சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முக்கிய புள்ளி"யை தட்டி தூக்கிய பாஜக.. காரணமே "கருப்பு"தானாமே.. திமுக கைநழுவ விட்டுடுச்சோ..?

பாஜக கருப்பு முருகானந்தம் தஞ்சையில் திமுகவுக்கு ஷாக் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஷாக் தந்துள்ளது தமிழக பாஜக.. இதே ஸ்பீடில் சென்றால், நமக்கு சிக்கல்தான் என்பதையும் திராவிட கட்சிகள் உணர தொடங்கி உள்ளன.

"ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திமுகவுக்குத்தான் முதல் பாதிப்பு.. ஏனென்றால், ரஜினியின் ரசிகர்கள் பெரும்பாலானோர் திமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்கள்.." என்று ஒருமுறை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சொல்லி இருந்தார்.

இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல் இந்தியர்களின் ஆயுள் 5 வருசம் குறையுமாம்.. காரணம் என்ன தெரியுமா? - சிகாகோ பல்கலை. அதிர்ச்சித் தகவல்

ஆனால், ரஜினி ரசிகர்கள் அப்படி இல்லை.. திமுகவை அந்த சமயம் நேர் விரோதமாக பார்த்தார்கள்.. எந்த ஒரு ரஜினியின் அறிவிப்பையும் அண்ணா அறிவாலயம் முன்பு கொண்டு போய் போஸ்டர் அடித்து ஒட்டி வந்தனர். ரஜினியை கடைசி வரை அவர்கள் நம்பினர்.

 நொந்து போன ரசிகர்கள்

நொந்து போன ரசிகர்கள்

மற்றொரு பக்கம், ரஜினியின் அரசியல் வருகையால் நொந்து போன ரசிகர்கள், இதே திமுகவில் இணைந்த நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறின.. "மக்களுக்காக செயல்படும் நோக்கில்தான் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தோம்... ஆனால் இப்போது அது செயல்படாத இயக்கமாக இருக்கிறது.. அதனால் மக்களுக்காக செயல்படும் இயக்கமாக திமுக இருப்பதால், திமுகவில் இணைந்திருக்கிறோம் என்று அவர்கள் ஒருமுறை விளக்கமும் தந்திருந்தனர்.

 ஜோசப் - தூத்துக்குடி

ஜோசப் - தூத்துக்குடி

அந்த வகையில், தூத்துக்குடி ரசிகர் மன்ற பிரபலம் ஜோசப்பை, லட்டு போல அள்ளிக் கொண்டது திமுக.. ரஜினி மன்றத்தின் மிக மிக முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். கட்சியில் சேர்ந்ததுமே அவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.. அன்று திமுகவின் அதே ரூட்டைதான் இன்று பாஜகவும் பிடித்துள்ளது.. தஞ்சையை குறி வைத்து தன்னுடைய அரசியலை நகர்த்தியது தமிழக பாஜக.

 பாஜக ஸ்கெட்ச்

பாஜக ஸ்கெட்ச்

தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி கணேசன் மூலம் அந்த மாவட்டத்தில் இருக்கும், மொத்த ரஜினி ரசிகர்களையும் பாஜகவிற்கு இழுக்கும் வேலை தீவிரமாக நடந்து வந்தது.. இந்நிலையில், ரஜினி கணேசன் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்... இதை அண்ணாமலையே தன்னுடைய ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்..

 குஷியில் பாஜக

குஷியில் பாஜக

"சூப்பர்ஸ்டாரின் சுறுசுறுப்பான ரசிகரான தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. ரா.ரஜினி கணேசன் அவர்களின் தலைமையில் ஓய்வு அறியாத நாட்டுக்கு உழைக்கும் நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரத்தை வலுப்படுத்த சுந்தர சோழபுரம் தஞ்சை மாநகரில் பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆன்மீக அரசியல் பற்றுக்கொண்டு தேசியத்தை வலுப்படுத்த இணையம் வந்தவர்களை தமிழக பாஜக சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 கருப்பு முருகானந்தம்

கருப்பு முருகானந்தம்

இந்த ரஜினி ரசிகர்களின் இணைப்புக்கு பின்னணியில் உள்ள அரசியல் என்ன? பாஜகவின் கணக்கு என்ன என்பதுதான் இங்கு முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. ரஜினி ரசிகர்களை பாஜகவில் இணைப்பதற்கான பொறுப்பை, பாஜகவின் முக்கியப் பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான் கையில் எடுத்தார்.. அவர்தான், இது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வந்தார்.. வரப்போகும் எம்பி தேர்தலில் தஞ்சையை குறி வைத்து, முருகானந்தம் காய் நகர்த்தி வருகிறார்..

 கருப்பு முருகானந்தம் பிளான்

கருப்பு முருகானந்தம் பிளான்

எப்படியும் இந்த முறை சீட்டை வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளதாக தெரிகிறது.. அதற்காகவே, மேலிடத்தின் கவனத்தை ஈர்க்க, இப்போதே இதுபோன்ற தீவிரத்தை முன்னெடுத்து வருகிறாராம். அடுத்ததாக, தஞ்சையை போலவே, பல மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை பாஜகவில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.. இதற்கான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்கும்போது, ரஜினி ரசிகர்கள் ஆதரவு தங்களுக்குதான் என்பதை பிரகடனப்படுத்தி கொள்ளும் பாஜகவின் முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது..

 திமுகவுக்கு ஷாக்

திமுகவுக்கு ஷாக்

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்த பிறகு, எப்படியும் ரசிர்கள் திமுக பக்கம்தான் தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், திமுகவை இந்த விஷயத்திலும் முந்திக் கொண்டு பாஜக, அரசியல் செய்துள்ளது.. வாரிசுகள், அதிருப்தியாளர்களை மட்டும்தான் குறி வைத்து, பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் என்று நினைத்துகொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக இந்த ரஜினி ரசிகர்கள் இணைந்துள்ளது, அதிமுக, திமுகவுக்கே சற்று ஷாக்தானாம்.. இதையடுத்து, திமுக தரப்பும் தன் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளதாம்.. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Who is tanjore BJP senior leader and What is the reason for the DMK and AIADMK upsets
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X