"கேட்டுச்சா".. ஓ.. அவங்கதானாமே.. சசி சொன்ன ஒரே வார்த்தை.. மிரண்ட பாஜக.. அரண்ட அதிமுக.. மருண்ட திமுக
சசிகலா ஒரே ஒரு பேட்டியை தந்து, அதிமுக, பாஜக, திமுகவுக்கு ஷாக் தந்துள்ளார்
சென்னை: இன்று சசிகலா ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில் ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்.. தமிழகத்தின் மொத்த கட்சிகளும் டோட்டல் ஆஃப்..!
சிறையில் இருந்து வெளிவந்ததில் இருந்தே, சசிகலா தலையெடுப்பதை பாஜக விரும்பவில்லை என்று ஏற்கனவே சொல்லப்பட்டது..
காரணம், சசிகலாவுக்கு தென்மண்டலங்களில் மட்டுமே ஆதரவு இருப்பதால், அவருக்கு சப்போர்ட் செய்வதிலும் பாஜகவுக்கு ஒரு தயக்கம் இருந்து வருவதாக தெரிகிறது.. அதனால்தான், தன்னுடைய இந்த மைனஸையே சசிகலா தரப்பு, பிளஸ் ஆக மாற்றும் முயற்சியில் சசிகலா இறங்கி விட்டாராம்..

நொறுங்கும் கணக்கு
அதனால்தான், சமீபகாலமாகவே, திமுகவை முன்பைவிட வெளிப்படையாகவே டேமேஜ் செய்ய துவங்கிவிட்டார்.. அதாவது திமுகவை விமர்சிப்பதன் மூலம், பாஜகவின் ஆதரவு தன் மீது திரும்பும் என்று கணக்கு போட்டுள்ளாராம்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு, திமுகவுக்கு டஃப் தரும் ஒரே தலைவராக தன்னை உயர்த்தி கொள்ளும் பகீரத முயற்சியில் சசிகலா இறங்கி விட்டார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

கொட்டு வைத்த சசிகலா
வழக்கமாக தன்னுடைய பேட்டிகளில் சசிகலா ஒரு விஷயத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறார்.. அதாவது, திமுகவை டேமேஜ் செய்து கொண்டே, அதிமுகவையும் மட்டுப்படுத்துவதுதான் அந்த டெக்னிக் என்கிறார்கள்.. "அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தன்னிடம் தொடர்பில் உள்ளனர்"என்று சசிகலா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பேட்டி தந்திருந்தார்.. இதற்கு இன்னும் விடைகிடைக்காமல், அதிமுக மேலிடம் குழம்பி போயுள்ளது.. இதற்கு நடுவில் இன்றைய தினம் 2 விதமான கருத்துக்களை சொல்லி உள்ளார்.

கெடிலம் ஆறு
கடலூர் கெடிலம் ஆற்றில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றிருந்தார் சசிகலா.. பிறகு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், நீங்கள் பாஜக வந்தால் வரவேற்போம் என்று செய்தியாளர்கள் சொல்லி உள்ளார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசிகலா, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து... அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்ல என்று கூறினார்.

நயினார் நாகேந்திரன்
ஏற்கனவே, 2 நாட்களுக்கு முன்பும் இதே கேள்வியை விழுப்புரத்தில் செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு சசிகலா, நயினார் நன்றியுள்ளவர்.. அவர் இருக்கும் பாஜகவுக்கு நான் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து செல்லியிருக்கிறார். அப்படித்தான் நான் எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.. இப்போதும் நயினாரின் விசுவாசத்தையே சசிகலா வெளிப்படுத்தி உள்ளது, அதிமுகவை கடுப்பாக்கி வருகிறது.. "சசிகலா பாஜகவில் இணையலாம்" என்று ஏற்கனவே ஜெயக்குமார் சொல்லி வரும் நிலையில், இன்று நயினார் குறித்து பேசியுள்ளது மேலும் அதிமுகவை எரிச்சலூட்டி வருகிறதாம்.

கமலாலயம்
அதுமட்டுமல்ல, சசிகலா தன்னுடைய பேட்டியில் திமுகவை சரமாரியாக விமர்சித்து கொண்டு வந்தவர் "இப்ப நான்தான் இப்போது எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்" என்று ஒரே போடாக போட்டார்.. இது அதிமுகவுக்கு மட்டுமல்ல, திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று தினமும் ஓயாமல் சொல்லி கொண்டிருக்கும் பாஜகவுக்கே ஷாக் தான்.. ஆர்ப்பாட்டம், போராட்டம், கெடுவைப்பது, மிரட்டுவது, சவால் விடுவது என படுபிஸியாக திமுக மீது பாஜக பாய்ந்து கொண்டிருக்கும்போது, சசிகலாவின் இந்த வார்த்தை, கமலாலயம் வரை எதிரொலித்து கொண்டிருக்கிறதாம்..

யார்தான் எதிர்க்கட்சி
நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன் என்றால், சட்டமன்ற தேர்தலை முறைப்படி சந்தித்து, களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து, மக்களின் ஓட்டுக்களை பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் உள்ள அதிமுகவை எந்த லிஸ்ட்டில் வைப்பது? என்ற கேள்வியும் எழுகிறது.. ஆக மொத்தம், "நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று எடப்பாடி சொல்கிறார்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று அண்ணாமலையும் சொல்கிறார்.. நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று சசிகலாவும் சொல்கிறார்.. உண்மையிலேயே யார்தான் எதிர்க்கட்சி"?!
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications