளது.
கட்சிக்காக களப்பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதாலும், அவரது பரம்பரையே திமுக குடும்பம் என்பதாலும் தலைமை இந்த வாய்ப்பை கொடுத்துள்ளது.
திமுகவில் இணைய வேண்டும் என்பதற்காக ஐடி நிறுவன பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர் பூர்ண சங்கீதா என்பது கூடுதல் தகவலாகும்.

திமுக மாணவரணி
திமுக மாணவரணியில் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள 2 பெண்களில் பூர்ண சங்கீதாவும் ஒருவர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த இவர், கருணாநிதியால் சிறைப்பறவை என்று செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த திமுகவின் மூத்த முன்னோடி எஸ்.எஸ்.தென்னரசுவின் பேத்தியாவார். இதேபோல் பூர்ண சங்கீதாவின் தந்தை சின்னமுத்து சிங்கம்புணரி நகர திமுக செயலாளராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

திமுக குடும்பம்
இப்படி திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த பூர்ண சங்கீதா சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் முன்னணி ஐடி நிறுவனங்களில் மனிதவள பிரிவு அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். சிறுவயது முதலே திராவிட இயக்க சித்தாந்தங்கள் மீது பற்றுக் கொண்ட அவர் நேரடியாக அரசியலுக்கு வராவிட்டாலும் கூட திமுக அனுதாபியாக சமூக வலைதளங்களில் வலம் வந்திருக்கிறார். இந்நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் நேரடி அரசியலுக்கு வந்த இவர் திமுகவில் மாநில சுற்றுச் சூழல் அணி துணைச் செயலாளரானார்.

களப்பணி
இப்போது கட்சியில் வழங்கப்பட்ட புரோமோஷனாக திமுக மாணவரணி மாநில துணைச் செயலாளர் பதவி கிடைத்துள்ளது. ஐடி நிறுவன முன்னாள் ஊழியர் என்ற அடிப்படையில் திமுக தகவல் தொழில் நுட்ப அணியில் இவருக்கு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களப்பணி மீது இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக மாணவரணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது தாத்தா எஸ்.எஸ்.தென்னரசு சிறுகதை மன்னன் என பெயரெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புது முகங்களுக்கு வாய்ப்பு
திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் இந்த முறை பல புதுகங்களுக்கு ஒவ்வொரு அணியிலும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் முயற்சியில் ஸ்டாலின் இறங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications