சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஜாக்பாட்".. பேருந்துகளில் வரப்போகும் அதிரடி திட்டம்! சவுண்டில் கூட மாற்றம்! குவியப்போகும் வருமானம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் வருமானத்தை உயர்த்துவதற்காக புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தபட உள்ளது.

Recommended Video

    Pink busல Udhayanidhi | மகளிருக்கு முதல்வரின் புதிய GIFT *Politics | | Oneindia Tamil

    சமீபத்தில் தமிழ்நாட்டின் பெண்களுக்குகான இலவச பேருந்துகளில் முன் பக்கத்தில் பிங்க் வண்ணம் பூசப்பட்டது. இது பெரிய சர்ச்சையானது.

    முன் பக்கம் மட்டும் பிங்க் வண்ணம் பூசப்பட்டதை வைத்து இணையத்தில் பலரும் கிண்டல் செய்தனர். தமிழ்நாடு போக்குவரத்து துறை வறுமையில் இருக்கிறது.

    அப்படி இருக்கையில் பெயிண்ட் அடிக்க காசு இன்றி முன் பக்கம் பிங்க் அடித்துள்ளனர் என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

    செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாநகர போலீசார் அறிவிப்பு செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்.. மாநகர போலீசார் அறிவிப்பு

     காரணம் என்ன

    காரணம் என்ன

    அதன்பின்தான் இப்படி முன்னால் மட்டும் பிங்க் வண்ணம் அடிக்க வேறு காரணம் உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி பேருந்தின் இரண்டு பக்கங்களிலும் விளம்பரங்கள் வர உள்ளன. பிங்க் நிற ஸ்டிக்கரில் பேருந்தின் இரண்டு பக்கமும் பெரிய விளம்பரங்கள் வர உள்ளன. இந்த பிங்க் நிற ஸ்டிக்கர்கள் இரண்டு பக்கமும் முழுமையாக ஒட்டப்படும் என்று கூறப்பட்டது. அதன்படியே மறுநாள் இரண்டு பக்கமும் பின் வண்ணம் வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

     வரவேற்பு

    வரவேற்பு

    வருமானத்திற்கு புதிய வழி சேர்க்கும் இந்த திட்டம் பெரிய வரவேற்பு பெற்றது. இதேபோல் சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் புதிய வருமானத்திற்கான வழிகள் செய்யப்பட உள்ளன. அதன்படி பேருந்துகளில் பல்வேறு இடங்களில் விளம்பரங்கள் செய்யப்பட உள்ளன. முன்னர் மாநகர பேருந்துகளில் மேலே உச்சத்தில் உள்ள கண்ணாடியில் மட்டுமே விளம்பரம் இருக்கும். இப்போது உள்ளே, வெளியே விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்

    விளம்பரம்

    பேருந்து உள்ள கண்ணாடி, ஒவ்வொரு சீட்டின் பின்புறம் விளம்பரம் செய்யப்பட உள்ளது. அதேபோல் வெளியே ஜன்னலுக்கு கீழே இருக்கும் நீண்ட இடத்தில் விளம்பரம் செய்யப்பட உள்ளது. இந்த விளம்பரம் பார்க்க வித்தியாசமாக இல்லாமல் பேருந்து நிறத்திலேயே இருக்கும். சிவப்பு நிற பேருந்து என்றால் சிவப்பு ஸ்டிக்கரிலேயே பேருந்து விளம்பரம் இருக்கும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னை பேருந்துகளில் வரும் நாட்களில் இது அமல்படுத்தப்பட உள்ளது.

     வருமானம்

    வருமானம்

    அதேபோல் பேருந்து உள்ளே நிறுத்தங்களுக்கான சத்தம் கேட்கும். இந்த சவுண்டிலும் கூட இடையே விளம்பரம் செய்யும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு நிறுத்தத்திற்கு இன்னொரு நிறுத்தத்திற்கு இடையில் ஆடியோவில் இந்த விளம்பரம் ஒலிக்கப்படும். இதனால் அரசுக்கு நேரடியாக வருமானம் வரும். நஷ்டத்தில் உள்ள போக்குவரத்து துறைக்கு வருமானம் கிடைக்கும். இதன் காரணமாக மாநகர பேருந்து நிர்வாகம் இந்த திட்டத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Why Chennai buses will have more advertisments from now on? What will happen?சென்னை மாநகர பேருந்துகளில் வருமானத்தை உயர்த்துவதற்காக புதிய திட்டம் ஒன்று அமல்படுத்தபட உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X