"அவங்களா".. திமுக பக்கமா?.. ஸ்டாலின் ஓகே சொல்வாரா... பாஜகவுக்கு செக் வைத்த திருமாவளவன்.. பரபர களம்
திருமாவளவன், சென்னை கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்
சென்னை: நேற்றைய தினம் சென்னையில் திருமாவளவன் பேசிய பேச்சு, தமிழக அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது,.
சென்னையில் முனைவர் கோ.கேசவனின் நூல் தொகுப்புகள் வெளியீட்டு விழா நடைபெற்றது.. இந்த விழாவில் திருமாவளவன் பேசியபோது, மிக முக்கியமான கருத்தை கூறியிருந்தார்.
தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்திற்கு பேசுகிறோம் என்று சிலர் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள்... பார்ப்பனியத்தை மூர்க்கமாக எதிர்த்தவர்கள் அம்பேத்கரும் பெரியாரும்..

பார்ப்பனியர்கள்
பார்ப்பனியர்கள் தங்களை தனிமைப்பட்டுவிடாமல் தற்காத்து கொள்ள கையாளும் யுக்தி தான் இந்துத்துவம்.. திராவிடத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்றால் பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சனம் செய்வதாக தான் அர்த்தம்.. பெரியாரையும் அம்பேத்கரையும் எதிர்த்தால் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பார்ப்பனியத்திற்கு துணை நிற்கிறார்கள்.. மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் இன்றைய சூழலில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.

அமித்ஷா
இந்த தேசத்தை இந்துத்துவம் என்ற பெயரில் சிதைக்க துடிக்கிறார்கள். பார்ப்பனியர் அல்லாத மோடியும் அமித்ஷாவும் அவர்களின் வேலை ஆட்களாக உழைத்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த தலித் ஒற்றுமை இப்பொழுது இல்லை. சாதி தலைவர்களை தனித்தனியே பிரித்துவிட்டார்கள்... மதமாகவும் சாதியாகவும் பிரிப்பவர்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும். பாஜக, சங் பரிவார்களை எதிர்க்க அகில இந்திய பார்வை தேவை..

ஒருங்கிணைவு
அகில இந்திய அளவில் ஒருங்கிணைவு தேவை. திராவிட எதிர்ப்பு வெறும் திமுக எதிர்ப்பு கிடையாது.. அது பெரியார் எதிர்ப்பு. அதனால், நாம் கவனமாக இருக்க வேண்டும்.. சனாதனத்தை வீழ்த்த ஆரியத்தை எதிர்ப்பதற்கான கருத்தியல் அடையாளம் தான் திராவிடம். பார்ப்பனிய எதிர்ப்பை திமுக பார்த்துக்கொள்ளும்.. திராவிடர் கழகம் பார்த்துக் கொள்ளும் என்று நாம் விலகி நிற்க முடியாது..

மார்க்ஸ்
மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய உணர்வாளர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்.. இந்துத்துவம் என்ற பெயரில் அவர்கள் முன்னெடுக்கும் அரசியல் தேசத்தை பாழ்படுத்தும். இப்போது அவர்கள் தமிழகத்தை குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள், இது மிகவும் ஆபத்தானது என்பதால், நம்தான் விழிப்பாக இருக்க வேண்டும்" என்றார்..

ஆர்எஸ்எஸ்
பாஜகவுக்கு எதிரான காய் நகர்த்தலை விடாமல் தொடர்ந்து கொண்டிருப்பவர் திருமாவளவன்.. இவர் எந்த கூட்டணியில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் - பாஜக சித்தாந்தங்களுக்கு எதிராக களமாடி கொண்டிருப்பவர்.. தேர்தல் பிரச்சாரங்கள் என்றாலும் சரி, சாதாரண கட்சி கூட்டம் என்றாலும் சரி, அங்கேயும் பாஜகவை சரமாரியாக விமர்சித்து சனாதனத்துக்கு எதிராக புயலை கிளப்புவது வழக்கம்.. ஆனால், சமீபகாலமாகவே, தமிழகத்தில் பாஜக மெல்ல தலையெடுத்து வருகிறது.

விசிக
கொள்கை, சித்தாந்தங்கள் வேறு வேறாக இருந்தாலும், மத்திய அரசை ஒரேடியாக பகைத்து கொள்ள முடியாத நிலைமையில் ஆளும் தரப்பு உள்ளது.. அதிமுகவோ இருக்கும் இடமே தெரியாமல் உட்கட்சி பூசலை சமாளித்து கொண்டிருக்கிறது.. இப்படிப்பட்ட சூழல்கள்தான், தமிழக பாஜகவுக்கு சாத்தியக்கூறுகளாகி வருகின்றன.. அதனால்தான், திமுக கூட்டணியில் உள்ள விசிக தன் கருத்தை வலிய பரப்ப ஆரம்பித்துள்ளது.. இப்போதுள்ள எதிர்ப்பு போதாமல், சாதி தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலையும் விடுத்துள்ளது, கவனத்தை பெற்று வருகிறது.

செம சான்ஸ்
சாதிய தலைவர்கள் என்று குறிப்பிட்டு திருமாவளவன் யாரை சொல்கிறார்? மதமாகவும் சாதியாகவும் பிரிப்பவர்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என்று யாரை சொல்கிறார்? என்ற கேள்வி எழுந்தாலும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில், பாமக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்தான் அடக்கம்.. சுமீபத்தில், பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றிருந்தார்.. மேலும் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாமக மென்மைபோக்கை அரசுடன் கடைப்பிடித்தும் வருகிறது..

தம்பி ஸ்டாலின்
அதுமட்டுமல்ல, 'தம்பி ஸ்டாலின் நினைத்தால் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், வெற்றி பெறத் தேவையான தேவையான புள்ளி விவரங்கள் அறிக்கையை ஒரே வாரத்தில் கூட தயார் செய்ய முடியும்' என்று டாக்டர் ராமதாஸ் பெருத்த நம்பிக்கையில் இருக்கிறார்.. இதுபோக, எம்பி தேர்தலில் திமுக - பாமக கூட்டணி அமைக்க வாய்ப்புண்டு என்றும் ஒரு சலசலப்பு இருந்து கொண்டே இருக்கிறது..
Recommended Video

ஒர்க் அவுட் ஆகுமா?
திமுக கூட்டணியில் விசிக உள்ள நிலையில், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.. குறிப்பாக தேர்தல் சமயங்களில் எலியும், பூனையுமாக மாறிவிடும் இந்த கட்சியினர் மட்டும், ஒருங்கிணைந்தால், தமிழக நலனுக்கு மிகுந்த பலன்தரும் என்று பலரும் நினைக்கின்றனர்.. இப்படிப்பட்ட சூழலில், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற திருமாவளவனின் அறைகூவல் புதிய தடத்தை களத்தில் ஏற்படுத்தி உள்ளது.. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications