• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்டாலின், எச்.ராஜா, விஜய்.. இதுல யார் மேன்vsவைல்ட்ல கலந்துக்கிட்டா செமயா இருக்கும்.. நீங்களே பாருங்க

|

சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்து தமிழ்நாட்டில் இருந்து வேறு யார் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டா நல்லா இருக்கும் தெரியுமா? இதை படிங்க தெரியும்!

மேன் vs வைல்ட் நிகழ்ச்சி உலகம் முழுக்க பரவலாக பலதரப்பட்ட மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சி ஆகும். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, காட்டுக்குள், மலை பகுதிக்குள் மாட்டிக்கொண்டால் அங்கிருந்து எப்படி வெளியேறுவது. இருக்கும் பொருட்களை வைத்து எப்படி உயிர் வாழ்வது என்பதை கற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சி ஆகும் இது.

முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர் பியர் கிறில்ஸ் மூலம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பல அதிரடி சாகசங்களை இவர் தனது நிகழ்ச்சியில் செய்து மக்களை கவர்ந்து இருக்கிறது.

எப்படிப்பட்ட நிகழ்ச்சி

எப்படிப்பட்ட நிகழ்ச்சி

பாம்பு, தவளைகளை சாப்பிடுவது. சுயமாக கப்பல் செய்வது, கயிறு கட்டி மலை ஏறுவது, தேனியிடம் கடி வாங்குவது என்று இவர் செய்யாத சாகசங்கள் இல்லை. வரிசையாக நன்றாக சென்று கொண்டு இருந்த நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்தான் அரசியல் எட்டிப்பார்த்தது . முதல்முறையாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேச வேண்டிய கருத்துக்களை ஒபாமா கூறினார்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதன்பின் கேப்டன் மார்வெல் பட ப்ரீ லார்சன், புகழ்பெற்ற நடிகர் மற்றும் மல்யுத்த வீரர் பட்டிஸ்ட்டா தொடங்கி பல்வேறு பிரபலங்கள் வரிசையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து முதல்முதலாக பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆமாம் கிறில்ஸ் உடன் சேர்ந்து இந்தியாவில் பிரதமர் மோடி மேன் vs வைல்ட் நிகழ்ச்சியை சூட் செய்தார்.இந்திய பிரதமர் மோடி, டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அப்போதே பெரிய வைரலானது.

ரஜினி கலந்து கொண்டார்

ரஜினி கலந்து கொண்டார்

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் டிரெய்லர், விளம்பர வீடியோக்கள் பெரிய வைரலாகி உள்ளது. ஒபாமா, மோடியை போல தன்னுடைய இமேஜை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ரஜினி இதை கையில் எடுத்துள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து வேறு யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று மல்லாக்க படுத்து விட்டத்தை நோக்கி யோசித்து பார்த்தோம்.. ஐடியா அருவியா கொட்டுச்சு!

முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

டெல்லியில் பிரதமர் உடன் ஷோ செய்துவிட்டார், அடுத்த தமிழகத்தில் ரஜினியுடனும் ஷோ செய்துவிட்டார் அப்படியே அந்த பியர் கிறில்ஸ் நம்ம முதல்வர் பழனிசாமி கூடவும் ஷோ செஞ்சிட்டா சிறப்பா இருக்கும். ஏற்கனவே அமெரிக்கா சென்று, அங்கே கோட் சூட் எல்லாம் போட்டு பெரிய வைரல் ஆனவர்தான் நம்ம முதல்வர். அமெரிக்காவில் ஆங்கிலத்தில் பேசி முதல்வர் கலக்கினார். அப்படியே மேன் vs வைல்ட் நிகழ்ச்சியிலும் முதல்வர் பழனிசாமி ஆங்கிலத்தில் பேசி கலந்து கொண்டால் இலவச விளம்பரமும் கிடைக்கும்.. மோடிக்கு அடுத்து எடப்பாடிதான் என்று போஸ்டரும் ஒட்ட ரத்தத்தின் ரத்தங்களுக்கு வசதியாக இருக்கும். சேலம் எடப்பாடிக்கு அருகிலேயே எங்காவது காட்டில் ஷூட்டிங் லொகேஷனையும் தேர்வு செய்துவிடலாம்.

காட்டுக்குள் தர்ம யுத்தம்

காட்டுக்குள் தர்ம யுத்தம்

காட்டுக்குள் சே குவேராவை அனுப்பினால் பிடலை அனுப்பாமலா இருப்பார்கள். பிடலா?.. அதாங்க நம்ம துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். காட்டுக்குள்ளேயே மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் ஓ. பி. எஸ் தர்ம யுத்தம் 2.0 நடத்த சொன்னால் நிகழ்ச்சியின் டி ஆர்பியும் பிச்சுக்கிட்டு போகும். தேனியின் தோனி எம்பி. ஓ. பி ரவீந்திரநாத்தை கெஸ்ட் ரோல் செய்ய சொன்னால் கூடுதல் சிறப்பு.. அட இதெல்லாம் போக தேனீக்குள்ளேயே நிறைய காடுகள் இருக்கிறது.. எங்காவது ஒரு இடத்தை தேர்வு செய்தால் ஷூட்டிங்கை இன்னைக்கு நைட்டே தொடங்கிடலாம்.

எதிர்க்கட்சி தலைவர்

எதிர்க்கட்சி தலைவர்

அட ஆளும் கட்சி சைட்ல போயிட்டா அடுத்த எதிர்க்கட்சிதானே. அப்படியே எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினையும் பியர் கிறில்ஸ் கூட ஒரு ஷோ பண்ண வைக்கலாம். ஷோ எப்படி இருக்கணும்னு யோசிக்க கூட வேண்டியது இல்லை.. நேரா பஸ் பிடிச்சு, பீகார் பக்கம் ஒரு காட்டுல பிரஷாந்த் கிஷோர் கிட்ட ஸ்கிரிப்ட் கேட்டு மொத்த ஷோவையும் முடிச்சிடலாம்.. அப்போ அப்போ உதய் அண்ணாவையும் கெஸ்ட் ரோல் வர வச்சா.. செம மாஸ் பொடி மாஸ்ஸா இருக்கும்!

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

அட ரஜினியே மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் வந்துட்டார்னா அடுத்து கமல்தான? கமல் மட்டும் இந்த நிகழ்சசியில் கலந்து கொண்டு, பிரிட்டிஷ் இங்கிலீஷில் பேசினார்னா பிரிட்டிஷ் ராணுவ வீரர் பியர் கிறில்ஸ் குழம்பி போயிடுவார். கமல் ஒன்னு பேச, பியர் கிறில்ஸ் ஒன்னு பேச,.. மாத்தி மாத்தி பேச.. என்ன பேசிக்கிறாங்கன்னு புரியாமா கடைசியில காடே காண்டாகிடும்! கமலுக்கும் ஒவ்வொரு பிரேக்கு இடையிலும் ஒவ்வொரு கெட்டப் போட்டு.. கலர்புல்லா எங்காவது காட்டுல ஷோ நடத்தலாம்! மய்யத்துக்கும் ஒரு மய்யமா பப்ளிசிட்டி கிடைக்கும்.

விஜய் எப்படி?

விஜய் எப்படி?

ரஜினி, கமல்ன்னா அடுத்து யார்? நம்ம விஜய்தானே.. அப்படியே குருவி கெட்டப்ல விஜயை வச்சு ஒரு ஷோ எடுத்தா பல நாளுக்கு விடாம டிஆர்பி அள்ளும். விஜயும் குருவி படத்துல ஜம்ப் பண்ணி ஜாலி பண்ண மாதிரி ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு ஜாலியா ஜம்ப் பண்ணி ஷோ முழுக்க கலக்கலாம்....லாம். இடையில இடையிலா காட்டுல இருக்குற புலிக்கிட்ட, நான் பார்க்கத்தான் பனி.. பகைன்னு வந்துட்டா புலின்னு என்டெர்டெய்ன் பண்ணலாம். விஜய் பேன்சே ஷோவை மாஸ் ஹிட் ஆக்கிடுவாங்க!

அஜித் ஓகேவா

அஜித் ஓகேவா

விஜய்க்கு அடுத்து அஜித்.. அப்படியே அஜித்தை கையில் ஒரு டிரோன் ஹெலிகாப்டரையும், கேமராவையும் கொடுத்து, அதை காட்டுக்குளேயே பறக்க வச்சு மொத்த ஷோவையும் நீங்களே எடுத்துடுங்கப்பான்னு சொல்லிட்டு முடிச்சிடலாம்.. இடையில புலி, சிங்கம் வரப்ப அடிச்சு தூக்கிப் போட்டு, புலியையே ''காதை மூடிட்டு'' ஓட வச்சிடலாம். ஆனா தல அதுக்கு எல்லாம் கால்சீட் தருணுமே? .. ஒரு கண்டிஷன் நிகழ்ச்சிக்கு பேர் 'வி'ல ஆரம்பிக்கணும். பேசாமல் ''விவேகமான மேன் vs வைல்ட்ன்னு'' வச்சிடலாமா?

எச் .ராஜா எப்படி

எச் .ராஜா எப்படி

இவ்வளவு பேர் இருக்கும் போது நம்ம அண்ணன், சர்ச்சை மன்னன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இல்லைனா எப்படி. அப்படியே ஜியை காரைக்குடி பக்கத்துல, எங்கயாவது காட்டுக்கு கூட்டிட்டு போய் அங்கேயே வச்சு ஷூட்டிங் முடிச்சிடலாம்.. ஆனா பியர் கிறில்ஸ் நம்ம ஊர் பய கிடையாதே.. பேர் வேற தப்பா இருக்கு.. எச். ராஜா ஏத்துக்குவாரா? #ஆண்டி_ இந்தியன்_ஷோ

லெஜண்ட்

லெஜண்ட்

யார் வந்தா என்ன வரலைனா என்ன.. அப்படியே நம்ம லெஜண்ட் வடிவேலை அள்ளிப்போட்டு போய் ஒரு ஷோ பண்ண செமையா இருக்கும். நிறைய புது புது மீமும் தேறும், தலைவனை பார்க்காமலே இருந்தவர்களுக்கும் பார்த்த திருப்பதி கிடைக்கும். எல்லா பட டீசர், டிரெய்லருக்கும் வடிவேல் வெர்சன் போடுற மாதிரி மேன் vs வைல்டுக்கும் உண்மையா ஒரு வடிவேல் வெர்சன் இருந்த மாஸ்தான்!

சிம்பு எப்படி?

சிம்பு எப்படி?

சூப்பர் ஸ்டார் வச்சு ஷோ பண்ணிட்டா அடுத்த யங் சூப்பர் ஸ்டார் தானே! ஆமா, சிம்புவை வச்சு ஷோ எடுக்க பியர் கிரில்ஸ்சுக்கும் ஆசைதானாம்.. ஆனால் மாநாடு சூட் முடியட்டும்னு வெயிட்டிங்கல இருக்காராம்.. அப்படியே வெயிட்டிங்கிலேயே இருங்க மிஸ்டர் பியர்.. படம் சீக்கிரம் முடிஞ்சிடும்! இன்னும் 10 வருஷத்துல ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்!

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Who will be the apt choice for next episode of Man vs Wild? - Here are the options.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more