சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலினை இப்படி காய்ச்சி எடுத்துட்டாரே அழகிரி.. இதனால் யாருக்கு அதிக பாதிப்பு.. திரில் எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க. அழகிரியால் திமுகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    மதுரை: ஸ்டாலின் ஒரு துரோகி... முதலமைச்சராக முடியாது... கொதித்த மு.க அழகிரி!

    எந்த கட்சிக்கு முக்கியமோ இல்லையோ அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வரும் தமிழக சட்டசபை தேர்தல் முக்கியமானது. இந்த தேர்தல்தான் மக்கள் செல்வாக்கு யாருக்கு என்பதை தீர்மானிப்பதாகும்.

    இதனால் திமுக, அதிமுக தலைவர்கள் இப்போதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் திமுகவிலிருந்து கருணாநிதியால் நீக்கப்பட்ட மு.க.அழகிரி திமுகவில் இணைய எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் அவை எதுவும் எடுபடவில்லை.

    அரசியல் நகர்வு

    அரசியல் நகர்வு

    இதனால் கிட்டதட்ட 6 ஆண்டுகளாக அமைதியாக இருந்த மு.க.அழகிரி தனது அரசியல் நகர்வு குறித்து நேற்றைய தினம் தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலினுக்கு நான்தான் பொருளாளர் பதவியை பெற்று தந்தேன்.

    ஆதரவாளர்கள்

    ஆதரவாளர்கள்

    நிறைய பேருக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தந்தேன். ஆனால் அவர்கள் நன்றியை மறந்துவிட்டார்கள். வருங்கால முதல்வர் என ஸ்டாலினை பாராட்டி போஸ்டர்களை ஒட்டுகிறார்கள். நிச்சயம் ஸ்டாலினை முதல்வராக்க விட மாட்டேன். எனது ஆதரவாளர்களும் எனது ஆட்களும் அது போல் நடைபெற ஒரு போதும் விட மாட்டார்கள் என தெரிவித்துவிட்டார்.

    கலைஞர் திமுக

    கலைஞர் திமுக

    மேலும் புதிய கட்சி தொடங்குவதா எனது அரசியல் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றார். முன்னதாக கலைஞர் திமுகவின் அஞ்சா நெஞ்சே என ஆதரவாளர்கள் போஸ்டர்களை அடித்திருந்தனர். இதனால் அழகிரியின் கட்சியின் பெயர் கலைஞர் திமுகவாக இருக்கலாம் என சொல்லப்பட்டது.

    ஸ்டாலினை எதிர்த்து

    ஸ்டாலினை எதிர்த்து

    அழகிரி நேற்றைய தினம் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்திருந்தாலும் கருணாநிதியை மிகவும் உயர்வாகவே பேசினார். அவர் திமுகவுக்கு எதிராக ஒரு கட்சியை தொடங்குவாரா என சந்தேகம் எழுகிறது. மேலும் அழகிரியால் ஸ்டாலினை எதிர்த்து மட்டுமே அரசியல் செய்ய முடியும்.

     திமுகவுக்கும் பாதகம் இருக்காது

    திமுகவுக்கும் பாதகம் இருக்காது

    அழகிரியால் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு எந்த பாதிப்பு இருக்காது. தொண்டர்களும் இது குடும்ப பிரச்சினை என்பதால் இதை அவர்களுக்குள்ளாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்றே தொண்டர்கள் கருதுவார்களே தவிர திமுகவுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்க மாட்டார்கள்.

    அடுத்தடுத்த நகர்வுகள்

    அடுத்தடுத்த நகர்வுகள்

    திமுக என்பது 70 ஆண்டுகள் பாரம்பரிய கட்சி. அந்த கட்சியின் கொடி, சின்னம் ஆகியவை தொண்டர்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டன. எனவே அழகிரிக்காக கருணாநிதி கட்டி காத்த திமுகவுக்கு எதிராக யாரும் நிற்க மாட்டார்கள் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அழகிரியின் இலக்கு ஸ்டாலின் மற்றும் சில மூத்த தலைவர்களே தவிர திமுக அல்ல என்கிறார்கள். தன்னை வளர்த்த திமுகவுக்கு எதிராக அழகிரி என்ன செய்வார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகளை வைத்துதான் சொல்ல முடியும்.

    English summary
    Will M.K.Alagiri's statement impact on DMK? What will Political Analysts says?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X