"காவி குஷ்பு".. புதுச்சேரியில் பாஜக ஆட்சின்னா.. அப்ப ரங்கசாமி யாரு.. தர்மசங்கடமா போச்சே குமாரு..!
ராகுல் காந்தியின் பேச்சுக்கு குஷ்பு பதிலடி தந்து ட்வீட் போட்டுள்ளார்
சென்னை: பாஜகவின் குஷ்பு பதிவிட்ட ட்வீட் ஒன்று இணையவாசிகளால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.. அதேசமயம் விமர்சனத்துக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது... குஷ்பு அப்படி என்னதான் சொன்னர்?
குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பிறகு பாஜகவில் பயணித்து கொண்டிருப்பவர்.. நிறைய அரசியல் அனுபவம் உண்டு..
எந்த கருத்தையும் வெளிப்படையாகவே சொல்பவர்.. யாருக்கும் எதற்காகவும் பயப்படாதவர்.. அவர் காங்கிரஸில் இருந்தபோதுகூட, ராகுல் மீதே பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டியவரும் கூட... ராகுல் செயல்படாத தலைவர் என்பதை துணிந்து சொல்லி, கட்சியை விட்டு வெளியேறியவர்.
நேற்று ராகுல்காந்தியின் பாராளுமன்ற உரையை இந்த நாடே வியந்து பார்த்தது.. அப்படியே மலைத்து போய் உட்கார்ந்திருக்கிறார்கள் நாட்டு மக்கள்.

ராகுல் கேள்வி
அதிலும் தமிழ்நாட்டு மக்கள் பூரித்து போயிருக்கிறார்கள்.. நம் மனதின் உளக்கிடக்கைகளை, வேட்கைகளை அப்படியே பிசிறு தட்டாமல் ஒருவர் உணர்ச்சியாய் பொங்கிவிட்டாரே என்று நெகிழ்ந்து போயுள்ளனர்.. ஆனால், ராகுல் கேட்ட எந்த கேள்விக்கும் பாஜக இதுவரை பதில் சொல்லவில்லை.. இதுவரை விளக்கம் தரவில்லை.. இதுவரை ராகுல் சொன்ன விஷயங்களில் ஒன்றைகூட தவறு என்று சொல்ல முன்வரவில்லை.. இதுவரை மறுப்பும் சொல்லவில்லை.. தங்களிடம் எதற்குமே நியாயமான பதில் இல்லாத பட்சத்தில் கோபத்தை கொட்டி கொண்டிருக்கிறது.. கண்டனங்களாய் பதிவுகளை அக்கட்சியின் தலைவர்கள் வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.

ட்வீட்
அதில் ஒருவர்தான் குஷ்பு.. இன்று ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "நீங்கள் எப்போது கற்றுக்கொள்வீர்கள். தயவு செய்து உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் ராகுல் ஜி. புதுச்சேரியில் பாஜக ஆட்சிதான். தமிழ் மக்கள் எங்களை நம்பியுள்ளனர் என்றுதான் அர்த்தம். ப்ளீஸ் வளருங்கள். அதிக நேரம் பேசும் முன்பாக யோசியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றும் குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். @BJP4இந்தியா என்றும்" தெரிவித்துள்ளார் குஷ்பு.

வாக்குகள்
பாஜகவை பொறுத்தவரை எப்போதுமே புதுவிதமான அரசியலையே முன்னெடுத்து வருகிறது.. மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பு அரசியல் செய்தால், பாஜக மட்டும் தேர்தலுக்கு பிறகு அரசியல் செய்யும்.. எந்த கட்சி ஆட்சியை எட்டி பிடிக்க வாய்ப்புள்ளதோ அந்த கட்சியின் முக்கிய நபர்களை விலைக்கு வாங்குவது, பணிய வைப்பது உள்ளிட்ட சாணக்கியத்தனங்களை கையில் எடுத்து, கூட்டணியில் பங்கு கேட்கும்.. அதன்பின் அங்கு பிரதான கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும்.. இப்படித்தான் வடமாநிலங்களில் பாஜக காரியத்தை சாதித்து கொண்டு வருகிறது. அது அப்படியே புதுச்சேரி வரை வந்து நின்றுவிட்டது.

கூட்டணி
இப்போது கூட்டணியுடன் பாஜக ஆட்சியில் உள்ளது.. பாஜகவே ஒட்டுமொத்த புதுச்சேரியை ஆளவில்லை.. குஷ்பு இது தெரியாமல் பாஜக ஆட்சி என்று சொல்லி உள்ளார். இதை அவர் தெரியாமல் சொல்லியிருக்க முடியாது.. அப்படி தெரியாமல் சொல்லியிருந்தால் அது பெரிதுபடுத்த தேவையில்லை.. ஆனால், குஷ்பு போன்ற சீனியர்களுக்கு இது நிச்சயம் தெரியும்.. அப்படியென்றால், யாருடன் கூட்டணி வைத்தாலும் பாஜக தான் பிரதானம், அது பாஜக ஆளும் மாநிலமாகிவிடும் என்பதையே குஷ்பு சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.

ரங்கசாமி
இன்னும் ஓபனாக சொல்லப்போனால், ரங்கசாமியால் செயல்படவே முடியவில்லை.. என்.ஆர்.காங்கிரஸ் தன்னுடைய வீரியத்தை இழந்து கொண்டே வருகிறது.. ஒரு முதல்வராக ரங்கசாமியால் சுதந்திரமாக இயங்க முடியவில்லை.. ஒட்டுமொத்த பிரதான வேலைகளை தமிழிசை மட்டுமே இழுத்து போட்டுக் கொண்டு செய்து வருகிறார்.. ஒருவேளை புதுச்சேரியில் பாஜக ஆளுகிறது என்று குஷ்பு சொன்னதன் அர்த்தம் இதுதானா? என்பது விளங்கவில்லை. அதேசமயம், ராகுல்காந்தி புதுச்சேரியை பற்றி பேசவேயில்லை.. அவரது பேச்சும் தாக்கமும் முழுக்க முழுக்க தமிழகத்தை மையப்படுத்தியே இருந்தது.. தமிழகத்தின் வலிகளையே பிரதானப்படுத்தினாரே தவிர, புதுச்சேரியை அல்ல..
Recommended Video

குஷ்பு
குஷ்புவின் இந்த ட்வீட்டை சோஷியல்மீடியாவில் கிண்டலடித்து கொண்டிருந்தாலும், பாஜக ஆளும் புதுச்சேரி என்று குஷ்பு சொன்னதன் உள் அர்த்தம் நிறையவே இருக்கிறது. புதுச்சேரியில் தேர்தல் முடிந்ததும், பாஜக அங்கு கூட்டணியில் ஆட்சியை பிடிக்க முயன்று கொண்டிருந்த சமயம், திருமாவளவன் ஒரு பேட்டி தந்தார்.. அதில், "பக்கத்தில் இருக்கிற புதுச்சேரியின் அரசியல் நிலைமை நமக்கு ஒரு உதாரணம்.. அந்த நிலைமை நம்ம தமிழகத்துக்கும் வரக்கூடும்.. உஷாராக இருங்க" என்று சொன்னதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்?












Click it and Unblock the Notifications