17 வருட கனவு! கனிமொழிக்கு சர்ப்ரைஸ் தந்த ஸ்டாலின்! பின்னணியில் பிரம்மாண்ட பிளான்! லிஸ்டுலேயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 4வது பெரிய தனி கட்சியாக மாறி உள்ளது. இந்த தேர்தலில் ஸ்வீப் செய்த ஒரே மாநில கட்சி திமுகதான்.

kanimozhi dmk stalin lok sabha election 2024 2024 politics

இந்த நிலையில்தான் திமுக நாடாளுமன்ற குழு தலைவராகக் கனிமொழி நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திமுக மக்களவை குழு தலைவராக டிஆர் பாலு, திமுக மக்களவை குழு துணைத் தலைவராகத் தயாநிதி மாறன், திமுக மக்களவை கொறடாவாக ஆ ராசா நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்ந்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி, மக்களைவைக் குழுத் தலைவராகக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்.

கனிமொழி நியமனம் காரணம்: கனிமொழி தொடர்பான இந்த அறிவிப்பிற்கு பின் முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

1.கனிமொழி 17 வருடமாக எம்பியாக இருக்கிறார். அதிலும் இரண்டு முறை மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்தவர்களை எல்லாம் டெபாசிட் இழக்க வைத்துள்ளார்.

2. கனிமொழிக்கு உயரிய பதவி கொடுப்பது டெல்லியில் அவர் கவனம் பெற வழி வகுக்கும். இதனால் டெல்லி அரசியலில் அவர் இமேஜ் உயரும்/

3. கூட்டணி ஆட்சி இருக்கும் போது காட்சிகள் எப்படி வேண்டுமானால் மாறலாம். இப்படிப்பட்ட நேரத்தில் டெல்லியில் வலுவான குரல் தரக்கூடிய ஒருவர் தேவை.

4. கொள்கை ரீதியாக கனிமொழி உறுதியானவர். பாஜக மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்த நிலையில் கனிமொழி போல உறுதியான ஒருவர் தேவை.

5. கனிமொழி மாற்று கட்சியினரிடம் நட்பாக இருக்க கூடியவர். டெல்லியில் தமிழ்நாட்டிற்காக விஷயங்களை சாதிக்க கனிமொழி நல்ல வாய்ப்பாக இருப்பார்.

ஆ ராசா நியமனம்: மக்களைவைக் குழுத் துணைத் தலைவராகக் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி, மக்களைவை கொறடாவாகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா, எம்.பி, மாநிலங்களவைக் குழுத் தலைவராகக் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களவை கொறடாவாகத் தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி, இரு அவைகளின் பொருளாளராகக் கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி நியமிக்கப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மாற்றங்கள்: இது போக திமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

1. அதன்படி லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம். அதேபோல் வேலை பார்க்காத இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை உதயநிதி ஸ்டாலின் எடுத்து வருகிறாராம்.

2. நன்றாக பணியாற்றிய இளைஞரணி நிர்வாகிகள் லிஸ்டை வைத்து அவர்களுக்கு ப்ரமோஷன் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம். அதன்படி புதிதாக இவர்களில் சிலரை மாவட்ட செயலாளர்களாக களமிறக்க உதயநிதி ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

3. அதேபோல் அமைச்சர்களாக பணியாற்றாதவர்கள், சரியாக பணியாற்றாத மாவட்ட செயலாளர்கள் லிஸ்டையும் எடுத்துள்ளார். இந்த லிஸ்டை வைத்து அதிலும் சில மாற்றங்களை செய்ய உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+