சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருமகனோ, மருமகளோ "சங்கியாக" இருந்துவிட்டால் குடும்பத்திற்கு ஆகாது.. திமுக புள்ளி சரமாரி அட்டாக்

கார்த்திகேய சிவசேனாபதி, பதிவிட்டுள்ள ட்வீட் பாஜகவினரை கடுப்பாக்கி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின் கார்த்திகேய சிவசேனாபதி, பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று பாஜகவினரை கடுப்பாக்கி வருகிறது.. இதற்கு ஏராளமான பாஜகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து வருகிறார்கள்.

கொங்குவின் திமுக முகமாக வலம் வருபவர், அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி.. கொங்குவில் இவருக்கு தனி செல்வாக்கு உண்டு.

கடந்த முறை சட்டசபை தேர்தலின்போது, கடுமையாக உழைத்தவர்.. பாஜகவை வலுவாக எதிர்த்து வருபவர்.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று, முதன்முதலில், அமைச்சரும், அவரது நெருங்கிய நண்பருமான அன்பில் மகேஷ் தன்னுடைய விருப்பமாக வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால், கார்த்திகேய சிவசேனாபதியோ, "உதயநிதியை அமைச்சராக்குங்கள்' என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஓபனாகவே பதிவிட்டு வெளிப்படுத்தினார். உதயநிதியை அமைச்சர் ஆக்குவதன் மூலம், இளைஞர்களிடையே ஒரு பெரிய எழுச்சி இருக்கும் என்று விளக்கம் தந்தார்..

பாஜகவை திட்டுவீங்க.. ஆனா இப்போ அதானிக்கு எதிராக வாய்திறக்கலயே.. ஏன்? - திமுக அரசுக்கு சீமான் கேள்வி! பாஜகவை திட்டுவீங்க.. ஆனா இப்போ அதானிக்கு எதிராக வாய்திறக்கலயே.. ஏன்? - திமுக அரசுக்கு சீமான் கேள்வி!

 ஸ்கூல் & காலேஜ்

ஸ்கூல் & காலேஜ்

அதுமட்டுமல்ல, "மோடி எந்த ஸ்கூலுக்கு போனார்? எந்த காலேஜில் படித்தார் என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது. தாராபுரத்தில் எம்எல்ஏ வேட்பாளராக நின்று தோல்வியுற்ற முருகனை, உடனே வேறு ஒரு மாநிலத்தில் கொண்டுபோய் நிறுத்தி ஒன்றிய அமைச்சர் பதவியை தருகிறார்களே, ஏன்? பாஜகவில் வேறு தலைவர்களே இல்லையா? 2018ல் காவல்துறை பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வந்த ஒருவருக்கு தமிழ்நாட்டின் பாஜக தலைவராக வேண்டுமா? இத்தனை வருடங்கள் உழைத்த எல்.கணேசன். எச்.ராஜா இல்லையா? போன்ற கேள்விகளை எல்லாம் வெளிப்படையாகவே முன்வைப்பவர். துணிச்சல் நிறைந்தவர்.

 தாத்தா யார்?

தாத்தா யார்?

அந்தவகையில், தற்போது மதுரையில் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பாஜகவினர் தாக்கிய சம்பவத்தக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்.. இது தொடர்பாக ஒரு அறிக்கையே வெளியிட்டார்.. "மிகப்பெரிய ஆன்மீன குடும்பத்தில் இருந்த வந்த அமைச்சரின் தேசியக்கொடி கட்டிய கார் மீது செருப்பு வீசுகிறீர்களே.. இதுதான் உங்கள் ஆன்மீகமா? அவரது தாத்தா யார் தெரியுமா? சென்னை மாகாணத்தை கட்டியாண்ட பரம்பரையின் ரத்தம்..

மணித்துளிகள்

மணித்துளிகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன், பார்ப்பனன் அல்லாத மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலுக்கு சொந்தக்காரன்தான் இந்த பிடிஆர்.. எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.. வரி இல்லாத பட்ஜெட்டை பத்து மணித்துளிகளில் போடும் வல்லமை பெற்றவர்" என்பது உட்பட மிகப்பெரிய அறிக்கை வெளியிட்டு, பிடிஆரின் குடும்ப பாரம்பரியத்தையும் சுட்டிக்காட்டி, பாஜகவினருக்கும் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

 சங்கிகள் - தோஷம்

சங்கிகள் - தோஷம்

இந்த அறிக்கை பாஜகவினருக்கு எரிச்சலை கூட்டி வரும்நிலையில், இன்னொரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார் கார்த்திகேய சேனாதிபதி.. அதில், "அன்புள்ள பெற்றோர்களே திருமணத்திற்கு தங்கள் மகனுக்கு, மகளுக்கோ, பொருத்தம் பார்க்கும் பொழுது அரசியல் சித்தாந்தத்தையும் குறிப்பிடச் சொல்லுங்கள். எங்காவது மருமகனோ மருமகளோ "சங்கியாக"இருந்துவிட்டால் குடும்பத்திற்கு ஆகாது. தோஷம் பிடித்துக்கொள்ளும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 பாஜக திமுக

பாஜக திமுக

ஏற்கனவே கொங்குவில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த படாத பாடுபடும் பாஜகவுக்கு, குடைச்சலை தந்து கொண்டிருப்பவர் கார்த்திகேய சேனாதிபதி.. இப்போது இதுபோன்ற பதிவுகளை பதிவிட்டு, பொதுமக்களை அலர்ட் செய்து வருவது, கூடுதல் டென்ஷனை கொங்கு மண்டல பாஜகவுக்கு தந்து வருகிறது.. இந்த ட்வீட்டுக்கு பாஜக + திமுக இரு தரப்பினருமே திரண்டு வந்து மாறி மாறி பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்.

English summary
Who is this karthikeya sivasenapathy and why did kongu bjp get tension கார்த்திகேய சிவசேனாபதி, பதிவிட்டுள்ள ட்வீட் பாஜகவினரை கடுப்பாக்கி வருகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X