ரஜினி திடீர்ன்னு வந்து பேசுவார்.. பெரிய அளவில் போடப்பட்ட பிளான்.. தடுத்த குடும்பம்.. என்ன நடந்தது?
ரஜினி இல்லாமல் ரஜினிக்காக மாநாடு என்பதாகத்தான் விளம்பரப்படுத்தப்படும் என்று திட்டமிட்டு இருந்தனர்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்திற்காக ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த மாநாடு திடீரென ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் சில காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள் ரஜினியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மாஸ் ஹீரோவாக இருந்து வந்தவர் ரஜினிகாந்த். இன்றைக்கும் அவர் நடிக்கும் படம் எனில் பூஜை போடும்போதே அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகி விடுவது உண்டு. மிகப் பெரிய ஓப்பனிங் எப்போதும் ரஜினி படத்துக்கு இருப்பதும் உண்டு.
ஆனால், அண்மைக் காலங்களில், பேட்ட படத்திற்கு பிறகு அவரது படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றிப்பெறவில்லை. தயாரிப்பாளர்களும் ரஜினியும் எதிர்பாத்த அளவுக்கு வசூலை வாரி குவிக்கவில்லை ரஜினியின் படங்கள்.

ரஜினி படங்கள்
அது, அரசியலுக்குள் வருவதாக அவர் சொன்னதும், பிறகு உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்காமலே அரசியலுக்கு முழுக்கு போட்டதும் கூட ஒரு காரணியாக இருக்கலாம். கடைசியாக அவர் ரிலீஸ் செய்த எல்லா படங்களும் பிளாப். பேட்ட படத்தை தவிர மற்ற படங்கள் பிளாப் ஆனது. இப்படிப்பட்ட நிலையில், கடந்த 1 வருடமாக ரஜினியை சுற்றி எந்த பரபரப்பும் இல்லை. இது ரஜினியை உசுப்பேத்தும் ஒரு கூட்டத்தால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. விரைவில் ஒரு புது படத்துக்கு கமிட் ஆக இருக்கிறார் ரஜினி.

ரசிகர்கள்
இந்தநிலையில் ரஜினியின் ரசிகர்கள் மன்றத்தினர் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணாவை சந்தித்து விவாதித்துள்ளனர். அப்போது முடிவான விசயம் தான், மனிதம் காப்போம் என்ற தலைப்பில் பொதுவான ஒரு மாநாட்டை ரஜினிக்காக ரஜினி ரசிகர்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த யோசனையை சொன்னதும், மாநாட்டுக்கு தலைப்பு வைத்ததும் சத்யநாராயணா. அதன்படி, ரஜினிக்கான மாநாடு எனில் அது வெறும் ரசிகர்கள் மட்டுமே இருந்தால் பரபரப்பாக என்பதால், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என முக்கியமான சிலர் மாநாட்டில் சிறப்புறையாற்றுவது என்பதாக முடிவெடுத்து அதன்படி திருநாவுக்கரசு, ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி, எஸ்.பி.முத்துராமன் கலைப்புலி தானு, பி.வாசு, ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட 12 பிரபலங்களை உள்ளடக்கி மாநாட்டை நடத்த முடிவானது.

மாநாடு
அதற்கான அழைப்பிதழும் தயாரானது. இதில் ஒரு ரகசியம் என்னவெனில், ரஜினி இல்லாமல் ரஜினிக்காக மாநாடு என்பதாகத்தான் விளம்பரப்படுத்தப்படும். அதேசமயம் திட்டம் என்னவெனில், மாநாடு நடந்து கொண்டிருக்கும் போது இடையில் திடீரென தனது வீட்டில் இருந்து ரஜினி கிளம்பி வந்து மாநாட்டில் வருவது போலவும், மேடையில் இருப்பவர்கள் அவரை பேச வலியுறுத்துவது போலவும், அதனை ஏற்று ரஜினி பேசுவது போலவும் திட்டமிட்டிருந்தனர். இப்படி நடந்தால், மாநாடு பரபரப்பாகும், மாநாடும் ரஜினியின் பேச்சும் பேசு பொருளாகும் என்பதே திட்டம். இந்த விவரங்கள் ரகசியமாக பாதுக்காக்கப்பட்டன. இந்த நிலையில், ரஜினிக்கான ரஜினி ரசிகர்கள் நடத்தப்போகும் இந்த மாநாடு பற்றியும், அதுவும் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட அதே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி. மைதானத்தில் நடப்பது பற்றியும் ஆட்சி தலைமைக்கு தெரியவந்தது.

பிளான்
மாநாடு நடத்தினால் நடத்திக்கொள்ளட்டும் ; ரஜினி ரசிகர்கள் என்னத்தை பெரிதாக நடத்திட முடியும் என நினைத்ததால் அலட்சியாக ஆட்சி தலைமை கடந்து போனது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் கிடைத்த தகவல்கள் தான் அதிர்ச்சியடைய வைத்தன. அதாவது, மாநாடு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென மேடைக்கு ரஜினி வருகிறார் என்பதும், சிலபல அரசியல் கருத்துக்களை பேசுவார் என்றும், லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு விட்டால் முந்தைய உங்களின் பொதுக் கூட்டத்தோடு ஒப்பிட்டு பத்திரிக்களும் மீடியாக்களும் விவாதிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. இதனையடுத்தே, மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது என்பதால் இப்படி ஒரு மாநாட்டில் அவர் கலந்து கொள்வது சரியாக இருக்காது என்பதை ரஜினியின் குடும்ப மருத்துவர் மூலம் சொல்ல வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த் மருத்துவர்
அந்த டாக்டரும் ரஜினியிடமும் அவரது சகோதரரிடமும் விரிவாக எடுத்துச் சொல்லி, கூட்டம் கூடும் இடத்துக்கு நீங்கள் இன்னும் சில மாதங்களுக்கு செல்லக்கூடாது என டாக்டர் அறிவுறுத்தினார். வேறு வழியின்றி ரஜினியும் ஒப்புக்கொண்டார். மாநாட்டிற்கு ரஜினி வந்தால் தான் மாஸ் ; வராது போனால் மாநாடு பிசு பிசுத்து போகும் ; மாநாட்டும் பேசப்படாது என்றெல்லாம் யோசித்து, மாநாட்டை ரத்து செய்ய சத்யநாராயணா முடிவு செய்து மாநாட்டு ஏற்பாட்டாளரிடம் தெரிவித்து விட்டார். மேலும், ''இது தற்காலிக முடிவு தான். அப்செட்டாக வேண்டாம். கொஞ்ச நாள் கடந்த பிறகு நிச்சயம் நடத்துவோம்'' என்று சொல்லியுள்ளார். இதுதான் மாநாடு ரத்தானதற்கான பின்னணி என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications