டில்லிக்கே ராஜானாலும்..தமிழ்நாட்டில் தலைநிமிரவே முடியாத பாஜக! தமிழர்கள் பிடிவாதமாக இருக்க காரணமென்ன?
சென்னை: பீகார் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சி என பாஜக மார்தட்டிக் கொள்கிறது. ஆனால் தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் பலத்த அடி வாங்கி இருக்கின்றன. 1655 எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு இருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை அவர்கள் இரட்டை இலக்கத்தை கூட எட்டவில்லை என்பதுதான் தமிழக அரசியல் பாஜகவுக்கு சொல்லும் பாடம்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 89 தொகுதிகளில் வென்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளதோடு, 16 அமைச்சர்கள் இரண்டு துணை அமைச்சர்களை கேட்டுப் பெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மக்களவையில் 240 எம்பிக்கள், மாநிலங்களவையில் 103 எம்பிக்கள், 170 எம்எல்சிகள், 1650க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், இது மட்டுமல்லாமல் மேயர்கள், கவுன்சிலர்கள் என எடுத்தால் உண்மையிலேயே உலக அளவில் அதிக மக்கள் பிரதிநிதிகளை கொண்ட கட்சியாக பாஜக இருக்கும். மேலும் சுமார் 14 கோடி உறுப்பினர்கள் இருப்பதாகவும் பாஜக சொல்லுகிறது. காஷ்மீர் தொடங்கி கர்நாடகா வரை ஆளுங்கட்சியாகவும், ஆண்ட கட்சியாகவும், கூட்டணியில் பங்கு வைக்கும் கட்சியாகவும் பாஜக இருக்கிறது.
பாஜக தோல்வி
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் நிலை மிகவும் பரிதாபம் தான். காங்கிரஸ் கூட ஒரு காலத்தில் தமிழகத்தை ஆண்ட கட்சியாக இருந்தது. திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் எழுவே முடியவில்லை. ஆனால் பாஜகவை பொறுத்தவரை தமிழகத்திற்குள் நுழையவே முடியாத நிலைதான் இருந்தது. திமுகவுடன் அதிமுகடனும் கூட்டணி வைத்ததால் தான் அந்த கட்சிக்கு ஒரு சில எம்பி எம்எல்ஏக்கள் கிடைத்தன. ஆனால் அதுவும் இரட்டை இலக்கத்தை தாண்டியதில்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.
தமிழர் அரசியல்
நாட்டின் பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும் தமிழகத்தில் மட்டும் ஒருபோதும் பெரிய வெற்றியை பாஜக பெற்றதில்லை. இதற்கான காரணங்கள் என்ன? ஏன் தமிழகத்தில் பாஜக எப்போதும் கடுமையான தோல்வியை சந்திக்கிறது? என்பது நீண்ட காலமாகவே எழுப்பப்படும் கேள்வி. 1980களில் ஆரம்பித்த காலத்திலிருந்தே பாஜக தமிழகத்தில் தனியாகப் போட்டியிட்டு பெரிதாக வெற்றி பெறவில்லை. ஹிந்துத்துவ அரசியல் தமிழர்களால் ஏற்கப்படாதது முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட ஆதிக்கம்
அப்போது இருந்த தீவிர திராவிட இயக்க அரசியல் சூழலும் பாஜகவுக்கு எதிர்மறை சூழலை உருவாக்கியது. அரசியல் கூட்டணிகள் மூலம் தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்த முயன்றதுதான் பாஜக-வின் முதல் திட்டம். 1998 மற்றும் 1999 லோக்சபா தேர்தலில் அதிமுக, பின்னர் திமுக உடன் கூட்டணி வைத்தும், பாஜக தனிப்பட்ட வாக்கு வங்கி உருவாக்க முடியவில்லை. கூட்டணி வெற்றியைப் பெற்றாலும், அது பாஜகவின் தனிப்பட்ட பலமாக மாறவில்லை.
மோடி அலை
2014 முதல் 2024 வரை நாடு முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. 2014ல் லோக்சபாவில் பாஜகவுக்கு 1 இடம் மட்டுமே கிடைத்தது. 2019ல் கூட்டணி வைத்தும் 4.5% வாக்குகள் மட்டுமே கிடைத்தது. ஆனால், 2024ல் 11% வாக்கு இருந்தும் பூஜ்ஜியம் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது. தமிழக வாக்காளர்கள் 'தேசிய - மத' அரசியலை ஏற்கவில்லையென்பதற்கு இதுவே மிகப்பெரிய சான்று.
திமுக அதிமுக
பாஜக தற்போது தமிழ் உரிமை, தமிழ் கலாச்சாரம், சனாதன தர்மம் போன்ற புதிய கோட்பாடுகளை முன்வைக்கிறது. விலகல் மனப்பான்மை இருந்தாலும், இளைஞர்களை அடையும் முயற்சியில் கட்சி அதிக கவனம் செலுத்துகிறது. ஆனால் கட்சியின் அடிப்படை பிரச்சனை இன்னும் முதன்மையாக உள்ளது:
தமிழரில் பாஜக மீது அடிப்படை நம்பிக்கை உருவாகவில்லை.
தேசிய கட்சிகள் தோல்வி
ஒரு சில இளம் தலைவர்களால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டாலும் தமிழர்களிடையே பாஜக மீது அடிப்படை நம்பிக்கையையே உருவாகவில்லை என்பதுதான் முக்கிய காரணம். தமிழகத்தில் பாஜக ஏன் தோல்வியடைந்தது என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. திராவிட அரசியலின் ஆதிக்கம், கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இந்துத்துவ எதிர்ப்பு, வட இந்திய கலாச்சார திணிப்பு, மொழி பிரச்சனை ஆகியவை தமிழர் பிரச்சனைகளில் நேரடியாக தாக்கம் செலுத்தக் கூடியவை. மொழிப்போரால் காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலைமை ஒன்றும் பாஜகவுக்கு தெரியாமல் இல்லை. அதனால் தான் இன்று வரை காங்கிரஸ், பாஜகவால் தமிழகத்தில் தலை நிமிரவே முடியவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications